கடிதம்/எதிர்வினை

சியர்ஸ்: கடிதங்கள் 1

சியர்ஸ் சிறுகதை

சியர்ஸ் வாசித்தேன். மிகக் கச்சிதமாக சிறுகதை வடிவம் கை கூடி வந்த கதை. அந்தக் கனவில் வரும் முகம் ஒரு புகைப் படம் என அவிழும் இடம் துணுக்குற வைத்தது. விவரிப்பின் ஊடே ஒரு கேமராவின் நோக்கில் பர்மாவை காட்சிப்படுத்துவது ஒரு அபாரமான யுக்தி. இது craft மேம்பட்டு creation னை உரசும் இடம். புகைப் படத்தையும் ஒரு சொல்லையும் வைத்துக் கொண்டு துவங்கும் மூர்த்தியின் பர்மா பயணம் ஒரு துப்பறியும் கதை போல வளர்ந்தது.

Continue reading

பேய்ச்சி: காலம் கடந்து வாழ்வாள் – ப.விஜயலெட்சுமி

எழுத்துத் துறையில் இதுகாறும் நவீன் எனும் எழுத்தாளரின் பல முகங்களைக் கண்ட நான், ‘பேய்ச்சி’ நாவலின் வழி வேறுபட்டு காண்கிறேன். எழுத்தாளரின் புதிய பரிணாமத்தை என்னால் 283 பக்கங்களைக் கொண்ட பேய்ச்சியின் மூலம் காண இயல்கிறது. எப்பொழுது, இந்நாவலைக் கையில் ஏந்தினோம் என, எண்ணி பார்ப்பதற்குள் இதன் இறுதிப் பக்கத்தைக் கடந்து விட்டேன்.

Continue reading

உச்சை: கடிதங்கள் (4)

சிறுகதை: உச்சை

பிரிட்டிஷ் ஆட்சியின் கீழ் இருந்த மலேசியாவின் ரப்பர் தோட்டத்திற்கு ஒரு குதிரை வந்து சேர்வதும் அதன் பின் நிகழும் சம்பவங்களுமே கதை.

முத்தண்ணன் தீண்டத்தகாத ஜாதியை சேர்ந்தவன், மிக இள வயதிலேயே அனாதை யானவன், குதிரை மேல் கொண்ட பித்தின் காரணமாக, கிராமத்தில் கோவேறு கழுதையை குதிரை என்று நம்பி அது குட்டி போடும் தனக்கு ஒரு குதிரை கிடைக்கும் என்ற ஆசையில் ஆண்டுக்கணக்கில் கடுமையாக உழைக்கிறான்,அது இறந்துவிடுகிறது அவன் கையாலேயே அடக்கம் செய்துவிட்டு, ரப்பர் தோட்ட வேலைக்கு வந்து சேர்கிறான்.

Continue reading

உச்சை: கடிதங்கள் (3)

சிறுகதை: உச்சை

இந்திரனின் வாகனமான உச்சைசரவஸ் தொன்மத்தில் அதன் மேல் யாரமர்ந்தாலும் அவரே இந்திரன் எனக் கொள்ளப்படும். அத்தொன்மத்தை ஆட்சி அதிகாரத்துடன் இணைத்து புனைந்திருப்பது ஒரு தொன்மம் அரசியல் என புது வித வாசிப்பனுபவத்தை உருவாக்குகிறது. இந்திரனால் தன் உச்சைசர்வஸில் யாரையும் அனுமதிக்க முடியாதது போலவே துரையாலும் முத்தண்ணனிடம் அதனை குடுக்க இயலவில்லை ஆனால் அதனை விட்டுச் செல்லும் தருணத்திலும் அவரால் கொல்லவும் இயலவில்லை.

Continue reading

உச்சை: கடிதங்கள் (2)

சிறுகதை: உச்சை

நேற்று நீலகண்டம் குறித்து திரு. காளி பிரசாத் பேசியதை கேட்டேன். அதில் நஞ்சிற்கும் அமுதத்திற்கும் இடையே தோன்றிய சில உயிர்களை பற்றி கூறினார். இன்று தான் தெரிந்து கொண்டேன் உச்சை சிரவஸ் என்ற வெள்ளை குதிரையும் சமுத்திர மந்தனத்தின் போது பாற்கடலில் இருந்து தோன்றியது என.
பந்தய குதிரைகள் செயல்பட இயலாத நிலை வரும் போது அவை சுட்டு கொல்லப்படுவதே வழக்கம் என்று கேள்விபட்டிருக்கிறேன். தகுதிக்கு மீறியதாக தோன்றும் உறவுமுறைகள் ஏற்படுவதை தடுக்க செய்யப்படுவதாக அறியப்படும் கவுரவ / ஆணவக்கொலைகள் நினைவிற்கு வந்தது.

Continue reading

உச்சை: கடிதங்கள் (1)

சிறுகதை: உச்சை

அண்ணா, வாசித்தேன். நல்ல மொழிநடை. வாசிபின்பம் அமைந்த கதை. ஆனால் கதையின் மைய முடிச்சு வலிமையாக உருவாகி வர வில்லை. புராணகதை  அதில் ஒன்றினை மாற்றி அமைக்கும் ஆளுமை. அது மிஸ்டிக் உரு கொண்டு மண்ணில் இறங்கி வரலாற்று தருணம் ஒன்றினை மாற்றி அமைக்கும் இந்த தொடர் பின்னல் வலிமையாக உருவாகி இல்லை. காரணம் புராண கதையில்  அந்தக் குதிரைக்கு எந்த role ம் இல்லை. கத்ரு அவள் பொறாமை மற்றும் அவள் ஏவும் பாம்புகள் சதி இவைதான் அங்கே வினையாற்றிக் கொண்டிருக்கிறது.

Continue reading

பேய்ச்சி: தமிழ்ப்பிரபா

ஒரு நல்ல நாவலுக்குள் நுழைந்து விட்டோம் என்கிற உணர்வென்பது தூரத்து அருவியின் சலசலப்பு ஏற்படுத்தும் பரவசத்திற்கு ஒப்பானது. ம.நவீன் எழுதிய ‘பேய்ச்சி’ என்கிற இந்நாவல் படிக்கத் துவங்கிய முதல் சில பக்கங்களிலேயே அவ்வுணர்வை எனக்களித்தது.

Continue reading

கழுகு: கடிதம்

கழுகு சிறுகதை

மிஸ்டிக் ஆன கதை.

ப்ரமாதம்.

கழுகாக தோற்றம் தரும் அமிர்தலிங்கத்தில் துவங்கி…பிணங்களை உண்ண கழுகு போல காத்திருக்கும் நிலைக்கு
சிவா வருவது (அல்லது வரப்போவது) வரை…

Continue reading

பேய்ச்சி ஒரு வாசிப்பு – ‘மகிழம்பூ’ கலைசேகர்

வழக்கமாக நவீனின் படைப்புகள் என்றாலே வாசிக்க தொடங்கிவிட்டால் முடிக்கும்வரை வேறெதிலும் ஆர்வம் திரும்பாது. ஆனால் பேய்ச்சியை பல இடங்களில் நிறுத்தி எடுத்து வைக்க நேர்ந்தது. மீண்டும் வாசிப்பை தொடர சற்று கால அவகாசமும் தேவையாக இருந்தது எனக்கு.
ஒருவேளை நாவலில் இடம்பெற்ற சில காட்சியமைப்புகளின் சாயல்களை முன்னமே அவர் படைப்புகளில் வாசித்துள்ளது காரணமாக இருக்கலாம். அது ஏற்கனவே எனக்கு அறிமுகமான ஒரு நிலத்தை மீண்டும் வேறொரு கோணத்தில் இருந்து அறிமுகம் செய்வதால் உண்டாகும் ‘பழகிவிட்ட’ மனநிலையாகவும் இருக்கலாம்.

Continue reading

பேய்ச்சி: வாசிப்பனுபவம் (சிவமணியன்)

மதுரை அருகே திருப்புவனத்தில், வைகையின் வடகரையில் அமைந்திருக்கும் மடப்புரம் காளியம்மன் கோவில், சிறு வயதில் ஒரு சிலமுறை சென்று வழிபட்ட இடம். வெட்டவெளியில் வெள்ளை குதிரையின் உயர்ந்த முன்பாதங்களுக்கு கீழ் பூதங்களுக்கிடையில் உக்கிர தோற்றம் கொண்ட துடியான தெய்வம் காளி. அங்கு செல்லும் வாய்ப்பினை ஏதாவது காரணம் சொல்லி தவிர்க்கும் நான், ரிஷிவர்தன் பிறப்பதற்கு நேர்ந்திருந்த வேண்டுதலின் கட்டாயத்தால் 20 வருடம் கழித்து மீண்டும் சென்றிருந்தேன். தமிழக அரசின் இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட்டடிருந்தது. புதியதாக சுற்று மதில்களும், கோயில் முற்றத்தில் செயற்கை கூரையும் அந்த சூழலின் முன்பிருந்த வெயிலின் தீவிரத்தினை குறைத்திருந்தன. ஆடு கோழி பலி கொடுப்பதற்கு தடை விதிக்கப்பட்டிருந்ததால், . முன்பு என் நினைவு நாசியில் வியாபித்திருந்த குருதிவாடை அப்போது இல்லை.

Continue reading