2.11.2014ல் நடைபெறவுள்ள கலை இலக்கிய விழா 6 -ல் , எழுத்தாளர் அ.ரெங்கசாமிக்கு ‘வல்லினம் விருது’ வழங்கப்படுகிறது. இந்தத் தொடர் அவருடனான என் அனுபவங்களின் வழி ஓர் ஆளுமையை அறிந்துகொள்ளும் முயற்சிதான்
2005 வாழ்வில் மிக முக்கியமான காலம். ஒரு காதல் தோல்வியில் மனம் மிக சோர்ந்திருந்த ஆண்டு. எப்போது வேண்டுமானாலும் அழுகை பொத்துக்கொண்டு வரும் எனும் முகத்தோற்றம். மருத்துவர் சண்முகசிவா அப்போதுதான் அறிமுகமாகியிருந்தார். அவசரத்துக்கு ஏதாவது பாராட்டு சொற்களைக் கேட்க வேண்டுமென்றால் அவரை அழைப்பதுண்டு. அதுதான் நான் ஆசிரியராக பொறுப்பேற்ற ஆண்டும்.




முறை மலைமீது எரிமலையிலிருந்து வெளிவரும் வாயுவைப் பார்க்கப் பயணம். அந்த வாயுவைப் பயன்படுத்தி மின்சாரம் தயாரிக்கின்றனர். 85 டிகிரி அதன் வெப்பம். அந்த வாயு வெளிவரும் இடத்தில் தேங்கும் நீர் பொல பொல என கொதித்துக்கொண்டிருந்தது. பெரிய பாதுகாப்பெல்லாம் இல்லை. சுற்றி இருந்தவை மூங்கிலிலான தடுப்புகள்தான்.

இதற்கு முன்பு பாலித்தீவில் எரிமலையைக் கண்டதுண்டு. அது இறந்துபோன எரிமலை. அதன் அருகே உணவகங்களை அமைத்து சாப்பிட வைத்தார்கள். இறந்து போன புலியின் பக்கத்தில் அமர்ந்திருந்தால் எப்படி சுவாரசியம் இல்லாமல் இருக்குமோ அப்படி இருந்தது அந்தச் சூழல். ஆனால் இது அப்படியல்ல. இன்னமும் உயிருடன் உறுமும் புலி. மத்திய ஜாவா பகுதியில் உள்ள இந்த மெராபி எரிமலை 2010-ஆம் ஆண்டு வெடித்ததில் 350-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர் என்பதை நினைவில் வைத்துக்கொண்டுதான் எங்கள் பயணத்தைத் தொடங்கினோம்.
நண்பரின் ‘வலி’ எமக்கு புரிகிறது…
ஆழ்ந்து நோக்கியதன் விளைவாகத்தான் இக்கட்டுரை எழுந்திருக்கும் என நம்புகிறேன்.இந்நூலை நான் வாசித்ததில்லை. இருப்பினும் நண்பரின் இந்நூல் குறித்த பகிர்வினை வாசித்தப் பின்பு, ஒரு வேளை சீ. அருணின் கட்டுரைகள் வரலாறு குறித்த நுட்பமான பார்வை இல்லாதவரால் சான்றுகளாகக் கொள்ளப்பட்டால், எதிர் கால சந்ததியர்கள் பூனையை புலி எனக் குறிப்பிடும் நிலை ஏற்பட்டுவிடும். ஆய்வுகள் வேறு, நம்பிக்கைகள் வேறு எனும் நிலைபாட்டினை முதலில் ஆய்வாளர்கள் கொண்டிருக்க வேண்டும்.தமிழர் தம் நெடிய வரலாற்றை, அதில் உள்ள நுண்பாக விடயங்கள் எதையும் தாய்மொழி வழியாக முதலில் அறியவில்லை என்பது குற்றமாக இருந்த காலம் போய், சமிபக்காலமாக கள ஆய்வுகள், அகழ்வாராய்ச்சிகள் மூலம் சான்றுகளோடு பல ஆய்வாளர்கள், இதற்கு முன்பு நிறுவப்பட்ட கருத்துகளை தகர்த்து உண்மை சூழலை நிறுவியுள்ளனர் . இவற்றில் ஒன்றைக்கூடவா இவர் சான்றாகக் கொள்ளவில்லை?
வரலாற்றுக் குறிப்புகளை பதிவுச் செய்கையில் கால அளவீட்டு முறை என்பது தனியொரு பகுதியாகவே நிலைத்து நிற்கிறது. பல நூல்களில் ஒரே நிகழ்வானது பல்வேறு காலங்களில் நிகழ்ந்ததைப் போல குறிப்பிட்டிருப்பது, ஆய்வாளர்களால் காலத்தை சரியான முறையில் கணக்கிட இயலாமல் போக்கினைப் புலப்படுத்துகிறது. ஒவ்வொறு ஆய்வாளனும் வரலாற்றை பதிவு செய்கையில் காலத்தை உய்த்துணர வேண்டும்.
உலகிலுள்ள தொன்மைச் சமுதாயங்களில் ஒன்று தமிழ்ச் சமுதாயம். தொன்மை மொழிகளில் ஒன்று தமிழ்மொழி. கடந்த பல நூற்றாண்டுகளில் தமிழ்ச் சமுதாயமும் அதன் படைப்பான தமிழ் மொழியும் பல மாற்றங்களையும் வளர்ச்சிகளையும் கண்டுள்ளன என்பது நாம் அறிந்ததே. சமுதாய மாற்றமானது மொழியில் பாதிப்பை ஏற்படுத்துவது தவிர்க்க இயலாத பட்சத்தில் புதிய கருத்துகளும் பொருள்களும் உருவாகும். ஆனால் இம்மாற்றங்களின் கால நிலையையும், அதனால் எற்பட்ட விளைவுகளையும் ஆய்வாளர்கள் அறிந்திருப்பது அவசியமாகிறது. இதனை சீ. அருண் உள்ளார உணர்ந்திருந்தால் இந்நூலினை வெளியிடும் எண்ணமே அவருக்கு உதித்திருக்காது.