குளிர்காலத்தின் துயர் சுமந்த கிளைகளில் கனவுகளை எழுதுகிறது சாம்பல் பறவையொன்று இனிவரும் வசந்தகாலத்தின் இலைகள் பறவையின் கனவுகளை மொழிபெயர்க்கவும் இன்னொரு பறவை சுமந்து செல்லவும் கூடும் அந்தக் கணங்களில் அந்தப் பறவையும் மரமும் என்ன பேசிக்கொள்ளும் கனவுகளை வைத்திருந்து கையளித்ததிற்கு நன்றி கூறிப் பிரிந்து செல்லுமோ கிளையின் துயர் மீது கண்ணீர் சிந்திக் கழுவிப் போகுமோ…
சித்தாந்தன் கவிதைகள்
போதையுலராப் பொழுதின் ஜந்துகள் தன் துக்கத்தை மலைகளுக்குப் பரிசளித்தவனின் நிழலில் பதுங்குகிறது வரியடர்ந்த மிருகம் காடுகள் விழித்துக் கொண்ட பிறகு நகரங்களின் மூலைமுடுக்குகளெல்லாம் பதுங்கித் திரிந்து களைத்து திரும்பியிருக்கிறது இவனிடம் தன் சொற்களுக்குள் அதை ஒளித்து வைத்திருக்குமிவன் துயில் மறந்த நோயால் அவஸ்தையுற்றான் அவனின் புத்தக் கட்டுகளுக்குளிலிருந்து அது உறுமும் பொழுதுகளில் சாபத்தைத் தன் தலையில்…
முக்கிய அறிவிப்புகள்
வல்லினம் வாசகர்களே… பறை 2015க்கான பறை இதழ் இப்போது குறிப்பிட்ட சில கடைகளில் கிடைக்கும். இம்முறை பறை ஈழ இலக்கியச் சிறப்பிதழாக மலந்துள்ளது. இதழ் வேண்டுபவர்கள் 0163194522 என்ற எண்ணில் ம.நவீனை தொடர்ப்பு கொள்ளலாம். யாழ் யாழ் இம்முறை 32 பக்கங்களில் வெளிவந்துள்ளது. 16 பக்கங்கள் ஆரம்பப்பள்ளி மற்றும் 16 பக்கங்கள் இடைநிலைப்பள்ளி என பகுக்கப்பட்டு…
கலை இலக்கிய விழா சிறப்பிதழ்
வல்லினம் ஏற்பாட்டில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் கலை இலக்கிய விழா 2.11.2014ல் மலேசியா தலைநகர் கோலாலும்பூரில் அமைந்துள்ள கிராண்ட் பசிப்பிக் தங்கும் விடுதியில் சிறப்பாக நடைபெற்று முடிந்தது. முன்னதாக வல்லினத்தின் எட்டு ஆண்டுகளின் செயல்பாடுகள் திரையில் ஒளிப்பரப்பாகி அதன் தீவிரமான செயல்பாடுகளை அரங்கத்தினருக்குப் புரிய வைத்தது. அடுத்ததாக ‘வல்லினம் விருது’ பெறப்போகும் எழுத்தாளர் அ.ரெங்கசாமியின் வாழ்வைச் சொல்லும் படக்காட்சியும் திரையில் ஒளிபரப்பானது. இவ்விரு படத்தொகுப்பையும் எழுத்தாளர் நவீன் செல்வங்கலை அவர்கள் உருவாக்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.
2007 – 2014: வல்லினம் நிகழ்வுகள் ஒரு பார்வை
அ. ரெங்கசாமி காணொளி
நிகழ்வை அறிமுகம் செய்து வைக்கும் வகையில் வல்லினம் மற்றும் பறை இதழ் ஆசிரியர் ம. நவீன் உரையாற்றினார். வல்லினம் குறித்த முன்முடிவுகளை அவர் தனது உரையில் முற்றாக மறுத்தார். வல்லினம் மொழியைக் காப்பதற்காகவோ, பெரியாரியத்தை வளர்ப்பதற்காகவோ, மார்க்ஸியத்தைப் போற்றுவதற்காக உருவாக்கப்பட்ட ஓர் இயக்கமல்ல எனக்கூறிய அவர் சிந்திக்கும் ஒரு தலைமுறையை உருவாக்கவே வல்லினம் தொடங்கப்பட்டதாகக் கூறினார். சிந்திப்பதற்கு எவையெல்லாம் தடையாக இருக்கிறது எனவும், அதை எவ்வாறு கடந்து செல்வது எனவும் அவர் தனதுரையில் குறிப்பிட்டார்.
ம. நவீன் உரை
அ. ரெங்கசாமியின் ‘சிவகங்கை தொடங்கி சிசங்காங் வரை’ நூலை மா. சண்முகசிவா வெளியீடு செய்தார். இயக்குனர் லீனா மணிமேகலை முதல் நூலைப் பெற்றுக்கொண்டார்.
நூல் வெளியீடு
தனது உரையில் ரெங்கசாமியின் அந்நூல் குறித்து சண்முகசிவா விரிவாகப் பேசினார். ஒரு சுயவரலாறு நூல் எவ்வாறு சமூகத்தை பாதிக்கிறது என்பதன் அடிப்படையில் அவர் உரை இருந்தது. தனக்கே உரிய நகைச்சுவை உணர்வுடன் மா. சண்முகசிவா அ. ரெங்கசாமியின் சுயவரலாறு நூல் குறித்து பேசினார்.
மா. சண்முகசிவா உரை
அ. ரெங்கசாமியின் ஆளுமை குறித்து பேச கெடாவிலிருந்து சுவாமி பிரம்மானந்தா சரஸ்வதி அழைக்கப்பட்டிருந்தார். ஏற்கனவே அ. ரெங்கசாமிக்கு தமது தியான மன்றம் மூலம் ‘வாழ்நாள் சாதனையாளர்’ எனும் விருது கொடுத்தவர் என்ற அடிப்படையிலும் அவரது இதர நூல்களை வாசித்தவர் என்ற முறையிலும் அ. ரெங்கசாமியின் ஆளுமை குறித்து விளக்கினார். இதற்கு முந்தைய மூத்த தலைமுறையின் தியாகத்தில் இருந்தே இன்றைய தலைமுறை மேலோங்கி செல்கிறது என்பது அவர் உரையின் சாரமாக இருந்தது.
சுவாமி பிரம்மானந்தா சரஸ்வதி உரை
நிகழ்ச்சியின் முத்தாய்ப்பாக அ. ரெங்கசாமிக்கு விருது வழங்கும் நிகழ்வு இடம்பெற்றது. வழக்கறிஞர் சி. பசுபதி அவர்கள் அ. ரெங்கசாமிக்கு விருது கோப்பை, விருது தொகையான ஐயாயிரம் ரிங்கிட்டுக்கான காலோசை, வெளியிடப்பட்ட நூலுக்கான ராயல்டி தொகை இரண்டாயிரம் என வழங்கி சிறப்பு செய்தார்.
விருது வழங்கும் நிகழ்ச்சி
நிகழ்ச்சியில் பேசிய வழக்கறிஞர் சி.பசுபதி, மாற்று சிந்தனைகள் சமூகத்துக்கு உயரிய மாற்றத்தைக் கொண்டுவர வேண்டும் என கூறினார். அதோடு, வல்லினம் ஓர் கட்டமைக்கப்பட்ட இயக்கமாக மாறுவதன் வழி நாடு முழுக்கவும் அதன் தீவிரமான மாற்று சிந்தனை பரவும் என நம்பிக்கை தெரிவித்தார்.
வழக்கறிஞர் சி. பசுபதி உரை
முதல் அங்கத்தின் நிறைவாக, விருதைப் பெற்ற எழுத்தாளர் அ.ரெங்கசாமி பேசினார். தனக்கு எவ்விதத்திலும் தொடர்பில்லாத வல்லினம் தன்னை அடையாளம் கண்டு விருது கொடுத்ததை மகிழ்ச்சியான தருணமாகப் பகிர்ந்துகொண்டார். தமிழர் எனும் நிலைப்பாட்டில் அனைவரும் ஒன்றுபட வேண்டும் என தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.
அ. ரெங்கசாமி உரை
முதல் அங்கம் ஏறக்குறைய நிறைவு பெற இரண்டாம் அங்கம் தொடங்கியது.
எழுத்தாளர் கே.பாலமுருகன் கவிஞர், இயக்குனர் லீனா மணிமேகலையை அறிமுகம் செய்து வைத்து பேசினார். அவர் கவிதை, திரைப்படம் என விரிவாக தனது ரசனை அடிப்படையில் அறிமுகம் செய்தார்.
கே. பாலமுருகன் உரை
அதன் பின்னர் இரண்டாவது அங்கத்தை கவிஞர், இயக்குனர் லீனா மணிமேகலை வழி நடத்தினார். முதலில் அவரது ஆவணப்படங்களின் தொகுப்பு ஒளிபரப்பப்பட்டது. தனது திரைப்பட முயற்சி குறித்து சுருக்கமாகப் பேசியவர், அவையினரிடமிருந்து வந்த கேள்விகளுக்கு பதில் கொடுத்தார். திரைப்படம், சமூகம், அரசியல், ஈழம் என அவர் பதில்கள் விரிவாகவும் ஆழமாகவும் இருந்தன.
லீனா மணிமேகலை உரை & கலந்துரையாடல்
மாலை 5.30க்கு அளவில் நிகழ்ச்சி நிறைவு பெற்றது.
வல்லினம் கலை, இலக்கிய விழா 6 புகைப்பட தொகுப்பு
வென்றவன் அரசன்; தோற்றவன் பயங்கரவாதி!
அரை நூற்றாண்டிற்கும் மேலாக ஒரு தொழிற்சங்கவாதியாக, சமூக செயற்பாட்டாளராக, கட்டுரையாளராக, செய்தியாளராக, களப் போராளியான ஜீவி காத்தையா கடந்த 2005 ஆண்டு வரையில் வாரத்தில் ஐந்து நாட்களில் நாளொன்றுக்கு 10,000 மீட்டர் தூரத்தை 28லிருந்து 30 நிமிடங்களுக்குள் ஓடி முடிக்கும் பயிற்சியில் திளைத்திருந்தவர். இப்போது இவர் தமது 76 ஆவது அகவை நோக்கி ஓடிக்கொண்டிருக்கிறார்! இவர்…
அ. ரெங்கசாமிக்கு மா. சண்முகசிவா கடிதம்…
அன்புக்கும் மதிப்பிற்கும் உரிய ஐயா அவர்களுக்கு… வணக்கம். தாங்கள் தங்களுடைய தந்தை மலாயா வந்தது குறித்தும் அது தொட்டு தொடரும் உங்களுடைய வாழ்க்கை அனுபவங்கள் குறித்தும் நூல் ஒன்று எழுதி வருவது அறிந்து மகிழ்ந்தேன். தங்களின் நினைவுச்சின்னம், இமயத் தியாகம், லங்காட் நதிக்கரை, முதலான நாவல்கள் எல்லாமே புனைவாக மட்டுமல்லாது அன்றைய காலத்தின் வரலாற்று பதிவுகளாகவும்…
அ.ரெங்கசாமி: வரலாற்றைப் புனைவாக்கும் கலைஞன்
ஆஸ்ட்ரோ நாவல் பரிசளிப்புப் போட்டியில்தான் அ.ரெங்கசாமியை முதன் முதலாய் பார்த்தேன். அவரது ‘லங்காட் நதிக்கரை’ நாவலுக்கு 10000 ரிங்கிட் சிறப்பு பரிசு கிடைத்திருந்தது. அதுநாள்வரை அப்படி ஓர் எழுத்தாளர் இருப்பதுகூட எனக்குத் தெரியாது. அல்லது மலேசிய இலக்கியத்தை நான் அறிந்துகொள்ள எந்த முயற்சியும் எடுக்கவில்லை. சீ.முத்துசாமியின் சிறுகதைகளை ஓரளவு வாசித்திருந்ததாலும் , நவீன இலக்கியத்தில் அவர்…
இல்லாத திசைகள் 1 – ஏமாற்றங்களும் பின் தொடரும் நம்பிக்கையும்
இன்று கம்பீரமாய் நிற்கும் ‘மலேசிய நண்பன்’ அலுவலகக் கட்டடத்திற்கு நேர் எதிர்புறத்தில் இருக்கும் இப்போதும் வெறிச்சோடிக் கிடக்கும் பேருந்து நிறுத்தத்தில்தான் 25 வருடங்களுக்கு முன் 14 வயதில் வந்திறங்கினேன். அப்போதும் அது வெறிச்சோடிதான் கிடந்தது. என்னை அழைத்து வந்த என் மாமா என்னிடம் கேட்டார் “நீ இப்போ எங்கே இருக்கேன்னு தெரியுமா?” “தெரியலை” என்றேன். அதற்கு…
2015 வரவு செலவு அறிக்கை – ஒரு சாமானியனின் பார்வை
மலேசிய மக்களுக்கு பொருளாதாரம் குறித்த சிந்தனைகளும் விழிப்புணர்வுகளும் துளிர்விட்டு கிளம்பும் மாதம் அக்டோபர் மாதம் என்பது குறிப்பிடத்தக்கது. காரணம் அக்டோபர் மாதத்தில் தான் நாட்டின் வரவு செலவு திட்ட அறிக்கை வெளியிடப்படுகிறது. ஆண்டுதோரும் அரசாங்கம் அடுத்த ஆண்டுக்கான வரவு செலவு திட்டங்களை நாடாளுமன்றத்தில் முன்வைக்கும் முதல் வாசிப்பே ‘வரவு செலவு வாசிப்பு’ என்றும் பட்ஜெட் என்றும்…
கே. பாலமுருகனின் ‘மர்ம குகையும் ஓநாய் மனிதர்களும்’ : சிறார் இலக்கியமும் அதன் தேவையும்
கடந்த 20.9.2014 அன்று சுங்கை பட்டாணி நகரின் சிந்தா சாயாங் கிளப் (Cinta Sayang Club) மண்டபத்தில் எழுத்தாளர் கே. பாலமுருகனின் ‘‘மர்ம குகையும் ஓநாய் மனிதர்களும்’ சிறுவர் நாவல் வெளியீடு கண்டது. அந்நிகழ்வு மலேசிய தமிழ் இலக்கிய பரப்பில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததும் தனிச்சிறப்பு மிக்கதாககவும் அமைந்தது. வழக்கமாக நாட்டில் வெளியிடப்படும் தமிழ் நாவல்களை…
பேய் வீடு
அண்மையில் வல்லினம் குழுவினர் ஏற்பாட்டில் ‘பேய் வீடு’ ஒன்று மெலாவாத்தி தமிழ்ப்பள்ளியில் உருவாக்கப்பட்டது. மொத்தம் 7 பேய்களை உள்ளடக்கி உருவாக்கப்பட்ட அந்த வீட்டில் நுழைந்த பலரும் அலறியடித்துக் கொண்டு வெளியேறினர். பல்வேறு சந்தர்ப்பங்களில் பலவிதமான பேய் வீடுகளுக்குள் நுழைந்துள்ள அனுபவத்தில் அதன் பலவீனங்களைக் கருத்தில் கொண்டு இந்தப் பேய் வீட்டை நண்பர்கள் மற்றும் முன்னாள் மாணவர்களின்…