மலேசியாவில் நவீனத் தமிழ் இலக்கியம் வேர்விடத் தொடங்கிய 70ஆம் ஆண்டுகளில் அதன் சாதனை முனையாக உருவானவை சீ. முத்துசாமியின் சிறுகதைகள். தோட்டப்புற வாழ்க்கையின் புற அழுத்தங்களோடும் அன்றாட அவலங்களோடும் எழுதப்பட்டுக் கொண்டிருந்த மலேசிய சிறுகதைகளுக்கு மத்தியில் அப்பாட்டாளிகளிடம் உள்ள அந்தரங்கமான யதார்த்தத்தை நுண்மையாக முன்வைத்த முதன்மையான படைப்பாளி அவர். அகவயமான பயணத்தின் வழி மனதின் இருண்மையை இடைவிடாது வரைந்து காட்டியவர். 90களுக்குப் பின்னர் அவரது மறுபிரவேசம் மலேசிய நவீன தமிழ் இலக்கிய உலகின் முன்னோடிகளில் ஒருவராக அவரை நிலைநிறுத்தியது.
Continue readingமலேசிய இலக்கியம்
முரண் நயந்தால்?: நமத்த எழுத்தும் நம்பகமற்ற வாழ்வும்
மலேசியத் தமிழ் இலக்கியச் சூழலில் தமிழ் மொழித் திறனும், தமிழ் உணர்வும், தமிழர் என்ற அடையாளமும் நல்ல படைப்பாளிக்கான அடிப்படைத் தகுதியை ஒருவருக்கு வழங்கி விடுகிறது என்ற நம்பிக்கையை சமீப காலமாகவே முகநூலில் காண முடிகிறது. இந்த நம்பிக்கையை இறுகப் பிடித்துக்கொண்டு இலக்கிய விமர்சனங்களை எதிர்நிலையில் அணுகும்போது அசாத்தியமான ஒரு தன்னம்பிக்கை உருவாகவே செய்யும். அதை மூடநம்பிக்கை என்றும் வகைப்படுத்தலாம்.
Continue readingசீ.முத்துசாமி நாவல்கள்
முற்போக்கு இலக்கியம், லட்சியவாத எழுத்து ஆகியவை பிரதானமாக இருந்த 1970களின் மலேசியத் தமிழ் இலக்கியச் சூழலில், சீ.முத்துசாமியின் நுழைவு தனித்துவமானது. திட்டவட்டமான தீர்வுகள், சமூக அவலங்களை முன்வைக்கும் கதைக் கரு, முடிவுகளில் திருப்பம் வைக்கும் உத்தி, கருத்துகளைப் பிரதிநிதிக்கும் கதாபாத்திரங்கள் எனும் சட்டகங்களில் மாட்டிக்கொண்டிருந்த மலேசிய சிறுகதைகளுக்கு மத்தியில், அவர் எழுதியவை முற்றிலும் புதிய பாணியிலான எழுத்துகள். குறியீடுகள் மூலம் வாசகன் அந்தரங்கமாக வேறொரு கதையைப் பின்னி உருவாக்கும் சாத்தியங்களையும் (இரைகள்) நுண்மையான அகவய சித்திரங்களால் வாழ்வின் அர்த்தமற்றுப் போகும் தருணங்களின் இருளையும் (கருகல்) அதற்குரிய மொழியில் புனைவாக்கினார். 1990களுக்குப் பின் அவரது மறுபிரவேசத்தில் எழுதிய ‘கல்லறை’, ‘வழித்துணை’, ‘வனத்தின் குரல்’ போன்ற சிறுகதைகள் சீ.முத்துசாமியை மலேசிய நவீன இலக்கியத்தின் முன்னோடிகளில் ஒருவர் என்பதற்கான அழுத்தமான சான்றுகளாகின.
Continue readingஅ.ரெங்கசாமி நாவல்கள்
‘சிவகங்கை தொடங்கி சிசங்காங்’ வரை என்ற தனது சுயவரலாற்று நூலில், நாவல் எழுதுவதற்கான உந்துதலை மலேசியத் தமிழர்களின் இக்கட்டான வாழ்வை வரலாற்றுப் பின்புலத்தில் பதிவு செய்ய வேண்டும் என்ற எண்ணத்திலிருந்து பெற்றதாகச் சொல்கிறார் எழுத்தாளர் அ.ரெங்கசாமி. இயல்பிலேயே இருந்த கலையார்வம் அவரை புனைவை நோக்கி தள்ளியது. தனது இளமைக் காலத்தில் தொடர்கதைகள், சிறுகதைகள் எழுதியதோடு வில்லுப்பாட்டு, மேடை நாடகம் என ஆர்வமாக இயங்கினார். கலை என்பது மனிதனுக்குப் படிப்பினையைக் கொடுக்க வேண்டும் என்பதில் அசைக்க முடியாத நம்பிக்கை கொண்டவர் ரெங்கசாமி. ‘பாடுற பாட்டும் ஆடுற கூத்தும் படிப்பினை தந்தாகனும்’ என இமயத் தியாகம் நாவல் முன்னுரையில் ரெங்கசாமி எழுதியுள்ளது கவனிக்கத்தக்கது.
Continue readingஆர்.சண்முகம், ஆ.ரெங்கசாமி மற்றும் மரண ரயில்
அண்மையில் ஒரு பல்கலைக்கழக ஆய்வு மாணவர் என்னைச் சந்தித்தார். வரலாற்றில் ஆர்வம் உள்ளவர் என தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டார். வரலாற்றை ஒட்டியே தனது ஆய்வு இருக்கப்போவதாகக் கூறிய அவர், மலேசிய வரலாற்று நாவல்களைச் சேகரிக்கும் முயற்சியில் ஈடுபட்டிருப்பதாகச் சொன்னார். என்னுடைய ‘பேய்ச்சி’ நாவல் வேண்டுமெனக் கேட்டார். நான் ‘பேய்ச்சி’ வரலாற்று நாவல் இல்லை எனச்சொன்னேன். தான் அந்நாவல் குறித்த விமர்சனங்களை வாசித்ததாகவும் அதில் லுனாஸில் நடந்த சாராய மரணங்கள் பற்றிய தகவல்கள் இடம்பெற்றுள்ளன என்றும் கூறினார். இருக்கலாம், ஆனால் அந்த நாவல் அதன் பொருட்டு எழுதப்பட்டதல்ல. அதற்குள் வரலாற்றின் சில தருணங்கள் உள்ளன; ஆனால் அது வரலாற்று நாவலல்ல என விளக்கினேன். இருந்தாலும் வாங்கிக்கொண்டு சென்றார். என்ன ஆகுமோ என பயமாகத்தான் இருக்கிறது.
Continue readingதுயரப்பாதை: நெடுநாள் உயிர்த்துள்ள நெகிழிப்பூ
2016இல் கீழவளவு மலையில் சமண படுகைகளைக் கண்டுவிட்டு இறங்க முயன்றபோது ஒரே மாதிரியான ஒன்றுக்கும் மேற்பட்ட பாதைகள் சரிந்துசெல்வதைக் கண்டேன். எந்த வழியில் ஏறிவந்தேன் என்று கொஞ்ச நேரம் குழம்பிவிட்டேன். என்னை அழைத்துச்சென்ற நண்பர் அன்புவேந்தனும் இறங்கும் வழியைக் கணிக்கச் சிரமப்பட்டார். ஏறிவரும்போது அந்தச் சிக்கல் இல்லை. உச்சி மட்டுமே கவனத்தில் இருந்தது. சிறுகதை எழுதுவதற்கும் நாவல் எழுதுவதற்குமான அடிப்படை வித்தியாசம் என மலை அடிவாரத்தில் இருந்து அதன் உச்சியைப் பார்ப்பதையும் உச்சியில் இருந்து பல்வேறு திசைகளில் பிரிந்து செல்லும் வழிதடங்களைப் பார்ப்பதையும் சொல்லலாம். சிறுகதையில் எழுத்தாளன் வாழ்க்கையின் ஒரு புள்ளியை அறிந்துகொள்ள முயல்கிறான். நாவலில் வாழ்வின் எண்ணற்ற திசைகளை ஓர் ஒட்டுமொத்த பார்வையில் தொகுக்கப் பழகுகிறான்.
Continue readingசெம்மண்ணும் நீலமலர்களும்: முதல் சுடர்
மலேசிய நாவல்களை வாசிக்கும்போது பெரும்பாலானவை ஏற்படுத்தும் சலிப்புக்குக் காரணம் அதன் அடிப்படை சாரமாக மறுபடி மறுபடி வரக்கூடிய இரண்டு அம்சங்கள்தான். முதலாவது படைப்பாளிக்கு ஏற்பட்டுள்ள நீதியுணர்வு சார்ந்த கோபம். இரண்டாவது மானுட உறவுகள் சார்ந்த குழப்பம்.
Continue readingஎம்.ஏ.இளஞ்செல்வன் நாவல்கள்: பாலுணர்வின் கிளர்ச்சி
1
மலேசிய நவீனத் தமிழ் இலக்கியத்தில் எம்.ஏ.இளஞ்செல்வனின் ஆளுமை வலுவானது. மலேசியாவில் முதல் புதுக்கவிதை நூலை (நெருப்புப் பூக்கள் – 1979) வெளியிட்டவர். நவீன இலக்கியச் சிந்தனை எனும் அமைப்பை நண்பர்களுடன் இணைந்து உருவாக்கி மலேசியாவில் முதல் புதுக்கவிதை கருத்தரங்கை (1979) நடத்தியவர். அந்தக் கருத்தரங்கில் இருபத்து இரண்டு கவிஞர்களின் புதுக்கவிதைகளை நூலாகத் தொகுத்து (புள்ளிகளைப் புறக்கணிக்கும் புதுக்கோலங்கள் – 1979) நவீன இலக்கியச் சிந்தனை மூலம் வெளியிட்டார். மலேசியாவில் புதுக்கவிதை வளரத்தொடங்கிய அந்தக் காலத்தில் மரபுக்கவிஞர்களிடமிருந்து வந்த விமர்சனங்களுக்கு கடுமையான எதிர்வினையாற்றியதன் வழி அன்றைய இளைஞர்கள் மத்தியில் கவனம் பெற்றவர். அவ்வகையில் இளைஞர்கள் தொடர்ந்து புதுக்கவிதையில் ஆர்வம் காட்ட ஒரு கவர்ச்சியான முன்னோடியாக இருந்தவர். ஆம்! இளஞ்செல்வனிடம் ஒரு வசீகரம் இருக்கத்தான் செய்தது. ‘இந்தியன் மூவி நியூஸ் எனும் சினிமா இதழில் வெளிவந்த எம்.ஏ.இளஞ்செல்வனின் படைப்புகளுடன் பிரசுரமாகும் அவரது படங்கள் நட்சத்திர முகத்துக்கு ஈடானது’ என கோ.புண்ணியவானின் பதிவு கவனிக்கத்தக்கது (மறக்கப்பட்ட ஆளுமை).
Continue readingரெ.கார்த்திகேசு நாவல்கள்: மெல்லுணர்ச்சிகளின் பூஞ்சணம்
பொழுதுபோக்கு இலக்கியம் இருப்பதை விமர்சிக்கவில்லை. அவற்றை உயர்வாக மதிப்பிடுவது, அவற்றைச் சார்ந்த சமூக மதிப்பீடுகளை உருவாக்குவது – இந்த அணுகுமுறையைத்தான் நான் விமர்சிக்கிறேன் – சுந்தர ராமசாமி
பறை இரண்டாவது இதழுக்காக ‘கூலிம் நவீன இலக்கிய களம்’ 2014இல் ஓர் அறிமுகக் கூட்டத்தை ஏற்பாடு செய்திருந்தது. அவ்விதழின் முன்னுரையில் மலேசிய இலக்கிய உலகம் ரெ.கார்த்திகேசு போன்ற ‘மீடியோக்கர்’களை (mediocre) முன்னிலைப்படுத்துவதன் அபத்தங்களை எழுதியிருந்தேன். அக்கட்டுரை குறித்து மேடையில் தனது கருத்தைக் கூறிய எழுத்தாளர் கோ.புண்ணியவான், ‘ரெ.கார்த்திகேசு வணிக இலக்கியவாதிதான். அவர் தன்னை தீவிர இலக்கியவாதியென எப்போதும் சொல்லிக்கொண்டதில்லை. அப்படியிருக்க அதை ஏன் மறுபடி மறுபடி பதிவு செய்யவேண்டும்?’ எனக்கேட்டார்.
Continue readingசெலாஞ்சார் அம்பாட் : புனைவின் துர்க்கனவு
நாவல் எனும் கலைவடிவம் குறித்து விரிவாகவே தமிழ் இலக்கியச் சூழலில் பேசப்பட்டுவிட்டது. நாவல் என்பது கயிறு திரிப்பதுபோல முறுக்கிச் செல்வதல்ல; அது கூடை முடைவது போன்ற பின்னல் என்ற ஜெயமோகனின் உவமை நாவலின் கலைவடிவம் குறித்து எளிமையாகப் புரிந்துகொள்ளும் சித்திரம். இது நாவலின் வடிவம் குறித்த சட்டகமல்ல. நாவலின் சாத்தியம் குறித்தது. எளிமைப்படுத்தியும் குறுக்கியும் வாழ்வின் சிக்கலை நாவலில் காட்டுவதென்பது நாவல் கலை கொடுத்துள்ள சலுகைகளை ஓர் எழுத்தாளன் எவ்வகையிலும் பயன்படுத்திக்கொள்ளவில்லை என்பதே. சிறுகதைகளுக்கே உரிய ஒருமையும் நாவலில் இருக்க வேண்டிய உள்இழைகளும் கொண்ட குறுநாவல்கள் மலேசியாவில் நாவல்களாக பல காலம் அங்கீகரிக்கப்பட்டுள்ளன. ‘செலாஞ்சார் அம்பாட்’ அதில் ஒன்று.