
வனம் என்னை அழைத்தது ஆயிரம் பூக்களின் நறுமணங்களுடன் எனது குருதிநாளங்களில் இப்பொழுதுமுண்டு யட்சிகளினுடையதைப்போன்ற அருவிகளின் பெருஞ்சிரிப்பு எனது இளமையை இவ்வனங்களுக்கும் எனது இதயத்தை அநாதரவாகித் துயருறுவோரின் வேதனைகளுக்கும் கையளித்தேன் எனது கால்களில் இப்பொழுதுமுண்டு குன்றுகளில் ஓடித்திரிந்த கொலுசுகள் அணிந்திராத சிறுபருவம் எனது தலைக்குள் ஓடைகளில் குதித்தாடிய காதலற்ற இளம்பருவம் இந்த…