பயணம்

சினிமாவைத் தேடி சென்னை பயணம்…15

 

அய்யனாருடன் சிவா...

பவுத்த அய்யனார் பாவண்ணனை எங்கோ விட்டுவரப்புறப்பட்டார். நானும் சிவாவும் அவருக்காகக் காத்திருந்தோம். நான் அவ்வப்போது அவர் கொடுத்துச்சென்ற புத்தகங்களைப் பார்த்துக்கொண்டிருந்தேன். வண்ணநிலவன் கவிதைகளில் அதிக நேரம் கண்கள் சென்றுக்கொண்டிருந்தது.
Continue reading

சினிமாவைத் தேடி சென்னை பயணம்…14

 

பாவண்ணனுடன்...

தி. நகர் பேருந்து நிலையத்தில் பௌத்த அய்யனாருடன் பாவண்ணனும் இருந்தார். தொடக்கத்தில் நான் பாவண்ணனை  பெயரளவில் அறிந்து வைத்திருந்த போது அவரை வாசிக்கத் தூண்டியவர் நண்பர் காளிதாஸ். கவிதை, சிறுகதை, கட்டுரைத்தொகுதிகள், குறுநாவல்கள், நாவல்கள், மொழிப்பெயர்ப்புகள், குழந்தைப்பாடல்கள் என இலக்கியத்தின் பல்வேறு தளங்களிலும் இயங்கிக் கொண்டிருப்பவர். மொழிபெயர்ப்பிற்காகச் சாகித்ய அகாதமி விருதைப் பெற்றிருப்பவர். அவரை  ‘நேற்று வாழ்ந்தவர்கள்’, ‘வேர்கள் தொலைவில் இருக்கின்றன’ என்ற இரு சிறுகதை தொகுதி மூலமாகவே அறிந்து வைத்திருந்தேன். ஒருசில கட்டுரைகளை வாசித்ததுண்டு. இத்தனைக் குறைவாக வாசிப்பின் மூலம் அறிந்த ஒருவருடன் நேரில் அமர்ந்து பேசுவது ஒருவகையான கூச்சத்தைக் கொடுத்தது.
Continue reading

சினிமாவைத் தேடி சென்னை பயணம்…13

 

'கருப்பு பிரதிகள்' நீலகண்டனுடன்...

அன்று காலை 10 மணிக்கு ஆதவன் தீட்சண்யாவை பார்க்கத் திட்டமிட்டிருந்தோம். இரவில் தாமதமாகப் படுத்தாலும் 7 மணிக்கெல்லாம் விழிப்பு வந்துவிட்டிருந்தது. சிவா உறக்கத்தில் இருந்தார். வெளியில் லீனாவும் உறங்கிக் கொண்டிருந்தார். வாயில் கதவைத்திறந்தேன். முதல் ஆளாக வாயில் கதவைத் திறப்பதென்பது எனக்குப் பிடித்தமான செயல். ஏதோ அன்றைய வாழ்வை முதலாவதாகத் தொடங்கிவைப்பது போல ஓர் எண்ணம். முகத்தில் அடிக்கும் முதல் காற்று உற்சாகப்படுத்தக்கூடியது.
Continue reading

சினிமாவைத் தேடி சென்னை பயணம்…12

 

மசாச் சீட்

வீடு திரும்பும் போது ஓர் உணவத்தில் புகுந்தோம். உணவுக்கு ஆர்டர் எடுப்பவர் சிவாவைக் கண்டதும் உற்சாகம் அடைந்தார். அவர் 10 வருடங்கள் மலேசியாவில் கோலாகட்டில் எனும் பகுதியில் பணியாற்றியவராம். முஸ்தஃபா.

சிவாவிடம் சில பெயர்களைச் சொல்லி நலம் விசாரித்தார். சிவாவும் சிலரை நினைவு கூர்ந்தார். மகிழ்ச்சியான பொழுதுகள் சம்பவங்கள் நம் மன ஆழத்தில் பதிந்து கிடக்கின்றன. அவற்றை மீட்டெடுக்கும் சந்தர்ப்பமோ அவகாசமோ எப்போதும் வாய்ப்பதில்லை. அதற்கு தோதான ஒருவர் நம்வசத்தில் இருக்கும் போது பழைய புகைப்படங்கள் போல அவற்றை எடுத்துப் பார்க்கிறோம்; சிரிக்கிறோம்.
Continue reading

சினிமாவைத் தேடி சென்னை பயணம்…11

 

எஸ்.ராமகிருஷ்ணனுடன் நான்...

நாங்கள் திரும்பவும் சாலி கிராமம் நோக்கி செல்வது எங்களுக்கே வியப்பாக இருந்தது. வந்த நாளிலிருந்து நாள் தவறாமல் நானும் சிவாவும் அங்குச் சென்று கொண்டிருந்தோம். எஸ்.ராமகிருஷ்ணன் அங்குதான் இருக்கிறார் என முன்னமே தெரிந்திருந்தால் பயண அட்டவணையை மாற்றி இருந்திருக்கலாம். ஆட்டோ தோழரிடம் கைப்பேசியைக் கொடுத்து எஸ்.ராமகிருஷ்ணனிடம் பேச விட்டேன். இடம் அவருக்குப் பிடிப்பட்டது. சரியாகக் கொண்டு சென்று நிறுத்தினார்.
Continue reading

சினிமாவைத் தேடி சென்னை பயணம்…10

சாருவுடன் நான்

சிட்டி செண்டருக்குள் புகுந்து மேல் தளம் நோக்கி சென்றோம். அங்குதான் சாரு எங்களுக்குக் காத்திருப்பதாகக் கூறினார். லிப்ட் கதவுகள் திறப்பதற்கு முன்பே கண்ணாடி கதவின் வழியாக சிவா சாருவைப் பார்த்துவிட்டிருந்தார். ‘இங்கதான் நிக்கிறார்’ என்றார்.
Continue reading

சினிமாவைத் தேடி சென்னை பயணம்…9

லீனா அன்று காலையில் பம்பாய் கிளம்பியவுடன் வீடு எங்களுக்குச் சொந்தமாகியிருந்தது. அன்று இயக்குநர் சேரனைக் காலை 10 மணிக்கு லீனா அழைக்கச் சொல்லியிருந்தார். அவரைச் சந்திப்பதற்கான ஏற்பாடு. சேரன் அலுவலகம் தி.நகரில் இருந்தது. எப்படியும் தி.நகருக்குப் போவதில் நஷ்டமில்லை என்ற படியால் புறப்பட்டோம். ஆட்டோ, சரவணன் ஸ்டோர் முன்பு நின்றது. ஹாரன் சத்தம் அதிகரித்திருந்தது.
Continue reading

சினிமாவைத் தேடி சென்னை பயணம்…8

லீனா மணிமேகலை

இரவுணவுக்கு லீனாவை எங்காவது நல்ல உணவகமாக அழைத்துச் செல்லப் பணித்தோம். லீனாவுக்கு உணவு வாங்கிதருவது எங்கள் பிரதான நோக்கம். ஆட்டோ ‘ஹாரிஸன் மீனம்’ அருகில் நின்றது. நாங்கள் சென்ற தளத்தில் சீன உணவகமும் இருந்தது. லீனா சீன உணவு சாப்பிடுகிறீர்களா என்றார். அவசரமாக மறுத்தேன். அங்கு சீன உணவை தமிழர்கள் சமைத்துக் கொண்டிருந்தனர். எங்கள் ஊரில் சீன உணவுகளைச் சீனர்களே சமைக்க உண்போம் என்றேன்.

மலேசியாவில் இப்போதெல்லாம் தாய்லாந்து உணவுகளை மலாய்க்காரர்கள் சமைப்பதும், ஜப்பானிய உணவுகளைச் சீனர்கள் சமைப்பதும் வாடிக்கையாகிவிட்டது. அவ்வாறு சமைக்கும் போது அதன் அசல் சுவையிலிருந்து மாறுபட்டதாக அவ்வுணவு அமைந்துவிடுகிறது. அவரவர் இனத்துக்கே உரிய சிறப்பாம்சம் பிற உணவு முறையில் கலந்து விடுகிறது. விளைவாக இதுதான் அவர்கள் நாட்டின் உணவோ என்ற கற்பனையில் தின்று தொலைக்க வேண்டியுள்ளது. அந்த ஆபத்து அங்கு நிகழக்கூடாது என விரும்பினேன்.
Continue reading

சினிமாவைத் தேடி சென்னை பயணம்…7

பாலுமகேந்திரா

பேசுவது , பழகுவது போலவே சிலரைப் பார்ப்பது ஒருவகை அனுபவம்தான். இயக்கு நர் பாலுமகேந்திராவைப் பார்க்க ஆவல் கூடிக்கொண்டிருந்தது. அவர் நடத்தும் சினிமாப் பட்டறை குறித்து கேள்விப்பட்டதுண்டு.  சிவாவுக்கு சினிமா கல்லுரியில் இணைந்து பயிலலாம் என திட்டங்கள் இருந்தபோது அவர் சிந்தனையில் இருந்தது பாலுமகேந்திராவின் இந்தச் சினிமா பட்டறையும்தான். ஆனால் அதன் சட்டத்திட்டங்கள் தொடர்பாக எதுவும் சரியாகத் தெரியாமல் இருந்தது. சரியாக ஐந்து மணிக்குச் சென்று விட்டோம். சிவா வழக்கம் போல ஸ்டைலாக ஒரு சிகரட்டைப் பற்ற வைத்தார். அவர் மாணவர்கள் வகுப்பு முடிந்து வெளியில் நின்றிருந்தனர். எங்கள் வருகையை இயக்குநரிடம் கூறினர். உள்ளே சென்று காத்திருக்க அனுமதி கிடைத்தது.
Continue reading

சினிமாவைத் தேடி சென்னை பயணம்…6

 

நாசருடன்...

நாசரை ‘நடிகர்’ என்பதை மீறி ஒரு கலைஞராகவே அடையாளம் கண்டுவைத்திருந்தேன்.  ‘அவதாரம்’ திரைப்படம் அவருக்குள் இருக்கின்ற கலைத்தன்மையை அடையாளம் காட்டியிருந்தது. அதை தவிர்த்து பல படங்களில் அவர் ஏற்கும் பாத்திரங்களை ரசிகனின் முன் வைக்கும் விதத்தில் அவர் நடிப்பாற்றல் மிளிர்ந்திருக்கிறது. சிங்கை இளங்கோவன் நாசர் பற்றி பேசும்போதெல்லாம் ‘தமிழ்த்திரையுலகில் ஒரு வித்தியாசமான கலைஞன்’ எனப் பாராட்டுவார். அவர்களுக்குள் நட்பு இருந்தது. இளங்கோவன் ஒருவரை அப்படிச் சொல்வது சாதாரணம் அல்ல. அவர் கலையையும் கலைஞனையும் எவ்வித சமரசமும் இன்றி அணுகக்கூடியவர்.
Continue reading