Category: நேர்காணல்

“தமிழ் எழுத்தாளர் சங்கம் தக்க விழிப்புணர்வை தமிழ் எழுத்தாளர்களுக்கு ஏற்படுத்தவில்லை”- உதயசங்கர் எஸ்பி

utaya 03உதயசங்கர் எஸ்பி (Uthaya Sankar SB)- மலேசிய தேசிய இலக்கிய வெளியிலும் தமிழ் இலக்கிய வெளியிலும் புகழ்பெற்ற பெயர். ‘அவ்லோங்’ தைப்பிங்கில் (Aulong,Taiping) பிறந்து வளர்ந்த இவர், தேசிய மொழியில் எழுதும் இந்திய எழுத்தாளர்களில் முக்கியமானவர். ஆங்கில மொழியிலும் இலக்கியம் படைக்கும் இவர் ‘Shafie Uzein Gharib’, ‘Hanumam 0’, ‘Leonard Loar’ ஆகிய புனைப் பெயர்களிலும் எழுதியுள்ளார்.

ஆரம்பக் கல்வியை S.R.K Convent Aulongகிலும் இடைநிலைக் கல்வியை S.M.K Darul Ridwanனிலும் முடித்த இவர் மலாயாப் பல்கலைக்கழகத்தில் மலாய் இலக்கியத் துறையில் பட்டம் பெற்றவர். ஆரம்பப் பள்ளியிலேயே கதைகளை வாசிக்கத்தொடங்கி, இடைநிலைப்பள்ளிகளில் கதைகள் எழுதத் தொடங்கினார். இடைநிலைப்பள்ளி இதழ்களின் பக்கங்களை இவரின் எழுத்துக்கள் அலங்கரித்துள்ளது.

வெள்ளை வேன் வளர்ந்த கதை

லீனா மணிமேகலையை வல்லினம் இதழுக்காக சிறு நேர்காணல் செய்தேன். தமிழில் கலையில் தீவிரமாக இயங்குபவர்கள் கவனிக்கப்படுவதே இல்லை என்ற எண்ணம் மீண்டும் தோன்றியது. ‘வெள்ளை வேன் கதைகள்’ ஆவணப்படம் உருவான கதை இந்த நேர்காணலில் அத்தனை சுவாரசியமாய் வெளிப்பட்டுள்ளது. தான் இயங்கும் ஒரு கலையின் மீது தீராத காதலும் கட்டற்ற தீவிரமும் கொண்ட ஒருவரால் மட்டுமே…

தேசியமொழி மற்றும் தேசிய இலக்கிய விரிவாக்கத்துறையும் தமிழ் இலக்கிய அமைப்புகளின் அக்கறையின்மையும்!

டேவான் பகாசா டான் புஸ்தகா (DBP) தேசிய மொழி காப்பகத்தின் கீழ் Jabatan Pengembangan Bahasa Dan Sastera எனும் தேசியமொழி மற்றும் தேசிய இலக்கிய விரிவாக்கத்துறை 2009-ஆம் ஆண்டு நிருவப்பட்டு செயல்பட்டு வருகிறது. இத்துறையின் முதன்மையான நோக்கங்களிள் ஒன்று மலேசிய நாட்டின் பல்லின மக்களிடையே தேசிய மொழியையும் தேசிய இலக்கியத்தையும் வளப்படுத்துவதோடு விரிவாக்கம் செய்வதாகும்.…

“மனித விடுதலை போல் கடவுள் விடுதலையும் முக்கியமான ஒன்று”

டாக்டர் மா.சண்முகசிவா கெடா மாநிலத்தில் உள்ள அலோஸ்டார் நகரில் பிறந்தவர். தமிழகத்தில் மானாமதுரையில் (சிவகங்கை மாவட்டம்) பூர்வீகமாகக் கொண்ட அவர் தந்தை கெடாவில் ‘ஜெய் ஹிந்த் ஸ்டோர்’ எனும் மளிகை கடை நடத்துவதிலிருந்து தன் வாழ்வை தொடங்கியுள்ளார். ஆரம்பக்கல்வியை ஆங்கிலப்பள்ளியில் கற்றாலும் இராமசாமி செட்டியார் எனும் தமிழ் ஆசிரியர் வீட்டில் வந்து சண்முகசிவாவுக்குத் தமிழ் போதித்தார்.…

உரிமை படி (Royalty): ஒரு விவாதம்

கேள்வி: தமிழ் நூல்கள் குறைவாக விற்பனையாகும் சூழலில் ராயல்டி கேட்பது முறையா? கே.பாலமுருகன் : மலேசியாவில் தமிழர்கள் சிறுபான்மையினர்தானே, பிறகு ஏன் உரிமையைப் பற்றி பேச வேண்டும் அதனைக் கேட்க வேண்டும். வாருங்கள் அனைவரும் காலம் முழுக்க அடிமைகளாகவே இருக்கலாமா? விற்பனையின் அளவு பொருத்தோ எண்ணிக்கையைப் பொருத்தோ உரிமைகள் தீர்மானிக்கப்படுவதில்லை. எப்படியிருப்பினும் ராயல்டி என்பது தனி…

சமூகம் உருவாக்கி வைத்திருக்கும் போலியான இலக்கிய புரிதல்களை என் கதைகள் உடைக்கும்

செப்டம்பர் 15 ஆம் திகதி நடக்கவிருக்கின்ற கலை இலக்கிய விழா 5 ல் மூன்று இளம் எழுத்தாளர்களின் நூல்கள் வெளியீடு காணவிருக்கின்றன. மலேசிய சிறுகதை உலகில் முக்கிய ஆளுமையாக இருக்கும் கே.பாலமுருகனின் ‘இருளில் தொலைந்தவர்களின் துர்கனவு’ எனும் நூல் அதில் ஒன்று. எழுத்தாளர் கே.பாலமுருகன் தனது அந்த நூலைப்பற்றி கருத்துகளைப் பகிர்ந்தார். கேள்வி : உங்களுடைய தனி அடையாளமே…

கவிதைகள் இறுக்கமான சூழ்நிலையிலிருந்து கொஞ்ச காலம் விடுபடச் செய்திருக்கிறது!

செப்டம்பர் 15 ஆம் திகதி நடக்கவிருக்கின்ற கலை இலக்கிய விழா 5 ல் மூன்று இளம் எழுத்தாளர்களின் நூல்கள் வெளியீடு காணவிருக்கின்றன. பூங்குழலி வீரன் அவர்களின்  ‘நிகழ்தலும் நிகழ்தல் நிமித்தமும்’ எனும் கவிதை தொகுப்பும் அதில் ஒன்று. அவருடனான சந்திப்பு… கேள்வி: வல்லினம் வெளியீடாக வரவிருக்கும் உங்கள் கவிதை நூல் பற்றி அறிமுகம் செய்யுங்கள். வல்லினம்…

தீவிரமான ஒரு வாசிப்பு தளத்தை நோக்கி சக வாசகர்களை நகர்த்தும் முயற்சியே என் கட்டுரைகள்

செப்டம்பர் 15 ஆம் திகதி நடக்கவிருக்கின்ற கலை இலக்கிய விழா 5 ல் மூன்று இளம் எழுத்தாளர்களின் நூல்கள் வெளியீடு காணவிருக்கின்றன. மலேசிய மற்றும் தமிழக நாவல்கள் தொடர்பான மனப்பதிவுகளை முன்வைத்து ம.நவீன் எழுதியுள்ள ‘விருந்தாளிகள் விட்டுச்செல்லும் வாழ்வு’ எனும் நூல் அதில் ஒன்று. எழுத்தாளர் ம. நவீன் தனது அந்த நூலைப்பற்றி கருத்துகளைப் பகிர்ந்தார். கேள்வி…

‘கற்பனையே பிரதானம்’ – அறிவியலாளர் முகிலன்

முகிலனின் ஆரம்பக் கல்வியெல்லாம் சிலாங்கூரிலுள்ள செர்டாங்  தமிழ்ப்பள்ளிதான். எஸ்பிஎம் தேர்வில் 11 ஏக்கள் பெற்ற முகிலன் அமெரிக்க புளோரிடா மாநிலத்திலுள்ள (Embry Riddle Aeronautical University) பல்கலைக்கழகத்தில் சேர்ந்தார். அப்பல்கலைக்கழகத்தில்  “விண்வெளிப் பொறியியல் மற்றும் விண்வெளி அறிவியல்” (Aerospace Engineering and Space Science) மாணவராக இருந்து தன் இலக்கை அடைய கற்றார். 11ஏக்கள் பெற்று…