ஜோக்ஜாவில் சோம்பேறிகள் இல்லை என்றால் நீங்கள் நம்புவீர்களா? வேற வழி ! ஈராயிரம் ரிங்கிட்டுக்கு மேல் செலவு செய்து ஒருவன் போய்வந்து சொன்னாமல் நம்பாமல் மறுக்க முடியுமா என்ன? உண்மையில் அது உழைப்பவர்களின் தேசம்தான். ஜோக்ஜாவின் நான்கு திசைகளுக்கும் சென்று கண்டதில் என்னால் இதை உறுதியாகவே நம்ப முடிகிறது. உடல் உழைப்புத் தொழிலாளர்கள் எங்குமே காணக்கிடைக்கிறார்கள். பெரும்பாலான விவசாயிகள் இன்னமும் எருமையைக் கொண்டே உழுகிறார்கள். தேயிலைத் தோட்டங்கள் மற்றும் விவசாய நிலங்களில் பாரம் சுமந்து செல்கிறார்கள். மலேசியாவில் இதையெல்லாம் 10 வருடங்களுக்கு முன் பார்த்திருக்கலாம். விவசாயமெல்லாம் அழிந்து இன்று மலேசியத் தொழிற்பேட்டைகளில் புகை மூட்டங்களுக்கு மத்தியில் வேறு விதமான உழைப்பு.
பயணம்
ஜோக்ஜா : எரிமலையின் ஊடல் தேசம் – 8
அன்று காலை மிக உற்சாகமான பொழுது. நாங்கள் எரிமலையைப் பார்க்கப் புறப்பட்டோம்.
இதற்கு முன்பு பாலித்தீவில் எரிமலையைக் கண்டதுண்டு. அது இறந்துபோன எரிமலை. அதன் அருகே உணவகங்களை அமைத்து சாப்பிட வைத்தார்கள். இறந்து போன புலியின் பக்கத்தில் அமர்ந்திருந்தால் எப்படி சுவாரசியம் இல்லாமல் இருக்குமோ அப்படி இருந்தது அந்தச் சூழல். ஆனால் இது அப்படியல்ல. இன்னமும் உயிருடன் உறுமும் புலி. மத்திய ஜாவா பகுதியில் உள்ள இந்த மெராபி எரிமலை 2010-ஆம் ஆண்டு வெடித்ததில் 350-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர் என்பதை நினைவில் வைத்துக்கொண்டுதான் எங்கள் பயணத்தைத் தொடங்கினோம்.
ஜோக்ஜா : எரிமலையின் ஊடல் தேசம் – 7
நான் ஓர் உணவுப்பிரியன். உணவில் எனக்கு தயவுதாட்சணியம் எல்லாம் இல்லை. மதத்தின் பெயராலும் கடவுளின் பெயராலும் தடை செய்யப்படும் உணவுகளை வயிற்றினுள் இறக்குவதுதான் முதல் அறம். டாக்டர் சண்முகசிவா என் உணவு பழக்கத்தை அடிக்கடிக் கிண்டல் செய்வார். நான் சைவ உணவு உண்பவனாக மாற வேண்டும் என்பது அவர் ஆவல். எனக்கோ சட்டியில் வேக வைத்த ஆட்டைக்கூட ஒரு புலிபோல சாப்பிட வேண்டும் என்பதே விருப்பம்.
ஜோக்ஜா : எரிமலையின் ஊடல் தேசம் – 6
மகாயனம் பற்றி கூறுவதகாச் சொல்லியிருந்தேன் அல்லவா? அதற்கு முன் அடிப்படையான சில விடயங்களைப் புரிந்துகொள்ள வேண்டும். புத்தர் தனக்கு வாரிசு எவரையும் நியமிக்கவில்லை. எனவே அவர் மரணத்துக்குப் பின் மத்திய அதிகாரக் குழு எதுவும் இல்லை என்பதால் இருவகையான குழுக்கள் உருவாயின. ஒரு குழுவினர் ஸ்தவிரர் . மற்றோர் குழு மகா சங்கிகள். இந்த இரு குழுவும் காலப்போக்கில் பல சிறு குழுக்களாகச் சிதறுண்டன. ஸ்தவிரர் பிரிவில் தோன்றிய ‘தெரவாத’த்தைத் தவிர மற்றவை அழிந்தன. அழிந்த இந்த இயக்கங்கள் தங்கள் மரபை விட்டுச்சென்றன. இந்தப் புதிய இயக்கம் ‘மகாயனம்’ என அழைக்கப்பட்டது. மகாயனம் என்றால் மாபெரும் வாகனம் என்று பொருள்.
ஜோக்ஜா : எரிமலையின் ஊடல் தேசம் – 5
Borobudur ஜாவகத் தீவின் நடுப்பகுதியில் அமைந்துள்ள மகாயான பௌத்த நினைவுச் சின்னம் ஆகும். இது ஒன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்தது என்று சொல்லப்படுகிறது. மகாயானம் என்பது என்னவென்று பிறகு விளக்குகிறேன். அதற்கு முன் இந்த பௌத்த சின்னத்தின் பூகோல அமைப்பைப் பற்றி முதலில் சொல்ல வேண்டியுள்ளது.
ஜோக்ஜா : எரிமலையின் ஊடல் தேசம் – 4
மறுநாள் Borobudur போகப்போகும் ஆர்வம் முதல் நாளே தொற்றிக்கொண்டது. Borobudur க்குச் செல்ல இருவகையான திட்டங்கள் இருந்தன. முதலாவதும் காலையில் ஒன்பது மணிக்குப் புறப்படுவது. இரண்டாவது, அதிகாலை நான்கு மணிக்கெல்லாம் புறப்பட்டுச் செல்வது. அதிகாலையில் செல்வதில் உள்ள விசேடம் சூரிய உதயத்தை மலையிலிருந்து காணலாம். நான், சந்துரு , யோகி மற்றும் மணிமொழி ஏற்கனவே மலையிலிருந்து சூரிய உதயத்தைப் பார்க்கும் ஆர்வத்தில் ‘புரோகா’வில் இருக்கும் மலையில் ஏறியதுண்டு. காஜாங்கில் இருக்கும் அந்த மலையில் அதிகாலை 5 மணிக்கெல்லாம் ஏறிச் சென்றோம். செங்குத்தான சிக்கலான பாதையில் ஏறி மலையை அடைந்தபோது காலை மணி ஏழாகி இருந்தது.
ஜோக்ஜா : எரிமலையின் ஊடல் தேசம் – 3
இந்து மதத்தின் மாதரம் வம்சத்தின் சின்னமாக இன்றும் மத்திய ஜாவாவில் இருக்கும் பழங்கோயில்தான் Prambanan. கோயிலை நெருங்கிய போது நேற்றிருந்த ஆச்சரியம் கொஞ்சமும் குறைந்தபாடில்லை. பிரமம் எனும் சமஸ்கிருத சொல் ஜாவாவில் ஏற்றுக்கொள்ளப்பட்டு அக்கோயில் அமைந்துள்ள இடம் பிரம்பனன் எனும் பெயர் பெற்று இடத்தின் பெயரையே கோயிலுக்கும் இட்டுள்ளனர்.
ஜோக்ஜா : எரிமலையின் ஊடல் தேசம் – 2
மறுநாள் முதல் வேளையாக ‘Candi Sambisari’ யை நோக்கி பயணமானோம். இது 12ஆம் நூற்றாண்டு காலத்திய சிவன் கோவில். கிழக்கு ஜோக்ஜா பக்கம் அமைந்துள்ள இந்த கோவிலை முதன் முதலாய் 1986ல் கண்டுப்பிடித்தவர் ஒரு விவசாயி. விவசாயப்பணியின் போது தமது மண்வெட்டியில் ஏதோ இடிபட அவ்வூர் தலைவரிடம் புகார் செய்துள்ளார். அதன் பின்னரே அகழ்வாராய்ச்சி மூலமாக இங்குள்ள கோயிலை மீட்டெடுத்திருக்கின்றனர்.
ஜோக்ஜா : எரிமலையின் ஊடல் தேசம் – 1
பயணங்கள் எனக்குப் பிடித்தமானவை. குறிப்பாக வெளிநாட்டுப் பயணங்கள். ஒரு நாட்டின் எல்லையைக் கடந்து செல்கிறோம் என்ற கிளுகிளுப்பையெல்லாம் கடந்து பயணங்கள் வெவ்வேறு விடயங்களை நமக்குக் கற்றுக்கொடுத்துக்கொண்டே இருக்கின்றன. பல உலக நாடுகளைச் சுற்றிவரும் நபர்களை நான் சந்தித்ததுண்டு. ஓர் அந்நிய நாட்டில் காலடி எடுத்து வைத்த உற்சாகம் மட்டுமே அவர்களிடம் இருக்கும். வழக்கமான சுற்றுப்பயணத்தளங்கள், வழக்கமான ஆச்சரியங்கள், வழக்கமான தகவல்களைத் தவிர்த்து அவர்களிடம் பகிர்வதற்கு வேறொன்றும் இருப்பதில்லை.
கோபாலு…கோ…கோபாலு… (பூலாவ் பெசாரில்)
பூலாவ் பெசார் (Pulau Besar) குறித்த துல்லியமான விளக்கங்களை நான் கூறுவதைவிட அண்ணன் ‘விக்கி’ இன்னும் சிறப்பாகக் கூறுவார். அண்ணன் விக்கி என நான் இங்குச் சொல்வது ‘விக்கிபீடியாவைதான்’. மலாக்காவிலிருந்து (Jeti Anjung Batu)ஓர் இயந்திர படகு சேவையில் பயணம் செய்தால் 15 நிமிடத்தில் பூலாவ் பெசார். நுழைந்தவுடனேயே மூடுந்து (Van) சேவை உண்டு. அவற்றுக்குக் கதவுகள் இருக்காது. மேடுபள்ளமான பாதையில் உருளும் அதை நாம்தான் கவனமாகப் பிடித்துக்கொள்ள வேண்டும். நேராக மூடுந்து நம்மை Syarifah Rodziah கல்லறை முன் நிறுத்தும். கொஞ்சம் வேகமாக பிரேக் பிடித்தால் கதவு இல்லாத மூடுந்திலிருந்து குபீர் என வெளியே வந்து விழுந்து சமாதி பக்கத்தில் படுத்துக்கொள்ளும் சிறப்பு வசதி உண்டு.