Category: கட்டுரை

டாக்டர் மா.சண்முகசிவா சிறுகதைகள் : நவீன அழகியலின் முகம்

இலக்கிய விமர்சனம் என்பது மலேசியாவில் மிகச் சிக்கலான ஒரு விடயம். விமர்சனத்தை எதிர்கொள்ளவும் ஏற்றுக்கொள்ளவும் போதுமான பக்குவம் மலேசிய இலக்கியச் சூழலில் இல்லை. ஓர் எழுத்தாளனோ அல்லது வாசகனோ ஒரு படைப்பை வாசித்துவிட்டு அதை விமர்சனம் செய்தால் விமர்சனம் செய்தவன் கடுமையான விமர்சனத்துக்கு ஆளாவதுதான் இங்கே நிலவும் சூழல். ஓர் இலக்கியப் படைப்பு மீது வைக்கப்படும்…

கோ.புண்ணியவானின் சிறுகதைகள் : எதார்த்தத்தின் முகம்

மலேசிய நவீனத் தமிழ் கலை இலக்கியப் படைப்புலகம் கவிதை சிறுகதை நாவல், நாடகம், கட்டுரைகள் போன்ற பல்வேறு வடிவங்களால் நிறைந்தது.  ஆயினும் சிறுகதை வடிவமே  இங்கே அழுத்தமான இலக்கிய நகர்ச்சியைக் காட்டுகிறது என்று துணிந்து கூறலாம். புதுக்கவிதை பலருக்கும் இலக்கியத் தூண்டல்களை உருவாக்கித் தந்தாலும் அது சிறுபிள்ளை விளையாட்டுப்போல் மெத்தனமாகப் படைக்கப்படுவதாலும் பலகீனமான சொல்லாட்சி, கருத்து…

அரு.சு.ஜீவானந்தன் சிறுகதைகள்: முற்போக்கு அழகியலின் தொடக்கம்

ரசனை விமர்சனம் இறுக்கமான விதிமுறைகளைக் கொண்டதல்ல. அது வாசிப்பை மையப்படுத்துவது. வாசிப்பின் மூலம் ஒரு பிரதிக்கும் வாசகனுக்குமான தொடர்பாடலே ஓர் இலக்கியத்தின் தன்மையை ஆராய்கிறது. ‘வாசிக்கும் அனைவரும் வாசகனா?’ எனக்கேட்டால் இல்லை என்பதே பதில். பல முக்கியமான இலக்கியப்பிரதிகளை வாசித்த நண்பர்கள் எனக்கு உண்டு. ஒரு சிறுகதையை வாசித்து முடித்தபின் அவர்களால் அதில் உள்ள தகவல்களை…

இருமொழி பாடத்திட்ட (DLP) விவாதம் – ஓர் எதிர்வினை

நண்பர் அனுப்பியிருந்த டிஎல்பி ((DLP)  விவாதக் காணொளியை  (‘நடப்பது என்ன?’) ஒரு மணி நேரம் செலவு செய்து பார்த்து முடித்தேன். உண்மையில், இருமொழித் திட்டம் மீதான விவாதங்கள் 2015 முதலே மிக விரிவாக நடைபெற்றிருக்க வேண்டும். டிஎல்பி திட்டம் குறித்த முழுத்தெளிவும் பெற்றோருக்கு சென்று சேர்ந்திருக்க வேண்டும். ஆனால், கடந்த ஆண்டு மிக சொற்பமான அமைப்புகளும்…

முன்னுரை

ஒரு நூலினை தனித்துவம் மிக்கதாகக் காட்ட வடிவமைப்பு, படங்கள், வண்ணம், அன்பளிப்பு, விளம்பரம் எனப் பல்வேறு சந்தைப்படுத்தும் முயற்சிகள் முன்னெடுக்கப்படுகின்றன. அவை நூல், நூல் அல்லாதவைகளுக்கும் (எழுத்துக் குப்பைகளுக்கும்) ஒரே மாதிரியாகப் பயன்படுவது எல்லாக் காலங்களிலும் தவிர்க்க முடியாதது. சில சமயங்களில் எழுத்துக் குப்பைகளுக்குக் கிடைத்துவிடும் வெளிச்சம் தரமான நூல்களுக்குக் காலம் தாழ்த்தியோ அல்லது கடைசிவரை…

பாதசாரியின் “மீனுக்குள் கடல்” தொகுதியை முன்வைத்து…

அவன் அவளை தன்னைக் காட்டிலும் அதிகமாய் நேசிக்கிறான். ஆனால் மற்றொருவன் மீதாக தனதன்பைப் பொழிபவளாய் இருக்கிறாள் அவள். எப்படியேனும் தனக்கானவளாய் அவளை மாற்றிட எதையும் செய்யத் தயாராயிருப்பவன் அத்தருணத்தை எதிர்நோக்கிக் காத்திருக்கிறான். தன்னிலை மறந்து மனதின் மிருகம் விழித்துக் கொண்டதொரு சமயம் தடம் புரளும் அவள் வாழ்க்கை. வேறெங்கும் நகலவியலா சூழல். நம்பிக்கையின் அத்தனை சாத்தியங்களும்…

பாரியின் ‘சத்து ரிங்கிட்` :வறுமையின் குறியீடு

என் பள்ளிப்பருவம் அவ்வளவு உவப்பானதாக இருந்ததில்லை. வீட்டில் வறுமை கோலோச்சியதே என் எல்லாப் பின்னடைவுகளுக்கும் காரணமாக இருந்துவந்தது. என் தந்தையார் நான் படிவம் இரண்டு படிக்கும்போதே வேலையிலிருந்து ஓய்வு பெற்றிருந்தார். அம்மா உழைத்தால் மட்டுமே ஆறு வயிறுகளுக்கு உணவளிக்க முடியும் என்ற இக்கட்டான நிலை. என் இடைநிலைப் பள்ளிக்கல்வி பொருளாதாரச் சிக்கலால் இடையிலேயே முறிந்துவிடும் ஆபத்தை…

இனவரைவியல் நோக்கில் சிறுமலைப் பளியர்

இந்தியாவில் காணப்படும் பல்வேறு இனக்குழுக்களில், பழங்குடியினரின் எண்ணிக்கை குறைவுதான். தனித்த அடையாளங்களும், மற்றவர்களிடமிருந்து தங்களைத் தனிமைப்படுத்தி வாழும் குணமும் இப்பழங்குடியின மக்களுக்குண்டு. இந்திய விடுதலைக்கு முன்னும் பின்னும் பெரும்பகுதி நேரடி அரசியல் அதிகாரத்திற்கு உட்படாமலேயே இவர்கள் வாழ்ந்துவருகின்றனர். மேலும், அண்மைக்காலம்வரை இவர்களில் விரல்விட்டு எண்ணக்கூடியவர்களே கல்விகற்றவர்களாக அறியப்படுகின்றனர். இவர்களது வாழிடம், பண்பாட்டுக் கூறுகள் போன்றவை, மற்ற…

மலேசிய சீன இலக்கியம் : ஒரு சிறுகதைத் தொகுப்பினூடாக அறிமுகம்

மலேசியாவில் பல்வேறு மொழிகளிலும் இலக்கியங்கள் படைக்கப்படுகின்றன. இவற்றுள் மலாய் இலக்கியம் தேசிய இலக்கியமாக விளங்குகிறது. இதர மொழிகளில் படைக்கப்படும் இலக்கியங்கள் குறிப்பிட்ட ஒரு சமூகத்தின் படைப்பாகவே பார்க்கப்படுகின்றன. இன்று வரையிலும் தமிழ் மற்றும் சீன எழுத்தாளர்கள் தங்களது படைப்பிலக்கியங்களைத் தேசிய இலக்கியமாக அறிவிக்கக் கோருகின்றனர். அறிவித்தபாடில்லை. இந்நிலையில் சீன இலக்கியத்தில், பரவலாகப் பயன்படுத்தப்பட்ட சொல்லாடல் ‘மலேசிய…

ஷாஹானுன் அமாட் : அதிகாரங்களை நோக்கிய நுண் பார்வையாளர்

இலக்கியம் என்பது ஓர் இலக்கை நோக்கமாக வைத்து மொழியின் துணையுடன் இயங்குதல் என்பது பொதுப்படையான விளக்கம்தான். இலக்கியப் படைப்புகள் எழுதப்படும் நோக்கம் என்னவாக இருக்கும் என்பதைக் கணிப்பது அவ்வளவு எளிதன்று. ஒரு செறிவான இலக்கியப் படைப்புக்குள் சூல்கொண்டிருக்கும் மையத்தைத் தொடுவதற்கு வாசகனுக்கு வாசிப்புப் பயிற்சி மிக அவசியமாகிறது. இலக்கிய விமர்சனம் மட்டுமே இப்பணியைக் கொஞ்சம் சுலபமாக்கித்…

எம்.ஏ இளஞ்செல்வன் என்னும் கை தேர்ந்த கதை சொல்லி

என் இடைநிலைக் கல்வியை முடித்துவிட்டு வேலைக்காக அலைந்து கொண்டிருந்தேன். நெடுநாட்கள் அலைந்து அலைந்து பலனற்றுச் சோர்ந்து போயிருந்தேன். என்னோடு படித்தவர்கள் என் கண் முன்னாலேயே வேலைக்காகி கை நிறைய சம்பளம் பெறுவதைப் பார்க்கும்போது மனம் விம்மியது. புத்தம் புதிய ஆடைகள் உடுத்தி, பெருமையோடும் மிடுக்கோடும் அவர்கள் வேலைக்குச் செல்வதைப்  பார்க்கும்போது பொறுமினேன். வீட்டில் வெட்டியாக இருப்பதைப்…

பிரமிளின் ஒரு கவிதை: சிற்றாய்வு

“இன்றைய தமிழ்க்கவிதையின் முன்னோடி பிரமிள் தான். தத்துவச் சிக்கல்களைத் தீர்த்துக்கொண்டு, மரபையும், நவீனத்துவத்தையும் செரித்து முன்னோக்கிப் பாய்ந்தவர் பிரமிள்” என்று தேவதேவன் ஒரு நேர்காணலில் பிரமிள் பற்றிக் கூறியிருந்தார். அவரது கூற்று நியாயமானது என்று பிரமிளின் படைப்புலகமே பறைசாற்றும். பிரமிள் பற்றிய முன்னுரைகள் இல்லாமலே அவரது கவிதை மீதான சிற்றாய்வைப் பரிசோதித்து விடலாம். காவியம் என்ற…

வாழ்வதின் பொருட்டு : உலகமயமாக்கலும் புலம் பெயர்ந்தோர் எழுதிய நாவல்களும்

‘வெஞ்சின வேந்தன் பகை அலைக் கலங்கி வாழ்வோர் போகிய பேர் ஊர்ப் பாழ் காத்திருந்த தனி மகன் போன்றே’ நற்றிணை – 153. தனிமகனார். பலநாடுகளில் நிகழ்ந்த உள்நாட்டுக் கலவரங்கள், இன அழித்தொழிப்புகள், போர், அரசியல் காரணங்கள், கல்வி, வேலைவாய்ப்பு போன்ற காரணங்கள் மட்டுமே புலம்பெயர்தலை உலகமயமாக்கலை ஏற்படுத்தியது என்று கூற முடியாது. இரண்டாம் உலகப்போருக்குப்…

வல்லினம் போட்டி சிறுகதைகள்- ஒரு பார்வை

எட்டாவது வல்லினம் கலை இலக்கிய விழாவை முன்னிட்டு நடத்தப்பட்ட சிறுகதைப் போட்டிக்கு மொத்தம் 137 கதைகள் வந்திருந்தன. பழையவர்கள், புதியவர்கள் என்று பலரும் இப்போட்டியில் முனைப்புடன் கலந்து கொண்டிருந்தனர். கதைகளை அஞ்சலிலும் மின்னஞ்சலிலும் அனுப்பியிருந்தனர்.  எல்லா கதைகளையும் தொகுத்து  படைப்பாளர் பெயரினை நீக்கி எண்ணென்று பேரிட்டு வாசிக்கத் தொடங்கினோம். முதல் சுற்று வாசிப்பில் கதையாக இருந்த…

தகவல் சுழற்சி (Information Cycle)

தகவல் தேடல் வேட்டையை எங்கிருந்து தொடங்குவது? தகவல்கள் உற்பத்தி செய்யப்படும் முறை, பகிரப்படும் விதம் மற்றும் தகவல்களில் ஏற்படக்கூடிய சாத்தியமான மாற்றங்களை விளக்குவதற்கு ‘தகவல் சுழற்சி’ என்ற சொற்பதம் பயன்படுத்தப்படுகிறது. செய்தியாக மாறக்கூடிய தன்மை உடைய நிகழ்வுகள் ஒவ்வொரு காலத்திலும் எவ்வாறான மாற்றங்களுக்கு உட்படுகிறது என்பதைப் புரிந்து கொள்வதன்மூலம் நமக்குத் தேவையான தகவல்களை அடையாளம் காணவும்…