“இது அப்சராக்களின் உலகம். மற்ற வழிகாட்டிகள் இந்து, பௌத்த ஆலயம் எனச் சொல்வதெல்லாம் ஏடுகளில் தவறாக எழுதப்பட்ட தகவல்கள் மட்டுமே. நீ விரும்பினால் உன்னிடம் அதை நிரூபிப்பேன்” என்று காதருகில் கிசுகிசுத்தவளின் முகத்தைப் பார்த்தேன்.
Continue readingவைரம் விவாதம்: வி.ஜி.சூர்யா
அன்பு நவீன்,
வணக்கம்.
உங்களின் நலம் விழைகிறேன்.
உங்கள் தனி தளத்தில் தோழி நிரஞ்சனா தேவி எழுதிய வைரம் – ஒரு விவாதம் கட்டுரையை கண்டேன். தமிழில் இலக்கியத்தில் ஒரு சிறுகதை சார்ந்து விவாதம் தொடங்குவது மகிழ்ச்சி. அந்த விவாதங்கள் மூலமே வாசிப்புக்கான புதிய திறப்புகள் நம்மிடம் திறக்கும். அந்த வகையில் அக்கட்டுரை முக்கியமானதே. ஆனால் அதில் சில போதாமைகள் தெரிகின்றன. அதனை ஒட்டி நான் பேசலாமென நினைக்கிறேன். அவர் போல் நானும் இதனை ஒரு விவாதமாகவே எழுப்ப விரும்புகிறேன்.
Continue readingவைரம்: பாவண்ணன்
அன்புள்ள நவீன், வணக்கம். நலம்தானே? உங்கள் சமீபத்திய கதைகளில் நேற்று படித்த வைரம் சிறுகதை மிகவும் பிடித்திருந்தது. இயல்பாக வளர்ச்சியுற்று உச்சத்தைத் தொடும் கதை.
Continue readingவைரம்: கடிதம் 3
அன்புள்ள நவீன் அவர்களுக்கு
இருளில் மட்டுமே மின்னும் அந்த கருப்பு வைரம் மனிதன் தன்னிடம் மீதம் வைத்திருக்கும் நல்லவைகளின் படிமமோ? நானும் பார்த்திருக்கிறேன் உச்சகட்ட நெருக்கடியே பேரன்பையோ பெரும் குணத்தையோ வெளி கொணர்கிறது, ஏனோ பெரும் ஆற்றலின் மரம் சிறிய கசப்பிலேயே விதை ஊன்றுகிறது, விதி விலக்குகள் உண்டு, ஏனோ நல்லத்தனத்திற்கு அவ்ளோ மதிப்பில்லை என்பதை மக்கள் விரைவில் கண்டு கொள்கின்றனர் , மீண்டும் அவற்றை புதைப்பதில் முனைப்பு காட்டாவிடினும் அவ்வாறு அவை புதைகையில் பெரிதாக அலட்டிக் கொள்வதில்லை.
வைரம்: ஒரு விவாதம்
அன்புள்ள நவீன்,
உங்கள் வைரம் கதை படித்தேன். நல்ல சிறுகதை, ஆனால் இது எனக்கான சிறுகதை அல்ல. இங்க கொஞ்சம் அழுத்தம் கூட்ட விரும்புகிறேன், இல்லையென்றால் இது தப்பான அர்த்தத்தில் புரிந்துக் கொள்ளப்படும். மேலும் இந்த கடிதம் வைரம் கதைக்கான வாசிப்பு அனுபவமாக எழுதாமல், ஒரு விவாத கட்டுரையாக எழுதலாம் என தோன்றியது. காரணம் அடுத்தடுத்த நீங்கள் எழுதிய இரண்டு சிறுகதைகள் (நகம், வைரம்) அதனை ஒட்டி வந்த கடிதங்கள். இந்த இரண்டு கதைகளுக்கான வாசிப்பை கூறி அதிலிருந்து இப்போது சிறுகதைக்கான டிரெண்ட் என்ன என்பதை சொல்லலாமென நினைக்கிறேன்.
Continue readingவைரம்: கடிதம் 2
நவீன்,
ஒரு வெற்றிகரமான சிறுகதை அதன் அனைத்து அம்சங்களிலும் வெற்றி பெற்றிருக்கும். வைரம் அத்தகைய சிறுகதை. ஒரு உயர்தர சிறுகதையைப் படித்தபின் நம்முள் கிளைவிட்டு வளரும் மலர்ந்த கனியை நாம் பறிப்போம். வைரம் அந்த வகையில் கூட உயர்தரமான சிறுகதை. ஓர் ஆழமான சிறுகதை வாழ்க்கையில் இருந்து பெற்ற வினாக்களை வாழ்க்கையை நோக்கி ஏவும், இம்முகத்திலும் வைரம் ஆழமிக்க சிறுகதை.
Continue readingவைரம் : கடிதம் 1
நவீன் நலம்தானே…
அடுத்தடுத்த சிறுகதைகளை உங்களிடமிருந்து பார்ப்பதில் மகிழ்ச்சி. இந்தக் கொடுங்காலத்தில் கலைஞர்கள் செய்ய வேண்டிய பணி அதுதானே. உங்கள் ‘நகம்’ சிறுகதை என்னை நெருங்கி வராததை குறித்து கடிதம் எழுதி இரண்டு வாரத்தில் ‘வைரம்’ சிறுகதை. ஆனால் எனக்கு இக்கதை மிகவும் நெருக்கமான கதையாகிவிட்டது. ஆச்சரியம்தான்.
சிறுகதை: வைரம்
“வைரத்த தோண்டி எடுத்துடலாமா?” எனக் குமாரசாமி கேட்டபோது ஒரு ஜோடி மஞ்சள் பறவைகள், விருட்டென கொன்றை மரத்திலிருந்து பறப்பதை நான் பார்த்துக்கொண்டிருந்தேன். அவ்வளவு நேரம் அவை அங்கு இருந்ததை நான் கவனிக்கவில்லை. அது சித்திரை மாதம். மரத்தை மூடியிருந்த கொன்றை மலர்களுக்குள் அவை மறைந்து இருந்திருக்க வேண்டும்.
Continue readingகடிதம் 3 : நகம்
அன்புள்ள நவீனுக்கு,
நலம். மிக்க நலத்துடன் இருப்பீர்கள் என நம்புகிறேன்.
அம்மாவைப் போல நகங்களில் சாயமிடவும், நன்றாகப் படித்து குளிரூட்டப்பட்ட அறையில் குமாஸ்தா வேலை செய்யவும் ஆசைப்படுகிறாள் வளர்மதி. துரத்தும் வாழ்வு கையறு நிலைக்கு இட்டுச் செல்கிறது.
கடிதம் 2 : நகம்
அன்புள்ள நவினுக்கு,
நகம் சிறுகதை வாசித்தேன். ஒரு கதையின் தொடக்கப்புள்ளி எங்கிருந்து வருகிறது என யோசிக்கத் தோன்றியது. இக்கதை உங்களுக்கு பேய் மாத காலத்தின் கடைசி நாள் கூத்து என்ற ஒற்றை நிகழ்விலிருந்து வளர்த்தெழுந்திருக்கலாம். ஆனால் ஒரு சிறுகதையின் வெற்றியில் மூன்று முக்கியமான விஷயங்களை இக்கதை கொண்டிருக்கிறது.
Continue reading