காலையில் ஆறரைக்கெல்லாம் தனக்கு யோகா சொல்லித்தரவேண்டும் என்பதும் மாலையில் ஒருதரம் யோகா சொல்லித்தர வேண்டும் என்பதும் சாராவின் வாதமாக இருந்தது. காலை ஆறரை என்றதும் என் வயிற்றில் புளி மூட்டையையே கரைத்தது போல உணர்ந்தேன். அன்று மாலை சுயமாகவே யோகா செய்திருக்கிறாள் என அவர்கள் உரையாடலில் புரிந்தது. அந்நேரத்தில் நான் பார்வதிபுரத்தில் கோழிக்குழம்பு சாப்பிட்டுக்கொண்டிருந்திருக்கலாம் என ஊகித்துக்கொண்டேன். மருத்துவர் சுலபமான யோகாவை சுயமாகவே செய்யலாம் என்பதாக விளக்கப்படுத்திக்கொண்டிருந்தார். “சுயமாகச் செய்ய வேண்டியதென்றால் நான் மெக்ஸிகோவிலேயே செய்துகொள்வேனே ஏன் இங்கு வர வேண்டும்?” என்றாள். கொஞ்ச நேரம் யோசித்த மருத்துவர், என்னைப் பார்த்து “இருவரும் நாளை காலை ஆறரைக்குத் தயாராகி விடுங்கள்” எனக்கூறி அறைக்குச் சென்றார். சாரா வெற்றிக்களிப்பில் சிரித்தாள். எனக்கு ஏதோ நன்மை செய்துவிட்டதாக நினைப்பு.
Author: ம. நவீன்
மனசலாயோ 4: பிரதமன்
Creativity (படைப்பாற்றல்) மற்றும் Crafting skills (கைவினை திறன்) ஆகியவற்றுக்கான வித்தியாசம் என்ன?
இதன் வித்தியாசம் தெரியாமல்தான் நமது கல்விக்கூடங்கள் படைப்பாற்றலை வளர்ப்பதாகச் சொல்லி இயங்குகின்றன. இந்த வித்தியாசம் தெரியாமல்தான் நமது கலை இலக்கிய உலகமும் படைப்புத்திறன் எனச் சொல்லிக்கொண்டு இயங்குகிறது. பயன்படுத்தாத பாட்டில்களைக் கொண்டு சிறிய பூச்சாடிகளை உருவாக்குவது, மணிகளைக் கொண்டு ஓவியத்தை அலங்கரிப்பது, அலுமினிய டின்களில் குருவிகள் செய்வது எனப் பள்ளிகளில் போதிக்கப்படுவதையும் அதை திறமையாகச் செய்யும் மாணவனையும் படைப்பாளன் எனச் சொல்ல முடியாது. அவர்கள் கைவினைத்திறன் பெற்றவர்கள் எனலாம்.
மனசலாயோ 3: ரயிலில்
மனசலாயோ 2: செருக்கழித்தல்
இவ்வருடம் வழக்கத்தைவிட முன்னதாகவே கலை இலக்கிய விழாவுக்கான பணிகள் தொடங்கியிருந்தன. மலேசியா மட்டும் அல்லாமல் தமிழகத்திலும் கலை இலக்கிய விழாவில் வெளியீடு காணும் நூல்கள் அறிமுகமாக வேண்டும் எனும் நோக்கில் சென்னை மற்றும் மதுரையில் நூல்களை வெளியீடு செய்திருந்தோம். நூல்களைப் பற்றி பேசியவர்கள் அனைவரும் தமிழின் முக்கியப்படைப்பாளிகள். ஒரு நூலின் உள்ளடகத்தின் தரத்தை அளவிடுவதில் நிபுணத்துவம் மிக்கவர்கள். அவர்கள் வழியே நூல் கவனம் பெற வேண்டும் என திட்டமிட்டிருந்தோம்.
மனசலாயோ 1: தென்னங்கடல்
திருவனந்தபுரம் விமான நிலையத்தில் இறங்கியதும் கார் காத்திருந்தது. காரில் அமர்ந்தவுடன், பார்வதிபுரம் இங்கிருந்து பக்கமா? எனக் கேட்டேன். வாகனமோட்டி அருகில்தான் எனச் சொன்னார். ஆனால் எவ்வளவு அருகில் எனக் கொஞ்சம் தமிழ் கலந்த மலையாளத்தில் சொல்ல நெடுநேரம் முயன்றுக்கொண்டிருந்தார். சிகிச்சைக்கு கேரளா வந்ததும் வராததுமாக ஏன் தமிழகத்தில் உள்ள ஊரைப்பற்றி விசாரிக்கிறான் என அவர் யோசித்திருக்கக் கூடும். ஆயுர்வேத சிகிச்சை நிலையம் விமான நிலையத்திலிருந்து தள்ளி ஒரு மேட்டுப்பகுதியில் பசுமைக்கு நடுவில் இருந்தது. தனித்த இருமாடிக் கட்டடம். மொட்டை மாடியில் நின்று பார்த்தால் சுற்றிலும் பச்சையாகத் தெரியலாம் என நினைத்துக்கொண்டேன். இரவாகிவிட்டிருந்தது. மருத்துவர் காத்திருந்து தங்கும் வசதிகளைக் காட்டினார்.
வாசிப்பும் ரசனையும்: சு.வேணுகோபால் மற்றும் பவா செல்லதுரை கதைகளை முன்வைத்து.
சு.வேணுகோபாலின் புனைவுலகம்: இன்னொரு பசியின் – 4
18.11.2018 (ஞாயிறு) பவா செல்லதுரை மற்றும் சு.வேணுகோபால் வல்லினம் கலை இலக்கிய விழாவிற்கு சிறப்பு வருகை புரிகின்றனர். அவர்களது புனைவுகளை மலேசிய வாசகர்களுக்கு எளிமையான முறையில் அறிமுகப்படுத்தும் நோக்கில் இக்கட்டுரைத்தொடர் எழுதப்படுகிறது.
சு.வேணுகோபாலின் புனைவை உள்வாங்க கவனம் சிதறாத வாசிப்பு தேவை. பின்னர் அதற்கு முன் இருந்த வாழ்வு குறித்தான நம்பிக்கைகளையும் ஒழுக்க மதிப்பீடுகளையும் மறுபரிசீலனைக்கு உட்படுத்தும் துணிவு வேண்டும். இல்லாத பட்சத்தில் அவை வெறும் குழப்பத்தையும் ஒழுக்க அதிச்சியையும் மட்டுமே ஏற்படுத்தும். பொழுது போக்கு வாசகர்களுக்கு சு.வேணுகோபாலின் கதைகளின் நுட்பம் அகப்படுவதே இல்லை.
பவா செல்லதுரையின் புனைவுலகம்: கலையின் இறுதியாத்திரை – 3
18.11.2018 (ஞாயிறு) பவா செல்லதுரை மற்றும் சு.வேணுகோபால் வல்லினம் கலை இலக்கிய விழாவிற்கு சிறப்பு வருகை புரிகின்றனர். அவர்களது புனைவுகளை மலேசிய வாசகர்களுக்கு எளிமையான முறையில் அறிமுகப்படுத்தும் நோக்கில் இக்கட்டுரைத்தொடர் எழுதப்படுகிறது. ‘ஏழுமலை ஜமா’ சிறுகதை வாசிக்க : ஏழுமலை ஜமா
பவா செல்லதுரையின் புனைவுலகம்: மீட்கப்படும் குழந்தமை – 2
18.11.2018 (ஞாயிறு) பவா செல்லதுரை மற்றும் சு.வேணுகோபால் வல்லினம் கலை இலக்கிய விழாவிற்கு சிறப்பு வருகை புரிகின்றனர். அவர்களது புனைவுகளை மலேசிய வாசகர்களுக்கு எளிமையான முறையில் அறிமுகப்படுத்தும் நோக்கில் இக்கட்டுரைத்தொடர் எழுதப்படுகிறது. ‘சத்ரு’ சிறுகதை வாசிக்க : சத்ரு – பவா செல்லதுரை
கதைகளின் வழியே கதாசிரியனை அறிய முயற்சிப்பது சுவாரசியமானது. பவா செல்லதுரையின் கதைகளை வாசிக்கும்போது கைகளை அகல விரித்து பேரன்களைக் கொஞ்ச அழைக்கும் ஒரு தாத்தாவின் சித்திரமே மறுபடி மறுபடி தோன்றுகிறது. தாத்தாக்கள் பேரன்களை எப்போதும் வெறுப்பதில்லை. வாஞ்சையை அவர்கள் மேல் தடவி தடவி ஈரமாக்குவதைவிட வேறெதுவும் தெரியாத தாத்தாக்களின் வசைகளைக்கூட பேரன்கள் விளையாட்டுகளாக மாற்றுகின்றனர். பவா சக மனிதனை நம்பி வாழ்பவர். அவனுக்குள் இருக்கும் மனிதத்தை நம்பி வாழ்பவர். அதுவே அவரைச் சுற்றி மனிதர்களை மொய்க்க வைக்கிறது. அவர் பிறரிடம் எதிர்ப்பார்ப்பதை கொடுக்கவும் செய்கிறார்.
பவா செல்லதுரையின் புனைவுலகம்: கண்களின் விடுதலை – 1
18.11.2018 (ஞாயிறு) பவா செல்லதுரை மற்றும் சு.வேணுகோபால் வல்லினம் கலை இலக்கிய விழாவிற்கு சிறப்பு வருகை புரிகின்றனர். அவர்களது புனைவுகளை மலேசிய வாசகர்களுக்கு எளிமையான முறையில் அறிமுகப்படுத்தும் நோக்கில் இக்கட்டுரைத்தொடர் எழுதப்படுகிறது. வலி சிறுகதை வாசிக்க : வலி – பவா செல்லதுரை
ஒரு புனைவை மிகச்சிறந்தது எனச் சொல்லும்போது ஏன் அது அவ்வாறானது என நண்பர்கள் கேட்பதுண்டு. அப்புனைவு அவர்களுக்கு எந்த அனுபவத்தையும் கொடுத்திருக்காத பட்சத்தில் இந்தக் கேள்வியின் தொணி கொஞ்சம் மிரட்டலாகவே இருக்கும். உண்மையில் ஒரு கலை வடிவம் நம்மை ஈர்த்த தருணத்தை அந்தரங்கமாக நாம் அதனுடன் உரையாடிய கணத்தை இன்னொரு வாசகரிடம் அவ்வளவு எளிதாகச் சொல்லிவிட முடியுமா என நான் கேட்டுக்கொண்டதுண்டு. முடியாது. அவ்வாறு முடியுமென்றால் அவ்வுணர்வை ஒரு படைப்பாளி கட்டுரை வடிவில்கூட விளக்கமாக விளாவரியாக எழுதிவிடுவார்.

