Category: கவிதை

எம்.ராஜா கவிதைகள்

அப்புக்குட்டியும் குட்டித்தங்கமும் புதுமணத் தம்பதி கதை தலைமுனை இழுத்தால் காலைக் கடிக்கிறது. காலைக் காப்பாற்றினால் கடிபடுது என்காது. கொசுக்கள் களவாடிய தூக்கம் தொலைந்துபோன நடுநிசியில் குட்டைப்போர்வையை சுருட்டியெறிந்து சுறுசுறுப்பாய் உட்கார்ந்தபடி புதுமணத் தம்பதிபற்றி சுடச்சுடக் கதைசொல்கிறேன். கவனமாய்க் கேளுங்கள் கனவான்களே கனவாட்டிகளே! கடவுள் வாழ்த்து வீதிநடுவே கொலு வைத்தார்களா கோவிலில் வைத்தபின்னே சுற்றிலும் வீதிசமைத்தார்களா எனக்…

ஸதி கவிதைகள்

அன்பினாலானது… நேசிப்பது எப்படியென்பதை அறிந்துகொண்ட பொழுதில் காற்றும் அறியாது முகிழ்த்தன வார்த்தைகள் இந்த வார்த்தைகளல்ல எனது நேசம் இந்தக் கணத்திலும் அதிகமான எனது நேசத்தினால் நிறைகிறது பிரபஞ்ச வெளி இப்பெரும் வெளியை கோர்த்திருக்கும் நம் கைகளுக்குள் அடக்கத் துடித்தோம் நிறமற்று விரிந்திருக்கும் கடலுள் அமிழ்ந்தோம் மணலில் கரையாத கடலென உணர்வுகளில் அழியாது ஒளிரும் அன்பை நாம்…

யோகி கவிதைகள்

1 வீதியில் புணர்ந்து கொண்டிருக்கும் நாயைப் பார்க்கிறாள் தந்தையின் கைவிரலைப்பற்றி சாலையை கடக்கும் சிறுமி அப்பா நாய் என்ன செய்கிறது? மௌனமான அப்பா… அதைப் பார்க்க கூடாது தலைவலி வரும் என்றார் சிறுமிக்கு தலை வலிக்க ஆரம்பித்தது நாயை திரும்பி பார்க்காமலே அவள் நாயைப் பார்த்துக்கொண்டிருந்தாள்… 2 ஒரு கவிதைக்காக பல மாதமாக முயற்சித்து வருகிறேன்……

புறப்பாட்டின் துயரப்பாடு

பயணச்சீட்டு முன்பதிவு செய்யப்பட்டது பணியிடத்தில் விடுப்பு சொல்லியாகிவிட்டது துணிமணி இத்யாதிகளையும் எடுத்துவைத்தாயிற்று புறப்படும் பொழுதில் எந்த முகாந்தரமுமின்றி மனதைப் பிசைகிறது ஒருசோகம்   ஒரு பிரயாணத்திற்குத் தயாராகிப் புறப்படும் வேளைகளில் பெருஞ்சோகச்சுமை நெஞ்சை அழுத்துகிறது புறப்படும் ஊர் சொந்த ஊராகவே இருந்ததில்லை பெரும்பாலும் சேரும் ஊர்கூட தூரதேசப் பிரதேசத்தில் இல்லை இரவு கிளம்பினால் விடியலில் அடைந்துவிடும்…

கோடைகால மதியப் பொழுதுகள்

மதியம் உறங்கி எழுந்தால் பெரும்பாரத்தொடு  மனம் கனத்துவிடுகிறது.   விடுமுறை நாளில் வெறிச்சோடி நீண்டுகிடக்கிறது வீதி. கதவுஜன்னல் சாத்திய வீடு படுத்துக்கிடக்கும் தெருநாய் நகராது நிற்கும் வாகனம் என அசைவற்றது எதைக்கண்டாலும் கூடிவிடுகிறது விசனம்.   கிளைகள் அசையக் குலுங்குகிறது பட்டுபோய்விட்ட மரம். ஏதொயிரு கிளைகள் நடுவே குடியிருந்ததற்கு சாட்சியாய் கட்டிய கூட்டை விட்டுப்போன பறவை…

போர்வைக்குள்

மேற்புறத்து மேடுபள்ளங்களைக் கொண்டு யூகிக்கமுடியவில்லை. கட்டில்மீது குவிந்துகிடக்கும் போர்வைக்குள் பதுங்கியிருக்கிறது ஏதோ ஒரு ஜந்து.   விளிம்புதாண்டியும் நீண்டிருக்கின்றன கால்கள். நகங்களில்லை. போர்வையின் நுனிபற்றி உயர்த்திப் பிடிக்கிறேன். கால்களை உள்ளிழுத்துக்கொள்கிறது.   கரம் நுழைத்துத் துழாவியும் அகப்படவில்லை.கடிக்கவுமில்லை. இன்னமும் உயர்த்துகிறேன். உள்ளோடி ஒளிந்துகொள்கிறது.   சரிதான்.வெளிச்சம்கண்டு பயப்படுகிறது போலும். விளக்கை அணைத்தால் வெளிவரக்கூடும்.   சுவிட்சைத்…

முதுமையின் குளியலறை

இளமைக்காலங்களின் அழுக்குகளை துவைத்தெடுப்பதற்கு முதுமைக்குக் கிடைத்த “புனித நதி” குளியலறைகள்.. மீண்டும் மீண்டும் வந்துப் போகுது இந்தக் குளியலறைக்கு பகிரங்கப் படுத்தாமலேயே  கழுவி எழுக்கமுடியாத அழுக்குகளை சுமந்துகொண்டு நதியும் முதுமையும் இதுவரையிலும் ஓடிக்கொண்டிருக்கிறது யாரோ பேச்சைகேட்டு

மெழுகாய்க் கனிந்த ஆஸ்பத்திரியில் புன்னகையைத் தவறவிட்ட பெண்

மெழுகாய் உருகிக் கொண்டிருந்த ஆஸ்பத்திரியில் படுத்திருந்தேன் இருபத்தி நான்காம் அறை நாற்பத்தி ஏழாம் இலக்கக் கட்டில். புன்னகையை வழியிலெங்கோ தவற விட்ட பெண் அங்குமிங்கும் நடக்கிறாள் தடுமாறிக்கொண்டு. மருத்துவத் தாதி என்பது சிகிச்சைக்கும் ஆதரவுக்கும் இடையில் கனிந்த மலர் என்பதுவா உதிர்ந்த மலர் என்பதுவா என்றறிய விரும்பிய மனதில் கத்திகளும் காயங்களும் மாறி மாறி விழுகின்றன.…

கடற்கரையில் நான் நின்ற பின்னேரம்

ஒரு பின்னேரம் பாழடைந்து போனதைக் கண்டு தலைகுத்தி விழுந்தேன் கண்ணீருக்குள். என்ன வஞ்சமென்று தெரியவில்லை ஒரு காக்கையுமில்லை அந்த மாலையில் கரைந்து கரைந்து அதை மெருகேற்ற கடல் அழவும் முடியாமல் சிரிக்கவும் முடியாமல் தளம்பிக் கொண்டிருந்தது என்முன்னால். என் முகம் பார்க்கத் திராணியற்று வெம்பியது அது. கதறிக் கதறி அழவேண்டும் போலிருந்தது எனக்கு. அது பின்னேரமாக…