‘வல்லினம் விமர்சனப் போட்டி’ நடத்த வேண்டும் எனத் தோன்றியபோது வெற்றியாளர்களை ஊட்டி முகாமில் பங்கெடுக்கச் செய்வதே தகுந்த பரிசாக இருக்கும் என முடிவெடுத்தேன். ஊட்டி முகாம் வாசிப்பு முறையை நெறிப்படுத்தக்கூடியது. ஒரு படைப்பை அணுகும் விதத்தை போதிக்கக்கூடியது. ஒரு படைப்பாளிக்கு அதுவே சரியான பரிசாக இருக்க முடியும். அண்ணன் அரங்கசாமியிடம் கேட்டபோது உடனடியாகச் சம்மதித்தார். நிகழ்ச்சி முடிந்து வெற்றியாளர்கள் கூடுதலாக இரு நாட்கள் தங்கினாலும் விஷ்ணுபுரம் குழு அப்பொறுப்பை ஏற்கும்படி திட்டமிடலாம் என்றார். கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கேரளத்தில் இருந்தபடியே போட்டிக்கான வரையறைகளை நண்பர்களுடன் தீர்மானித்தேன்.
பயணம்
மீண்டும் கேரளம்
இன்றுதான் கேரளாவில் இருந்து அதிகாலை 6 மணிக்கு வந்திறங்கினேன். வீட்டுக்கு வந்து சேர்ந்து மலேசியனாக மாறியபோது காலை மணி 9. உடனே கொச்சியில் உள்ள Globe Trotters Inn விடுதியின் மீது புகார் கடிதம் அனுப்பிவிட்டுதான் இந்தக் கட்டுரையை எழுதுகிறேன். ஏன் புகார் கடிதம் எனத் தெரிந்துகொள்ள நினைப்பவர்கள் தொடர்ந்து படிக்கலாம். இவனுக்கு இதே வேலை எனச் சலித்துக்கொள்பவர்கள் ஆகக் கீழே உள்ள தகவல்களை மட்டும் பெற்றுக்கொண்டு சிறப்பான முறையில் கேரளா சென்று வரலாம்.
மனசலாயோ 12: மின்னல் பொழுதே தூரம்
கொச்சியில் ஒரு இரவு மட்டும் தங்கிவிட்டு மறுநாள் திருவனந்தபுரம் விமான நிலையம் சென்று மலேசியா திரும்பலாம் என்றே திட்டம். ஆனால் கொச்சிக்கு ஏற்றிச்சென்ற காரோட்டி சொல்லியே அங்கும் ஒரு விமான நிலையம் இருப்பதும் அங்கிருந்தும் மலிண்டோ விமானம் கோலாலம்பூர் வருவதும் புத்திக்கு உரைத்தது. அது முழுக்க முழுக்க சூரிய சக்தியில் இயங்கும் உலகின் முதல் விமான நிலையம். ஒரு கணினி மையத்தில் இறங்கி டிக்கெட்டை திருவனந்தபுரத்திலிருந்து கொச்சினுக்கு மாற்றினேன். ஆனால் பணத்தை தொலைபேசியின் வழியே அழைத்து பல விபரங்களை உறுதி செய்தபின்னரே செலுத்த முடியும்.
மனசலாயோ 11: ஞாயிறு போற்றுதும்
மறுநாள் மந்தமாக விடிந்தது. திகதி, நேரம் மறந்திருந்தேன். மெதுவாக எழுந்து வெளியே சென்ற போது படகுகள் காயலில் மிதந்துகொண்டிருந்தன. பிள்ளைகள் புத்தகப் பைகளுடன் படகில் சென்றுகொண்டிருந்தனர். கொண்டு வந்திருந்த டீ சட்டைகளை துவைக்கவில்லை என்பதால் புதிதாக சில வாங்கியிருந்தேன். குளித்துவிட்டு அணிந்தபோது உற்சாகம் தொற்றிக்கொண்டது. காற்றில் இன்னும் அதிகாலையின் குளிர்ச்சி இருந்தது. பிளாக்கி (நாய்க்குட்டி) யாரோ புதியவர் ஒருவரிடம் கொஞ்சிக்கொண்டிருந்தது. என்னைப் பார்த்ததும் “தொ வரேன்” என்பதுபோல வாலை ஆட்டியது.
மனசலாயோ 10: தாயார் பாதம்
சுற்றுலாவில் இரண்டு வகை உண்டு. முதலாவது மனமகிழ்ச்சிக்காகச் சுற்றுலா செல்வது. மற்றது அனுபவத்திற்காகச் செல்வது. ஒன்று உயர்ந்தது மற்றது தாழ்ந்தது என்றெல்லாம் இல்லை. வட்டமிடும் கருடனை இங்கிருந்து ரசிப்பது ஒரு ரகம் என்றால் அதனுடன் சேர்ந்து அது என்னவாக இருந்து உலகைப் பார்க்கிறது என அறிய முயல்வது மற்றுமொரு வகை. நான் தனியாகச் செல்கையில் இரண்டாவது ரகத்தையே தேர்ந்தெடுக்கிறேன். அதில் ஒரு வசதி உண்டு. எந்த வசதியின்மை ஏற்பட்டாலும் யாரிடமிருந்தும் முகச்சுளிப்புடன் அசூசையின் குரல் ஒலிக்காது. அவ்வகை முணுமுணுப்பு மொத்தப் பயணத்தையும் கெடுக்கும் ஒலி. அதைவிடக் கொடுமை சகித்துக்கொள்வதாகக் காட்டப்படும் சாந்தமுகம். பயணம் என்பது பயணம்தான். அங்கு எதுவும் நடக்கும். அப்படி நடக்கும் ஒவ்வொன்றுமே பயணம் கொடுக்கும் அனுபவம்தான். புகார்கள் இன்றி நிகழ்வதை கவனிப்பதே பயணம் நம்முள் உருவாக்கும் இன்னொரு மாயவழியை அனுமதிக்கும் சூத்திரம்.
மனசலாயோ 9: புள்ளினங்காள்
பதினான்காவது நாள் சிகிச்சையை நானே முடித்துக்கொண்டேன். ஆனால் விமான டிக்கெட்டை திகதி மாற்ற அதிக தொகை வந்ததால் கேரளாவில் சில இடங்களைப் பார்க்கலாம் என முடிவு செய்தேன். ஹரி ‘வலி இல்லையா?’ என பலமுறை கேட்டார். கழுத்து நரம்புகள் சத்தம் போடுவதைச் சொல்லவில்லை. சூட்டை அதிகமாக்கி ஒத்தடம் கொடுக்கிறேன் என மீண்டும் கழுத்தைக் கொப்புளிக்க வைத்துவிடக்கூடும். டாக்டர் தனது அன்பின் நிமித்தமாக 2.0 திரைப்படத்துக்கு அழைத்துச் சென்றார். அதற்கு அவர் கொதிக்கும் எண்ணெயிலேயே தள்ளிவிட்டிருக்கலாம். எப்போது திரையரங்கைவிட்டு வெளிவருவேன் என இருந்தது. ஆனால் ‘புள்ளினங்காள்’ பாடல் காட்சி கவர்ந்தது. அதுவே அப்படத்தின் ஆன்மா. ஆழப்புழா செல்லலாம் எனத் திட்டமிட்டிருந்த எனது முடிவைப் புள்ளினங்காள் மாற்றியது. கோட்டையம் செல்லலாம் என முடிவெடுத்தேன். கோட்டையத்தில்தான் குமரகம் எனும் சுற்றுலா கிராமமும் பிரசித்திபெற்ற பறவைகள் சரணாலயமும் இருக்கிறது.
மனசலாயோ 8: திருமுகப்பில்
ஏறக்குறைய பத்தாவது நாளில் நான் மருத்துவரிடம் ஊருக்குப் புறப்படப்போகும் மனநிலையைச் சொன்னேன். கழுத்து வலி குணமாகியுள்ளதையும் நரம்புகளின் சத்தம் மட்டும் மிச்சம் இருப்பதையும் கூறினேன். டாக்டர் இன்னும் முடிக்கவேண்டிய சில வைத்தியங்களைத் துரிதப்படுத்தலாம் என்றார். நான் ஊர் திரும்புவதற்குள் எனது ஆசை ஒன்றைக் கூறினேன். அது பத்மநாப சுவாமி கோயில் செல்வது. 2011-இல் அதன் பாதாள அறைகளில் கிடைத்த கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பிலான தங்க, வைர நகைகள் மூலமே எனக்கு இக்கோயிலின் பெயர் அறிமுகம்.
மனசலாயோ 7: தன்செயலெண்ணிய தவிப்பு
21 நாட்கள் சிகிச்சைக்காக ஒதுக்கியிருந்தேன். முதல் வாரம் கடந்ததுமே கழுத்து வலி குறையத்தொடங்கியது. எனவே 14வது நாளுடன் புறப்பட்டுவிடலாம் எனத்தோன்றிக்கொண்டே இருந்தது.
சிகிச்சை காலத்தில் காலை 6.30 மணிக்கு எழ வேண்டும். சில ஆயுர்வேத மருந்துகளை உண்டுவிட்டு, ஒன்றரை மணி நேரம் எளிய யோகா செய்வேன். ஏழு நாட்கள் கடந்தபோது ஜிம்னாஸ்டிக் நாடாபோல உடல் சிக்கல் இல்லாத வளைவுகளுக்கு ஒத்துழைத்தது. 30 நிமிட ஓய்வுக்குப்பின் கசாயம் கொடுப்பார்கள். அதன் கசப்பு அடங்கியதும் காலை பசியாறை. 9.30க்கு மசாஜ் தொடங்கி 11.30 க்கு முடியும்.
மனசலாயோ 6: சாரா
பெரியதும் சிறியதுமாக 12 யானைகள் உள்ள சரணாலயம் அது. இன்னும் அதிகம் இருக்கலாம். நாங்கள் அவ்வளவுதான் பார்த்தோம். சரியாக நான்கு மணிக்கு அவற்றை நெய்யாறு அணையில் குளிப்பாட்டுகிறார்கள். யானைப்பாகன் அதன் மேலேறி ஓட்டி வரும் காட்சி அபாரமானது. ஒரு மேட்டு நிலத்திலிருந்து சரசரவென இறங்கி வந்துவிடுகிறது யானை. என்னை மிக அருகாமையில் அந்த யானை கடந்து சென்றது. நான் நகரவில்லை. மிக அருகில் அதன் தோல் சுருக்கங்களைப் பார்க்க ஆவல் மிகுந்தது. ஹரி அது பெண் யானையென்றார்.
மனசலாயோ 5: சேமமுற வேண்டுமெனில்
காலையில் ஆறரைக்கெல்லாம் தனக்கு யோகா சொல்லித்தரவேண்டும் என்பதும் மாலையில் ஒருதரம் யோகா சொல்லித்தர வேண்டும் என்பதும் சாராவின் வாதமாக இருந்தது. காலை ஆறரை என்றதும் என் வயிற்றில் புளி மூட்டையையே கரைத்தது போல உணர்ந்தேன். அன்று மாலை சுயமாகவே யோகா செய்திருக்கிறாள் என அவர்கள் உரையாடலில் புரிந்தது. அந்நேரத்தில் நான் பார்வதிபுரத்தில் கோழிக்குழம்பு சாப்பிட்டுக்கொண்டிருந்திருக்கலாம் என ஊகித்துக்கொண்டேன். மருத்துவர் சுலபமான யோகாவை சுயமாகவே செய்யலாம் என்பதாக விளக்கப்படுத்திக்கொண்டிருந்தார். “சுயமாகச் செய்ய வேண்டியதென்றால் நான் மெக்ஸிகோவிலேயே செய்துகொள்வேனே ஏன் இங்கு வர வேண்டும்?” என்றாள். கொஞ்ச நேரம் யோசித்த மருத்துவர், என்னைப் பார்த்து “இருவரும் நாளை காலை ஆறரைக்குத் தயாராகி விடுங்கள்” எனக்கூறி அறைக்குச் சென்றார். சாரா வெற்றிக்களிப்பில் சிரித்தாள். எனக்கு ஏதோ நன்மை செய்துவிட்டதாக நினைப்பு.