எழுத்தாளர் நவீன் அவர்களுக்கு வணக்கம், நல்ல படைப்புகளை வாசிக்கும்போது நானுமே என்னை நல்ல வாசகனாக நினைத்துக்கொள்ளுமபடியான ஒரு உணர்வு என்னுள் ஏற்படுகிறது. அதன் மீதான புரிதல் நமக்குள் ஒரே இடத்தில் நிலையாய் நின்று விடுவதில்லை. அது ஒரு கொடியைப் போல படர்ந்து பரவிக் கொண்டே செல்லும். அப்படி ஒரு ஆழமான புரிதல் நம்மில் நின்று வளர்ந்து கொண்டே இருக்கும். அப்படி ஒரு படைப்பாகத்தான் உங்களின் இந்த பயணக் கட்டுரையை நான் பார்க்கிறேன். பொதுவாக நான் யாருடைய படைப்புகளையும் வாசித்து விமர்சித்ததும், கருத்துரைத்ததும் இல்லை. காரணம் அந்த அளவிற்கு நான் ஒரு தீவிர வாசகரல்ல.
கடிதம்/எதிர்வினை
மனசலாயோ : கடிதங்கள் 1
படைப்பாளி வாழ்வின் அனுபவத்திலிருந்து அரூபமாகத் திரண்டு உருவெடுக்கும் தான் பெற்ற தனக்கான தனி உண்மையை/ கேள்வியை/ சந்தேகத்தை சத்தம், ஒளி, வண்ணம், மொழி போன்ற மூலங்களைப் பயன்படுத்தி வாசகனுக்கு / ரசிகனுக்கு அவ்வரூபத்தைக் கடத்துகிறான். கைவினைக் கலைஞன் இந்த மூலங்களைக் கொண்டு அனைவருக்கும் பரிட்சயமான பொது உண்மையை/ பொது ரசனையை/ அறுதியிட்ட நீதியை/ திட்டவட்டமான கட்டமைப்பை வேறு வகையில் மறுநிர்மாணிப்பு செய்துபார்க்கிறான்.
அருமையான விளக்கம்… மனசலாயோ தொடர்ந்து வாசிக்கிறேன். அருமையாக இருக்கிறது. இனிமேல் சாராவைப் பற்றி எழுத இடம் இருக்காதே என எண்ணும்போது வருத்தம் மேலிடுகிறது. ‘மனசலாயோ’ ஒரு புத்தகமாகவே தாங்கள் போடலாம்
முனியாண்டி ராஜ்
போயாக் சிறுகதைகள் – கிறிஸ்டி
தங்களின் ‘போயாக்’ சிறுகதைத் தொகுப்பை வாசித்தேன். அதில் இடம்பெற்றுள்ள கதாமாந்தர்களின் வாழ்க்கை அனுபவம் இதுவரை என்னிடம் ஏற்படுத்தாத சலனத்தை ஏற்படுத்தியிருந்ததன் விளைவு, இரண்டு வாரங்களாக என்னால் வேறு எந்த படைப்பையும் வாசிக்க இயலவில்லை. கதைகளின் பேசுபடுபொருளை உள்வாங்கி செரித்துக்கொள்ள சிறிது காலஅவகாசம் தேவைப்பட்டது. தங்கள் எழுத்தைப் பற்றி முன்னுரை வழங்கியுள்ள திரு. சு.வேணுகோபால் அவர்கள் மற்றும் யாக்கை, போயாக் பற்றி கூறியுள்ள திரு. ஜெயமோகன் அவர்கள் இருவரின் எழுத்துகளையும் படித்தபிறகே என்னால் குறுஞ்சித்தரிப்புப்பாணி கொண்ட தங்கள் கதைகளை உள்வாங்கிக்கொள்ளவும் விரித்தெடுக்கவும் முடிந்தது.
மண்டை ஓடி: கிறிஸ்டி கடிதம்
அன்பு நண்பர் நவீன் அவர்களுக்கு,
கிறிஸ்டி எழுதிக் கொள்வது. கடந்த விஷ்ணுபுரம் இலக்கிய விருது விழாவில் தங்களை நான் சந்தித்தது நினைவிருக்கலாம். எனக்கு உங்கள் ‘மண்டை ஓடி’ சிறுகதைத் தொகுப்பு புத்தகத்தை “வாசித்துவிட்டு எழுதுங்கள்” என்று சொல்லிக் கொடுத்ததும் நினைவிருக்கலாம். அடுத்த சிறுகதைத் தொகுப்பையே வெளியிட்டு விட்டீர்கள் என்று நண்பன் சுரேக்ஷ் கூறினான். மிகவும் தாமதமாக கடிதம் எழுதுவதற்கு மன்னிக்கவும். இடையில் சில காரணங்களால் இலக்கிய செயல்பாடுகளில் ஈடுபட முடியாமல் போய்விட்டது. மீண்டு வந்ததும் உங்கள் சிறுகதைத் தொகுப்பைத்தான் முதலில் வாசித்தேன். உடனே எழுத மனம் துடித்தாலும் அலுவலகப் பணிச்சுமையும் அலைச்சலும் தடைகளாகவே இருந்தன. இன்றைய தினத்தில்தான் இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்ததுபோல எனக்கும் இன்று இரண்டு மணி நேரம் ஓய்வு கிடைத்தது.
கடிதம் : சிவமணியம்
நலம். மிக்க நலத்துடன் இருப்பீர்கள் என நம்புகிறேன்.
சிறுவர்கள் தங்கள் உலகின் வாயிலில் நின்றபடி, பரிசுத்தமான குட்டி கைவிரல்களால் நம் பெரிய கைகளை அழுத்தமாகப் பற்றி, நம்மை ஓயாமல் உள்நுழைய அழைக்கிறார்கள். நேரமின்மை என்கிற சல்லிசான சாக்கு கூறிக்கோண்டு, சுருங்கி சுருண்ட குழாய் போன்ற அந்த கலைடாஸ்கோப்பினை, நம் அலட்சிய கைகளால் ஒதுக்கி கடந்து செல்கிறோம். மாறாக, நம் ‘பெரியத்தனம்’ என்னும் மன உடைகளை உதறிவிட்டு, அவர்களின் விழிமனப் பாதைக்குள் ஒப்புக் கொடுத்து, அந்த வாயில் வழியாக தடையின்றி நுழைந்தால், முடிவிலா வண்ணக் கலவைகளால் நிறைந்த ஒரு புதிய உலகினை நாம் கண்டு அதிசயிக்க நேரும். இந்த அழகிய தேவ தேவதைகள் வாழ்வின் துளிகளை ‘அதி பெரியவைகளாக’ உருப்பெருக்கி காட்டி நம்மை வியக்க வைக்கின்றார்கள். என் இரண்டு வயது மகன் ரிஷிவர்தனுடன் நான் பழகிப் பெற்று வரும், குழந்தைமை ஆசியளித்த அனுபவங்களை இந்த கதை மூலம் மீண்டும் நான் காண்கிறேன்.
கடிதம் 6: என்னுள் சுற்றும் கொடி மலரின் சிறகுகள்!
ஒரு இடைவெளிக்குப் பின் எழுதும் கருத்துரை அல்லது சிறிய எதிரொலி. சிறிது நேரம் அழகு காட்டி மறையும் வண்ணத்துப்பூச்சி வாழ்வு. அவ்வுலகில் நிறைந்திருப்பது அடர்த்தியான வண்ணங்களும் சிறகுகளும் மட்டுமே.
வெண்டைக்காயில் தொங்கட்டான் போட்டு தங்களை அழகுப்படுத்திக் கொண்ட ‘கோணங்கியின்’ கொல்லனின் பெண் மக்கள் : தின்பண்டத்துக்கு ஏங்கிய தன் குழந்தைகளுக்கு சோழ தட்டையை நிலக் கசக்காய் கசக்கி கொடுத்த கொல்லன். இந்த உலகுக்குள் ஊடுருவிப் புதைந்திருப்பது அற்புத வாழ்வியல் வண்ணங்கள். கவிதை மொழியில் பின்னிக் கலந்த கதையுலகம்.
கடிதம் 5: வெள்ளை பாப்பாத்தி
என் எழுத்தாளர் நவீன் அவர்களுக்கு. இப்படி உரிமையுடன் அழைப்பதற்கு காரணம் உங்களின் அண்மைய சிறுகதையான ‘வெள்ளை பாப்பாத்தி’ என்பதை சொல்லிக்கொள்வதில் மகிழ்கிறேன்.
‘நாகம்’ சிறுகதையைப் படித்தவுடனேயே நீங்கள் எனக்கான எழுத்தாளர் என்று முடிவெடுத்தேன். சில அறியாமைகளை முகநூலில் கேட்டிருந்தேன். பதில் சொல்லவில்லை 🙂
‘வெள்ளை பாப்பாத்தி’ எனக்கு மிகுந்த அணுக்கமான சிறுகதையாக உள்ளது.
வெள்ளை பாப்பாத்தி: சுவாமி பிரம்மானந்த சரஸ்வதி
‘வெள்ளை பாப்பாத்தி’ குழந்தைகளின் உலகத்தில் குழந்தமையைத் (innocence) தவிர வேறு எந்த விழுமியங்களுக்கும் பொருள் இல்லை என்று உணர்த்தும் கருவை களமாகக் கொண்டு பயணிக்கும் விழுமியத்தின் உரு. இருந்தாலும் சிதைந்த கருவின் ஒரு துளி உதிரம் போல அபலைப் பெண்களின் அவலத்தை தன்னை அறியாமலேயே காட்சிப்படுத்தியிருக்கிறார் ஆசிரியர். ருக்குவின் ‘மினி சைக்கிள்’, 80களில் துண்டாடப்பட்டத் தோட்டக்காட்டு பெண்களின் வேலை இல்லா கையறு நிலை என் மனக்கண் முன் என் சகோதரிகளையும் நவீன் போன்றொரின் அம்மாக்களையும் நிழலாடச் செய்தது இது. அன்றைய பிழைப்பு நெருக்கடி மட்டுமல்லாமல், ருக்கு போன்ற அபலைகளின் சமுதாய மதிப்பீடுகள் சார்ந்த தனி மனித ஒழுக்க இடுக்குகள் குவிந்த அடையாள சிக்கலும் கூட. அனுபவத்தில் இல்லாத நெருக்கடிகளைக் கையாள முடியாத அடையாளக் குழப்பங்கள் நிறைந்த இருண்ட வாழ்க்கையின் சித்தரிப்பு எழுத்தாளனின் பிரக்ஞை இன்றியே வெளிப்பட்டுள்ளது. அவரின் ஆழ்மனதின் அதிருப்திகளோ என்று எண்ணத் தோன்றுகிறது.
வெள்ளை பாப்பாத்தி – கடலூர் சீனு
எனது தனி வாழ்வில், சில வருடம் முன்பு தனிப்பட்ட முறையில் ஒன்று முதல் நான்காம் வகுப்பு வரை தமிழ் நிலத்தில் அரசு தனது பள்ளிகள் வழியே குழந்தைகளுக்கு அளிக்கும் கல்வியும், அது அந்தக் குழந்தைகளை சென்று சேரும் விதத்தையும் ஒரு தன்னார்வலனாக கடலூர் மாவட்டத்தின் பல அரசு ஆரம்ப பள்ளிகளில் சென்று தங்கி அவதானித்திருக்கிறேன் .
கடிதம் 2: வெள்ளை பாப்பாத்தி
நவின், ஜெயமோகனோ , ராமகிருஷ்ணனோ சொல்லி கேட்டிருக்கிறேன். படைப்பாளி யானை போல இருக்க வேணும் என்று. முட்டி மரத்தை சாய்க்கவும் முடியவேணும். தும்பிக்கை நுனியில் ஊசியை எடுக்கவும் முடியவேணும். போயாக், பேச்சி மரத்தை சாய்த்தது. வெள்ளை பாப்பாத்தி ஊசியை எடுத்தது. அம்மாவின் கதாபாத்திரம் பலவீனமாக உள்ளது. முடிந்தால் அதை மெருகேற்றலாம். கொடிமலரின் வருங்காலத்தைக் குறியீட்டால் காட்டதான் அம்மா என்றால், அது தேவை கூட இல்லை.




