பேய்ச்சி நாவல் தோட்டப்புறங்களில் வாழ்ந்த மக்களின்வாழ்க்கை முறையை அப்பட்டமாகப் படம் பிடித்து காட்டும் நாவல். என் தாத்தா, பாட்டி, அப்பா,அம்மா அனைவரும் தோட்டப் புறங்களின்பின்னணியைக் கொண்டிருந்ததால் கதையினுள் என்னைச் சுலபமாகப் புகுத்திக் கொள்ள முடிந்தது. நானும் சிறு பிள்ளை பருவத்தில் தோட்டப்புறத்தை மகாராணி போல்சுற்றி வலம்வந்துள்ளேன். எனினும் நாவல் என்னை மீண்டும் ஒரு முறை தோட்டப்புறத்தைச் சுற்றிப் பார்க்க அழைத்து சென்றுவந்துள்ளது.
Continue readingபேய்ச்சி
பேய்ச்சி: உறைவும் மிரள்வும் (நிர்மலா முரசி)
அதிகாலை ஆதவன் ஒளிப்பட்டு சட்டென மறைந்திடும் வெண்பனிபோல் சில நாவல்கள் வாசித்த மாத்திரத்தில் எவ்வித தாக்கத்தினையும் ஏற்படுத்தா வண்ணம் வாசிப்பவர் அகம் விட்டு மறைந்து விடுவது உண்டு. சிற்சில படைப்புகள் மட்டுமே அகத்தினை அணுகி காலவோட்டத்தின் மாறுதலால் அல்லது கால மாற்றத்தால் நினைவடுக்குகளில் புதைந்திருக்கும் / மற(றை)க்கடிக்கப்பட்டிருக்கும் கடந்தகால நினைவலைகளினை அகக்கண் முன்னே காட்சிபடுத்துவது மட்டுமல்லாது நிசப்தமானதொரு தாக்கத்திற்குள் அமிழ்த்தி செல்லும். அத்தகைய தாக்கமானது மீட்டெடுக்க இயலாத கால பெருவெளி சமுத்திரத்தில் வெறும் ஞாபக சின்னங்களாக மட்டுமே நிலைத்திருக்கும். ஆழ்கடலின் உள்ளே அமிழ்ந்திருந்த நீர்குமிழி மேலெழும்புவது போல் பேய்ச்சி நாவல் நினைவடுக்குகளிலிருந்து மறக்கடிக்கப்பட்டிருந்த எனது கம்பத்து வாழ்வனுபவத்தினை தூசு தட்டி எழுப்பியது என்றே கூறலாம்.
பேய்ச்சி: உள்ளிருந்து மீளும் பாலியம் (புஷ்பவள்ளி)
நாவலின் முகப்பே அதிரும் வகையில் இருக்கையில் கதையும் இன்னும் அதிர வைக்கும் என்ற நோக்கத்துடன் இருந்தேன். டிசம்பர் மாதம் கலந்து கொண்ட முகாமில் அருண்மொழி நங்கை அவர்கள் பேய்ச்சி நாவலையொட்டி விமர்சனம் செய்கையில் நாவலை கண்டிபாகப் படித்தே ஆக வேண்டும் என்று என் எண்ணத்தில் ஓடிக்கொண்டே இருந்தது. நாவலை பேரார்வத்துடன் வாசிக்க ஆரம்பித்தேன்.
Continue readingபேய்ச்சி: தொன்மத்திலிருந்து தொடரும் பேயன்னை (பாரதி)
கடந்த வருடம் டிசம்பர் திகதி 20-22 -இல் நடந்ததெறிய நவீன முகாமில் கலந்து கொண்டேன். அதுதான் என்னுடைய முதல் பங்கேற்பு. அம்முகாம் நவீன இலக்கியத்தையும் எழுத்து அறிவையும் சார்ந்தே இருந்தது. அம்முகாமில்தான், பேய்ச்சி நாவல் வெளியீடுச் செய்யப்பட்டு, அருண்மொழி நங்கை அவருடைய அனுபவத்தோடும் உலக இலக்கிய அறிவோடும் அந்நாவலைப் பற்றி உரை ஆற்றினர். நாவலைப் படிக்க அவருடைய உரையும் புத்தகத்தின் முன் அட்டையும் என்னை மிகவும் ஈர்த்தது. முன் அட்டையில் இருக்கும் செம்பனை இலையின் மறைமுக வரைப்படமும் தீப்பந்தம் ஒரு பெண் முக அமைப்புபோல் குங்குமம் இட்டு இருப்பதும் இப்புத்தகத்தைப் படிக்க ஊக்குவித்தது. முன் அட்டையில், நாவலின் தலைப்பில் பேய்ச்சி என்று அச்சடிக்கப்பட்டு உள்ளதில் ‘ய்’ மட்டும் சிவப்பு நிறத்தில் அச்சடிக்கப்பட்டுள்ளது. அது ஏன் என்ற வினாவுக்குக் நாவலைப் படித்து முடித்தவுடன் விடைக் கிடைத்தது.
Continue readingபேய்ச்சி சர்ச்சை குறித்து…
‘பேய்ச்சி’ நாவல் குறித்த மதியழகன் கருத்தை நான் என் வளைத்தளத்தில் பதிவேற்றியபோது நண்பர்கள் மத்தியில் இருந்த ஒரே கேள்வி, ஏன் அதை நான் பதிவேற்ற வேண்டும் என்பதே. அதில் அடங்கியுள்ளது வன்மமும் அவதூறும் மட்டுமே என்பதனை வாசித்த பலரும் உணர்ந்திருந்தனர். அப்படி இருக்க, அதற்கான முக்கியத்துவம் என்ன என்பது நண்பர்களின் குழப்பமாக இருந்தது. ஆனால், அடிப்படையில் நான் ஒன்றை சோதிக்க விரும்பினேன். அதனை சில நண்பர்களிடமும் கூறியிருந்தேன்.
Continue readingபேய்ச்சியின் திருவிளையாடல்- புனிதவதி
எழுத்தாளர் ம.நவீன் வலைப்பக்கத்தில் மதியழகனின் விமர்சனத்தைப் படித்தேன். அது இலக்கிய விமர்சனம் இல்லை. முன்பு எங்கள் தோட்டத்தில் இரு கிழவர்கள் செய்தித்தாளைப் படித்துவிட்டு இரவில் சாராய போதையில் நாட்டு நடப்பு பற்றி காரசாரமாகப் உளறிக்கொண்டிருப்பார்கள். ஏறக்குறைய அதுதான் அந்தக் கட்டுரை. இது எதிர்ப்பார்த்த ஓன்றுதான். ம.நவீனுக்கு இவ்வகை உளறலைப் பார்த்து பார்த்துச் சலித்துப்போய் இருக்கும். எனக்குதான் புதிது.
கோழைத்தனத்தின் கூச்சல்கள்
எனக்கு மலேசிய இலக்கிய நிலை குறித்தெல்லாம் தெரியாது. முகநூல் பக்கம் வருவதும் மிகக் குறைவு. ஆனால் வெளியில் இருந்து பார்த்து சிலர் மேல் மரியாதை உண்டு. ஆனால் முகநூலில் நடக்கும் அக்கப்போர்களைப் பார்க்கும்போது பலர் மேல் மரியாதை இல்லாமல் போகிறது. குறிப்பாக கவிஞராகத் தன்னைச் சொல்லிக்கொள்ளும் கருணாகரன் மீது மரியாதை குறைந்து பரிதாப உணர்வே மேலோங்கியது. நான் கவிஞர்களின் ஆளுமையை பாரதி வழி அறிந்துள்ளேன். கவிஞர்கள் அப்படித்தான் துணிவாக இருப்பார்கள் போல என்றும் நம்பியிருந்தேன். இப்படிப்பட்ட கோழைகளெல்லாம் கவிஞர்களாக இருப்பார்களா என கருணாகரனைக் கண்டு மனம் நொந்தேன்.
படுத்து எழுந்த பாட்டன் – த.குமரன்
மரபிலக்கிய அதிர்ச்சி
கடந்த சில நாட்களாக ம.நவீன் எழுதிய பேய்ச்சி நாவல் தொடர்பான சர்ச்சைகளைக் காண முடிகிறது. இதுபோன்ற சர்ச்சைகள் வந்தாலே ‘இரண்டாயிரம் ஆண்டு இலக்கிய மரபு’ எனும் வாசகம் தேய்வழக்காகப் பயன்படுத்தப்படுகிறது. அப்படிப் பயன்படுத்துபவரிடம் எங்கே அந்த இரண்டாயிரம் ஆண்டு மரபை கொஞ்சம் விளக்குங்கள் என்றால் திணறிவிடுவார். அப்படிச் சொல்வது ஒரு பாவனை. அந்த பாவனையைத்தான் திரு.மதியழகன் அவர்களும் பயன்படுத்தியுள்ளார். அப்படிச் சொல்லும்போது அனைவரும் வாயடைத்துவிடுவர். மரபிலக்கிய வாசிப்புப் போதாமை அதற்கு ஒரு காரணம்.
Continue readingஎதிர்வினை:சவமாகும் பேய்ச்சி- ஆ.லாவண்யா
ஏகவசனத்தில் தன்னையும் தன் புனைவையும் திட்டியுள்ள மதியழகன் அவர்களின் அவதூறு கட்டுரையை தன் வலைத்தளத்தில் ம.நவீன் அவர்கள் பதிவிட்டது என்னை இந்த எதிர்வினையை எழுதத்தூண்டியது.
Continue readingபேய்ச்சி: புனைவாய்வு (ஆதித்தன் மகாமுனி)
ஓர் எழுத்தாளனின் சுவைக்கேற்ப உருவாவதல்ல நாவல். அது எழுத்துகளோடு வாழபோகும் ஒரு வாசகனின் குறுகிய கால குடும்பம். அவன் வெளியேயும் உள்ளேயும் நின்று கதாபத்திரங்களோடு பயணிக்கப் போகிறவன். அவனே அந்த கதைக்கு நாயகனாகவும் மாறலாம் அல்லது தன் கற்பனைக்கு ஏற்ப கதை மாந்தர்களுக்கு உருவம் கொடுக்கலாம். ஆனால், எழுத்தாளன் என்பவன் தன் கதையைக் கற்பனையாகவும் அல்லது உண்மையைக் கற்பனை சுவையோடு ததும்ப சமைப்பதே ஆகும். தான் பார்த்த, படித்த, அனுபவித்த எல்லாவற்றையும் வாசகனுக்கு அதே உணர்ச்சிகளோடு கொண்டு வந்து சேர்ப்பது என்பது நாவலின் தனிச் சிறப்பு.
Continue reading