
தத்துவ நூல்கள் எனக்கு போதை தரக்கூடியவை. தத்துவக் கருத்துகள் மிக எளிமையாக புரிவது போல் ஆரம்பித்து சற்றைக்கெல்லாம் எதுவுமே புரியாத நிலையில் என்னை விட்டுவிடக்கூடியவை. இருப்பவை இல்லாதவைகளாகி விடும்; இல்லாதவை இருப்பவைகளாகிவிடும். ஆயினும் அந்தப் புரிதலும் புரியாமையும் கலவையாகி ஒரு போதையாக மனதில் வியாபித்து நிற்கும். மாலை நேரத்து வெயிலில் மினுமினுக்கும் மழைத்துளி போல அவை…