‘நகம்’: விடாமல் விரட்டும் டிராகன்.
நகம் கதையில் அடிநாதமாக இருப்பது கப்பாளாதான். அவன்தான் கதையின் முக்கிய விசை.
Continue reading‘நகம்’: விடாமல் விரட்டும் டிராகன்.
நகம் கதையில் அடிநாதமாக இருப்பது கப்பாளாதான். அவன்தான் கதையின் முக்கிய விசை.
Continue reading“காச கொண்டுப்போய் தூர போடுடா” என வளர்மதி கத்தவும் அப்போய் கொஞ்சம் பயந்துதான் போனான். திடுக்கிட்டு உறங்கி எழுந்தவளின் கண்கள் சிவப்பேறியிருந்தது. கரகரத்த குரலில் உறுமல்.
உறங்குவதற்கு முன் நெஞ்சை அழுத்திய அழுகை அப்படியே அங்கேயே அடைத்துக்கொண்டிருப்பதை உணர்ந்தாள். இன்னும் அதிகமாகத் தண்ணீர் குடிக்க வேண்டும். வெளியில் சூழ்ந்திருந்த சீன ஊதுவத்திகளின் புகை கதவைத்திறந்ததும் உள்ளே நுழைந்து மூக்கை எரித்தது. தொலைவில் கேட்ட நன்யின் இசை இருண்டு கிடந்த சாயுங்கால வீட்டை மேலும் துக்கமாக்கியது.
Continue readingநவம்பர் 17 வழக்கறிஞர் சி.பசுபதி அவர்களின் பிறந்தநாள். கடந்த ஆண்டு அவருக்கு நெருக்கமான இருபது பேர் அடங்கிய நண்பர்களுடன் சிறிய அளவிலான பிறந்தநாள் நிகழ்ச்சி ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. நானும் அதில் ஒருவனாகக் கலந்துகொண்டேன்.
Continue readingஉப்சி கல்லூரியின் விரிவுரையாளர் முனைவர் மனோன்மணி அவர்கள் குறித்த புகார் கடிதம் ஒன்றை அருண் துரைசாமி என்பவர் வாசிக்கும் காணொளியை நண்பர் ஒருவர் காலையிலேயே அனுப்பி வைத்திருந்தார். அருண் துரைசாமி வீடியோ இப்படி எங்காவது சுற்றியடித்து அவ்வப்போது வருவதுண்டு. முதல் வேளையாக அதனை அழித்து விடுவேன். இனம், மொழி, மதம் என்பனவற்றுக்கிடையில் பேதம் தெரியாத அரைவேக்காட்டு நபர்களின் உளறல்கள் இப்படி சமூக ஊடகங்களில் ஏராளமாகவே சுற்றிக்கொண்டிருக்கின்றன. அவற்றைக் கொண்டாடும் மூடர் கூட்டமும் எப்போதும் இருப்பதுண்டு. முன்பு இந்தக் கூட்டம் தோட்டத்து சாராயக்கடைகளில் இருந்ததாக ஞாபகம். இப்போது சமூக ஊடகங்களில் புகுந்து கலந்துள்ளனர்.
Continue reading2019 மே மாத வல்லினத்தில் அ.பாண்டியன் ‘தையும் பொய்யும்‘ எனும் தலைப்பில் ஒரு கட்டுரை எழுதியிருந்தார். அக்கட்டுரை சித்திரை முதல் நாளை தமிழ்ப் புத்தாண்டு என்பதற்கு மாற்றாக தை முதல் நாளே தமிழ்ப்புத்தாண்டு என்று நிறுவும் முயற்சியை ஒட்டி எழுப்பப்பட்ட கேள்விகளை உள்ளடக்கியது.
Continue readingசேனன் எழுதிய ‘சித்தார்த்தனின் வினோதச் சம்பவங்கள்’ என்ற நாவல் வெளியீட்டின் ZOOM பதிவை பார்த்தேன். அந்த நூல் குறித்து சாரு நிவேதிதாவின் உரை என்னை வெகுவாகக் கவர்ந்தது. அதில் முக்கியமானது ஷோபா சக்தியின் ‘இச்சா’ நாவல் சேனனின் ‘சித்தார்த்தனின் வினோதச் சம்பவங்கள்’ என்ற நாவலின் தழுவல் என்று சுற்றித்திரியும் அவதூறு குறித்த சாருவின் உரைப்பகுதி. எழுத்தாளனைச் சுற்றி உருவாக்கப்படும் இதுபோன்ற அவதூறுகளை பிற எழுத்தாளர்கள் எப்போதும் அனுமதிக்கக் கூடாது என விரும்புபவன் நான்.
Continue readingமலேசியத் தமிழ் இலக்கியச் சூழலில் தமிழ் மொழித் திறனும், தமிழ் உணர்வும், தமிழர் என்ற அடையாளமும் நல்ல படைப்பாளிக்கான அடிப்படைத் தகுதியை ஒருவருக்கு வழங்கி விடுகிறது என்ற நம்பிக்கையை சமீப காலமாகவே முகநூலில் காண முடிகிறது. இந்த நம்பிக்கையை இறுகப் பிடித்துக்கொண்டு இலக்கிய விமர்சனங்களை எதிர்நிலையில் அணுகும்போது அசாத்தியமான ஒரு தன்னம்பிக்கை உருவாகவே செய்யும். அதை மூடநம்பிக்கை என்றும் வகைப்படுத்தலாம்.
Continue reading‘பேய்ச்சி’ நாவல் தடைசெய்யப்பட்ட பிறகு நேர்காணலுக்காக அணுகிய சில ஊடகத்தினர் விக்கிப்பீடியாவில் முழு விபரங்களும் இருந்தால் முன் தயாரிப்புக்கு உதவியாக இருக்கும் என்றனர். என் புளோக்கிலேயே அனைத்து தகவல்களும் உள்ளதை நான் சுட்டிக்காட்டினேன். பொதுவான ஒரு தளத்தில் இருப்பது தங்களுக்கு எளிது என்றதால் என் ஆசிரியர் தோழி ஒருவர் எனக்கான விக்கிப்பீடியாவை உருவாக்க முன் வந்தார்.
Continue readingஎனக்கு நெருக்கமாக தான் இது உருவாகி உள்ளது… மனசிலாயோ… எனக்கு நிர்மலா அக்கா தான் நினைவுக்கு வந்தார்… முழுக்க முழுக்க ஒரு தனிமை பயணத்தில் ஆன்ம வடிக்கால் தேடும் சூழல். கேரளாவுக்கு ஏற்கனவே சென்றிருந்ததால் வரிகள் அனைத்தும் காட்சிகளாகவே விரிந்தன. கூடவே தனிமை பயணம் என்பதால் என்னுடைய பெலாகா பயண அனுபவங்களும் இணைந்து கொண்டு அனுபவ சுகத்தை விரிவாக்கின.
Continue readingகேரளாவிற்கு இரண்டு முறை சென்றிருக்கிறேன். முதலாவதாக கண்ணூரில் (Kannur) எனது தாய் தகப்பன் வழி சொந்தங்களைப் பார்த்துவிட்டு, முத்தப்பனை தரிசித்துவிட்டு, அங்கிருந்து படிப்படியாக கோழிக்கோடு, பாழக்காடு, திரிசூர், ஏரணாக்குழம், கோட்டயம், ஆழப்புழா, கொல்லம் கடைசியில் திருவானந்தபுரம் என்று ஒரு மாதத்திற்கு பயணம் செய்தேன். இரண்டாம் முறை கண்ணூர் மாத்திரம். எனவே, நவீன் கண்ட கேரளாவை நானும் கண்டிருந்தேன்.
Continue reading