
காலை கொஞ்சம் பரபரப்பாகவே விடிந்தது. விமான நிலையங்களுக்குச் செல்லும் பயணங்கள் அனைத்தும் அவ்வாறுதான் மாறிவிடுகின்றன. என்னைப் போன்ற குழப்படி ஆசாமிகளுக்கு விமானப் பயணம் இன்னும் சவாலானது.
Continue readingகாலை கொஞ்சம் பரபரப்பாகவே விடிந்தது. விமான நிலையங்களுக்குச் செல்லும் பயணங்கள் அனைத்தும் அவ்வாறுதான் மாறிவிடுகின்றன. என்னைப் போன்ற குழப்படி ஆசாமிகளுக்கு விமானப் பயணம் இன்னும் சவாலானது.
Continue readingஎண்பதுகளில் பிறந்த மலேசியக் குழந்தைகள் அனைவருக்கும் ‘Fernleaf’ பால்மாவு மூலம் நியூசிலாந்து, நன்கு அறிமுகம் இருக்கும். பசும் புல்வெளியில் மேயும் பெரிய கருப்பு மாடுகள் உடலில், உலக வரைப்படம் போன்ற வெண் வடிவங்கள் திப்பித்திப்பியாய் இருப்பதை தொலைக்காட்சி விளம்பரங்களில் நாங்கள் ஆச்சரியமாகப் பார்த்ததுண்டு. அந்த பசுமையான புல்வெளிகளில் மேயும் பசுவின் பாலை, சிறுவனாக நான் குடித்தபோது அடைந்த பரவசம் இன்று எளிதில் சென்று சேர முடியாத தொலைவில் உள்ளது. அறிவும் புரிதலும் எத்தனை சந்தோஷங்களைக் கெடுத்துவிடுகின்றன.
Continue readingதமிழ் விழா முடிந்தபிறகு பங்கேற்பாளர்களுக்கான விருந்து ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆனால் எங்களுக்கு வேறு திட்டம் இருந்தது.
அன்று பெண்களுக்கான ரக்பி (Rugby) உலகக் கிண்ண விளையாட்டுப்போட்டி ஆக்லாந்து ஏடன் பார்க்கில் (Eden Park, Auckland) நடைபெற்றது. இரவு ஏழு மணிக்கு நியூசிலாந்து அணியும் இங்கிலாந்து அணியும் மோதுகின்றன என செல்வா பரபரப்பாக இருந்தார். எனக்கு எந்த விளையாட்டிலும் ஆர்வம் இருந்ததில்லை. காற்பந்து விளையாட்டு ரசிகர்கள் ஒன்றாகச் சேரும்போது நான் கூட்டத்தில் தொலைந்த சிறுவனாகிவிடுவேன்.
Continue readingநியூசிலாந்து தமிழ்ச் சங்கம் ஏற்பாடு செய்திருந்த தமிழ் மாநாட்டுக்கு நவம்பர் 12 காலையிலேயே புறப்பட்டோம். வெலிங்டனில் அமைந்திருந்த Lower Hutt Events Centreல் மாநாடு நடைபெற்றது. செல்வா அவரது துணைவியார் ஆகியோருடன் நானும் காரில் சென்று இறங்கினேன். செல்வா அவர்கள் நியூசிலாந்தில் ஒரு முக்கிய பிரமுகர் என்பது எனக்கு அப்போதுதான் தெரிந்தது. பல்வேறு அரசியல் தலைவர்கள், அரசு அதிகாரிகள், இயக்கப் பொறுப்பாளர்கள் என அனைவரும் அவரை அறிந்து வைத்திருந்தனர். அனைவரிடமும் செல்வா என்னை அறிமுகம் செய்து வைத்தார். எனது ‘பேய்ச்சி’ நாவல் தடைசெய்யப்பட்டதை பெரும்பாலோரிடம் பகிர்ந்துகொண்டார். புதிய நாவலான ‘சிகண்டி’ திருநங்கைகளை மையமிட்டு எழுதப்பட்டுள்ளதைக் கூறினார். எனக்கு ஆங்கிலம் மந்தம். எனவே தொடர்ந்து உரையாடுவதற்கு நம்பிக்கை இல்லாமல் இருந்தேன்.
Continue readingதங்கா தன் கைப்பேசியில் முதலில் எங்கு போகலாம் எனத் தேடினார். Library Bar எனப் பார்த்தவுடன் “இதென்ன லைப்ரரி” என திகைத்தார். ‘எனக்குத் தெரியாம எவன்டா இங்கன நூலகத்த கட்டுனது’ எனும் அதிர்ச்சியாக இருக்கலாம். அவரது அத்தனை புலன்களும் சுறுசுறுப்பாகின. கேளிக்கைகளுக்குக்கூட இந்த மனிதருக்கு நூலகம் தேவைப்படுகிறதே என அவரைப் பின் தொடர்ந்தேன்.
Continue readingதங்காவுடன் சைக்கிளில் வெலிங்டனைச் சுற்றிய அனுபவம் வாழ்நாளில் மறக்க முடியாதது. மென்மழை தூறிக்கொண்டே இருந்தது. வாகனங்களின் இரைச்சலற்ற சாலையில் எங்கள் பயணம் தொடர்ந்துகொண்டிருந்தது. எனக்குள் உற்சாகம் ஊறிக்கொண்டே இருந்தது.
Continue readingகொஞ்ச நேரம் ‘தி பாப்பா’ அருங்காட்சியகத்தில் தற்காலிகமாக அடைக்கப்பட்டிருந்த மாவோரி கண்காட்சி தளத்தில் அமர்ந்தோம். அத்தளத்தில் இருந்த சிறிய இடைவெளிகள் வழியாக மாவோரிகளின் பொருள்களைப் பார்க்க முடிந்தது. உண்மையில் ஏமாற்றம்தான். மெல்ல நடந்து வெளிச்சுவரில் பிரம்மாண்டமாகத் தொங்கிய மாதிரி ‘வைத்தாங்கி’ ஒப்பந்தத்தைப் பார்த்தேன்.
Continue reading‘தி பாப்பா’ (Te Papa) அருங்காட்சியகத்தில் கட்டாயம் பார்க்க வேண்டிய மற்றுமொரு பகுதி மாவோரிகளின் கண்காட்சிக்கூடம் என தங்கா சொல்லியிருந்தார். உண்மையில் நான் அதைப் பார்க்க ஆவலாக இருந்தேன். சொல்லப்போனால் நியூசிலாந்தில் இறங்கியது முதலே மாவோரிகள் குறித்தே தங்காவிடமும் செல்வா ஐயாவிடமும் தகவல்களைக் கேட்டு பெற்றபடி இருந்தேன். அவர்கள் வாழ்விடத்தில் சென்று நெருங்கிப்பார்க்க வேண்டும் எனும் ஆசையை மலேசியாவிலிருந்து புறப்படும் முன்னரே தங்காவின் கோரினேன். மாவோரிகள் மெல்ல மெல்ல தங்கள் பண்பாடுகளை விட்டு வந்துவிட்டதையும் இன்று அசலான மாவோரி வாழ்வியலைப் பார்ப்பது கடினம் என்றும் கூறியது ஏமாற்றமாக இருந்தது.
Continue readingமிதிக்க மிதிக்க சைக்கிள் முதலில் கால்களுக்கு வசமானது. பின்னர் கைகளுக்கு. உடலில் அதிகம் இறுக்கம் இல்லாததில் அதை அறியலாம். கியர் போடும் நுட்பம் மட்டும் விரல்களில் வந்துசேர கொஞ்சம் தயங்கியது. எந்தக் கருவியையும் இயல்பாகச் செலுத்துதல் என்பது அதனை ஒரு தனித்த கருவி என மறப்பதும் அதை நம் உடலின் ஒரு பாகமென பொருத்திக்கொள்வதிலும்தான் உள்ளது. காதலில் உடல்களும் அப்படித்தான்.
Continue readingபுதிய நிலபரப்புக்குள் செல்வதென்பது என்ன? கண்களை மூடிவைத்திருந்தாலும் பிற அத்தனை புலன்களும் புதுமையை உணர்வது. ஓசையில் காற்றில் வாசத்தில் அந்த பேதம் மூளைக்குள் உணர்த்தப்பட்டுக்கொண்டே இருப்பது. நான் கோலாலம்பூருக்கு வந்த புதிதில் மீண்டும் கெடாவுக்குச் செல்லுதல் என்பது இன்னொரு வகை வாழ்வியலில் நுழைந்துவிட்டு வருவதுதான். இன்று மலேசியா முழுவதும் காட்சியும் சூழலும் கிட்டத்தட்ட ஒரே மாதிரியாகிவிட்டதாகவே உணர்கிறேன். அந்தந்த மாநிலங்களில் உள்ள சில சிற்றூர்களின் அதிகாலைகள் கொஞ்சம் வேறாக உள்ளன. மற்றபடி பெரும்பாலான நகரங்கள் தங்களைக் கோலாலம்பூராக மாற்றிக்கொள்ளவே மெனக்கெடுகின்றன. கெந்திங் மலை என்பது குளிரெடுக்கும் கோலாலம்பூர். லங்காவி அலையடிக்கும் கோலாலம்பூர். இன்னும் சில ஆண்டுகளில் இருக்கின்ற அத்தனை காடுகளையும் அழித்துவிட்டு அரசாங்கம் செம்பனையை நட்டுவிடும். செம்பனையை நட முடியாத இடங்களில் கட்டடங்களை நட்டுவிடும். பின்னர் தேசமெங்கும் ஒரே மணம்; ஒரே குணம்.
Continue reading