
தங்கர்பச்சானின் சொல்ல மறந்த கதை திரைப்படம் தலைகீழ் விகிதங்கள் நாவலின் தழுவல். மிக அழகாக, நுணுக்கமாக எடுத்திருப்பார். மாமனார் வீட்டோடு இருப்பது அசிங்கம், நெருங்கிய நண்பனுக்கு ஒருவேளை சோறுபோடக்கூடத் தான் வக்கற்று இருப்பதை, பணம் என்ற கண்ணுக்குத் தெரியாத கயிறால் அவன் முடக்கப்பட்டிருப்பதை நுட்பமாகச் சித்தரித்திருப்பார். சிவதாணுவின் மனைவி கடைசிவரை அவனைப் புரிந்துகொள்ளவில்லை. இவ்வளவு பணம்…