
எண்பதுகளில் தமிழ் இலக்கியம் பல்வேறு நவீன தாக்கங்களால் கவரப்பட்டு மாற்றங்களையும் தீவிரத்தையும் பெற்றபோதும் மலேசிய படைப்புகள் அதிகமும் மதியுரை கதைகளாகவே படைக்கப்பட்டன. எளிய குடும்பக் கதைகளாக அவை இருந்தன. வெகு சில எழுத்தாளர்கள் மட்டுமே எதார்த்தவியல் தாக்கங்களையும் முற்போக்கு இலக்கியப் பாதிப்புகளையும் தங்கள் படைப்புகளில் வெளிப்படுத்தினர். தீவிர இலக்கிய உந்துசக்தியாக அவர்கள் இருந்தனர். அவர்களில் சை.பீர்முகமது…