
1 2023ல் நித்யவனத்தில் நிகழ்ந்த குரு நித்யா காவிய முகாமில் நீலி இதழாசிரியரும், எழுத்தாளருமான ரம்யாவுக்குப் பெண்ணெழுத்து சார்ந்து ஓர் அமர்விருந்தது. அதில் ரம்யாவிடம் கேட்கப்பட்ட ஒரு கேள்வி “நீங்கள் பெண்ணெழுத்தை முதன்மையாக வைத்து பத்திரிகை தொடங்கியிருக்கிறீர்கள், அதற்கு ‘நீலி’ என்ற ரத்தம் குடித்துக் கொல்லும் நாட்டார் தெய்வத்தின் பெயரை வைக்க காரணம் என்ன?” என்பதாக…