Category: கட்டுரை

ஒரு மசாலா அறிக்கைக்கு பதில்

மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் ஆண்டு சிறுகதை தேர்வு நிறுத்தப்படுகிறது என்ற எழுத்தாளர் சங்க செயலாளர் குணநாதனின் அறிக்கையைப் படிக்க நேர்ந்தது. சுரண்டலுக்குப் பின்பான எல்லாவித பாதுகாப்பு அம்சங்களைவிடவும் கழிவிரக்கத்தைத் தேடிக்கொள்வது பொதுவாகவே நடப்பில் உள்ள தப்பிக்கும் சூழல்தான். எழுத்தாளர் சங்கம், குணநாதன் மூலம் அதை மீண்டும் நிரூபித்துள்ளது. நான் ஆசிரியராக இருந்து வழிநடத்தும் வல்லினம்.கோம்…

மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் இலக்கிய மோசடி!

கடந்த 15.08.2013 ஆம் நாள் மக்கள் ஓசையில் வெளிவந்த மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் அறியாமைகள், இயலாமைகள் குறித்த அதன் செயலாளர் ஆ. குணநாதனின் அறிக்கையைப் படித்தோம். இத்தனைநாள் எழுத்தாளர்களின் காப்பிரைட் சட்டத்திட்டங்கள் குறித்து அறியாமல் இருந்தது சங்கத்தின் மிகப்பெரிய குற்றமாகும். 5 ஆண்டுகளாக வருடாந்திர சிறுகதைகளைத் தேர்ந்தெடுத்துத் தொகுப்பு போடும் செயல்பாட்டில் தன்னை ஈடுப்படுத்தி வந்த…

ஆண்களின் பெருந்தன்மையினால் மலேசிய பெண்கள் இலக்கியத்தில் இயங்குகிறார்கள்!

12 ஜூலையில் க.பாக்கியம் ஏற்பாட்டில்  ‘மலேசியத் தமிழிலக்கியத்தில் பெண் இலக்கியவாதிகள்’ என்ற நூலின் அறிமுகவிழா நடந்தது. அந்த நிகழ்வில் மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்க தலைவர் பெ.ராஜேந்திரனும் முனைவர் கிருஷ்ணன் மணியம் அவர்களும் பேசிய சில விடயங்கள் விவாதத்துக்குறியதாகச் சமூக வலைத்தளங்களில் உருவெடுத்ததன. அதன் எதிரொலியாக ராஜேந்திரன் மன்னிப்புக்கேட்கும் வரை எழுத்தாளர் சங்க நிகழ்வுகளைப் புறக்கணிப்பது…

சுயகௌரவம் இழக்கும் எழுத்தாளர்கள்…

எனக்கு தமிழில் கெட்ட (கொச்சை) வார்த்தைகள் தெரியும். நான் பேசதான் மாட்டேன். நேரடியாக ஒருவர் மீது எனக்கு கோபம் வரும் போது, நான் பேசும் வசனம்இது. கோபம் மேலும் தலைக்குமேல் ஏறும் போது நான் பேசும் வசனம்தான் இது. என் கோபத்தை மேலும் அதிகப்படுத்தினால் பேசிவிடுவேன் மிகச்சிறந்த கொச்சையை. இப்படியான ஒரு கோபம்தான் எனக்கு ஏற்பட்டது…

இலக்கியத்திற்கு பால் பேதங்கள் தேவையற்ற ஒன்று

முதலில் இவைகளைப் படியுங்கள் : – * கள்ளக்காதலனுடன் தாய் சல்லாபம், அதைப்பார்த்துவிட்ட மகனை காதலனும் அந்தத்தாயும் கொலை செய்தனர். *கணவர் தமது மனைவியை மாதவிடாய் காலகட்டத்தின் போது உடலுறவு கொள்ள அழைத்ததால்- மனைவி அவனை விவாகத்து செய்தாள். *குழந்தையை பால்வல்லுறவு செய்துவிட்டு, அதனின் பிறப்புறுப்புக்குள் நீண்ட குச்சியை சொரூகிய காமுகன். *வாய்வழி புணரும்போது கணவன்…

மலேசிய எழுத்தாளர் சங்க நிகழ்ச்சிகளைப் புறக்கணிக்கிறோம்..!

நேரடியாக விஷயத்துக்கு வந்துவிடுகிறேன். மிக சமீபத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில்; இதுவரையில் பெண்களுக்கு எழுத்தாளர் சங்கம் கொடுத்து வந்த மரியாதை, பரிசு , முக்கியத்துவமெல்லாம், அவர்களின் எழுத்துகளை படித்ததால்தான் என நினைந்திருந்த அவர்களுக்கும் சரி, இன்னமும் எழுத்தாளர் சங்கத்தில் அதி பயங்கரமாக உழைத்துக் கொண்டிருக்கும் பெண்களுக்கும் சரி… சரியாக புரிய வைத்துவிட்டார் சங்கத்தலைவர். இதுவரையில், ‘கொடுத்தது’…

பெண்ணிய இலக்கியமும் வரம்புகளும்.

கடந்த வாரம் தலைநகரில் நடைபெற்ற ஒரு நிகழ்வில் முனைவர் கிருஷ்ணன் மணியம் அவர்கள் தமிழ்நாட்டில் பெண்ணிய இலக்கியம் வரம்பு மீறி செல்வதாகவும் நம் நாட்டில் அந்த நிலை இல்லை என்றும் பேசியதாக தகவல் அறிந்தேன். அந்த உரையை முழுமையாக கேட்காததால் அது பற்றிய கருத்துகளை சொல்வது இயலாது. ஆனால் மேற்கண்ட செய்தியில் ‘பெண்ணிய இலக்கியம்’ ,…

நானும் ரௌத்திரம் பழகுகின்றேன்.

அந்த நிகழ்விற்குப் போக வேண்டும் என்ற எந்தத் திட்டமும் எனக்கில்லை. நிகழ்விற்கு முதல் நாள் தானும் மணிமொழியும் நிகழ்விற்குப் போகவிருப்பதாக யோகி அழைத்திருந்தார். நாங்கள் மூவரும் இப்படியான பொது நிகழ்வுகளில் சந்தித்து நீண்ட நாள்களாகிறது. அதற்காகவே, இந்த “மலேசிய தமிழ் இலக்கியத்தில் பெண்ணிலக்கியவாதிகள்” நூல் வெளீயிட்டு விழாவிற்குச் செல்லலாம் என முடிவெடுத்திருந்தேன். ஏற்கனவே, இந்த நூல்…

பெருந்தன்மையும் பெண்ணியமும்

மற்றவர் பிரச்சனையில் மூக்கை நுழைக்கும் பழக்கம் எனக்கு கிடையாது. எதுவும் தெரியாமல் மற்றவரைப் பற்றி பேசுவதும் கிடையாது. மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் தலைவர் பெ.இராஜேந்திரன் (பெ.இரா) அவர்களின் விசயத்திலும் இதுவரை அப்படியே இருந்துள்ளேன். மலேசியத் தமிழ் இலக்கியத்தில் அவரைப் பற்றிய விமர்சனங்கள் பரவலாக இருந்தாலும் அதை எதையும் மனதில் வைத்து நான் இதை எழுதவில்லை.…

இலக்கியத்தின் மணல் தூண்கள்…

நான் இதை எழுத தொடங்கும்முன்… சிலவற்றை உங்கள் நினைவில் முன்வைக்க விரும்புகின்றேன்… இது கட்டளையாகக்கூட எடுத்துக்கொள்ளுங்கள். இந்த எதிர்வினையைப் வாசிக்கும் முன் கீழ்கூறவரும் எண்ணங்கள் உங்களிடம் இருந்தால் அதை அவிழ்தெரிந்துவிட்டு இதைப்படிக்க தொடங்குவீர் எனநம்புகிறேன். 1.குறைக்கூறவந்துட்டா… 2.ஒரு நிகழ்சியைக்கூட சுயமா நடத்தியதில்லை, ஆனாபேசவந்துட்டா… 3.பெண்ணியம் பேச இவங்களுக்கு என்ன தகுதி இருக்கு?… 4.இதுங்களுக்கு என்ன தெரியும்?…

சீன வானொலி இணையத்தில் தமிழ் மொழி

உலகின் எங்கோ ஒரு மூலையில் வாழும் பத்துப் பதினைந்து சீனர்கள், உலகம் முழுவதும் வாழும் தமிழர்களிடம் தூய்மையான தமிழில் பேசுகின்றார்கள். அற்புதமானத் தமிழ் நிகழ்ச்சிகளைப் படைக்கின்றார்கள். புதிய புதிய தமிழ்க் கலைச் சொற்களைப் பயன்படுத்துகின்றார்கள். சீனாவிலே ஒரு தமிழ் வானொலி சிந்து பைரவி பாடுகிறது. அந்தத் தமிழைக் கேட்கும் போது நம் நெஞ்சம் எல்லாம் ஆனந்த…

பழக தெரியவேண்டும், பார்த்து நடக்கவேண்டும்!

ஆண் நட்பு என்றாலே அலர்ஜியாகிறது இப்போதெல்லம். இப்போது என்றல்ல எப்போதுமே இந்த உணர்வு என்னிடம் நீறுபூத்த நெருப்பாய் அணையாமல் இருப்பதை நான் தொடர்ந்து உணர்ந்துவந்துள்ளேன். எவ்வளவு அன்பாக கள்ளங்கபடமில்லாமல் பழகினாலும், அந்த உறவில் எப்படியாவது காமம் நுழைந்துவிடுகிறது. அந்தப்பெண் விரும்பியோ விரும்பாமலோ சம்பந்தப்பட்ட அந்த ஆண் நண்பன், எதோ ஓர் உள்உணர்வை மறைத்து வைத்துக்கொண்டுதான் உறவாடியபடி…

பாலினம்

“பாலினம்” (Gender) என்பது ஒருவரின் உடல் மற்றும் உணர்வு சம்மந்தப்பட்ட விஷயம். “ஆண், பெண்” என்ற இரண்டு எல்லைகளை வகுத்துக்கொண்டு, அதற்குள் ஒட்டுமொத்த பாலின அம்சங்களையும் இணைக்க முனைவது தவறான விஷயம். அந்த எல்லைகளை தாண்டி இருபதிற்கும் மேற்பட்ட பாலினங்கள் இருப்பதை நாம் இன்னும் தெரிந்துகொள்ளாமல் இருக்கிறோம். “பாலின ஈர்ப்பு” என்பது பற்றியும் இன்னும் முழுமையான…

என்ன எழவுடா இது?

தேர்தல் முடிந்து இருமாதகாலம் ஆகப்போகிறது. தேர்தல் குறித்த கணிப்பு, முடிவின் மீது மக்கள் கொண்டுள்ள அதிருப்தி. தங்களைக்கவர்ந்த தலைவர்கள் பதவியில் இல்லாமல் போன ஆதங்கம்.! எலெக்‌ஷன் கமிஷன் செய்துள்ள துரோகம்.! சிலபலரை பதவியில் இருந்து இறக்கப்போடப்படும் கோஷம்.! மாபெரும் கூட்டனிக்கட்சியான ம.சீ.சா எந்த ஒரு பதிவியையும் ஏற்க மறுத்துள்ள அதிரடி நடவடிக்கை.! எதிர்க்கட்சி ஆதரவாளர்கள் பலரைப் பிடித்து சிறையில்…

பேய்களோடு கொஞ்ச நேரம்

எந்தப் பேயும் இறந்துபோகாமலும் இறந்துபோன பேய்களை எழுப்பியவாறும் முளைத்துக்கொண்டே இருக்கின்றன கதைகள் எல்லார் வாயிலும்… எப்பொழுதும் மனிதர்களைப் பற்றித்தான் பேசுகிறோம். இம்முறை பேய்களைப் பற்றிக் கொஞ்சம் பேசுவோம். பேய்க் கதைகள் என்றாலும் இவற்றிலும் மனிதர்களின் ஆதிக்கம்தான். மனிதனில்லாமல் பேய்கள் ஏது? பெரும்பாலும் எல்லாருக்கும் பேய் பற்றிய பயம் இருக்கிறது. அதனால்தான் பேய்க்கதை  என்றால் சிறார் முதல்…