13 ஆவது பொது தேர்தல் – நம் கோழைத்தனத்தை வரலாறு மன்னிக்காது

எனக்கும் அரசியலுக்கும் தொடர்பில்லை ஆகையால் எனக்கு அது தொடர்பாகக் கருத்தில்லை எனச் சொல்பவர்களைக் கண்டித்தே இந்தக் கட்டுரையை எழுதுகிறேன். நம் வாழ்க்கையை, நம் நிலத்தை, நம் மூளையை ஆண்டு கொண்டிருப்பதே இந்த அரசியலாக இருக்கும்போது எப்படி தனக்கு அரசியலில் ஈடுபாடு இல்லை என ஒருவர் கூற முடியும்? அரசியலில் களம் இறங்கி தனக்கொரு அடையாளத்தை உருவாக்கிக்…

மே 5 வாழ்கையில் கிடைக்கும் ஒரே வாய்ப்பு!

ஒரு தலை ராகமாக ஊடகங்களில் செய்திகள் .உயரத்திலிருந்து கோழிக்குஞ்சு நடமாட்டத்தை கூர்மையாக கவனிக்கும் பருந்துபோல  வெளிநாடுகள் மலேசியாவை பார்த்துக் கொண்டிருகின்றன. ஜாதகக் காரர்கள், என் கணித நிபுணர்கள், கேரளா நம்பூர்தி, இந்தோனேசியா போமோ ஆகியோர்களை இரவு விருந்தோம்பலில் கவனிக்கும்  படுபிசியில் அரசியல்வாதிகள். ஹோட்டல் ரூம்பில் நடக்கும் உள்ளரங்கு விளையாட்டு பொது மைதானம் வரை பார்வைக்கு வைக்கும்…

மலேசிய அரசியலும் பணமுடிப்புகளும்

“புலவர்கள் யாரேனும் நம்மை புகழ்ந்து பாட வல்லீரேல் பொற்காசுகள் பரிசாகத் தரப்படும்” என்று அரசர்கள் அறிவிப்பதும் அந்த அறிவிப்பை கேட்ட புலவர்கள், அரசர்களை நாடிச் சென்று இனிய கவி பல பாடி (அரசனை வீரதீர சூரன் என்று புகழ்ந்து) பரிசில்கள் பெருவதும் நாம் சங்க இலக்கியச் சூழலில் பல காலம் அறிந்த ஒன்றுதான். ஆட்சியாளர்களை மகிழ்விக்கும்…

Ini Kalilah: தேர்தலுக்கு முன்பான இறுதி கேள்விகள்

தேர்தல் நெருங்கும் இந்தக் காலக்கட்டத்தில் நான் பல நண்பர்களிடம் தொடர்ந்து தேர்தல் குறித்தே உரையாடி வருகிறேன். எனது நோக்கம் யாரையும் வலிந்து குறிப்பிட்டு ஒரு கட்சிக்கு ஓட்டைப் போட வைப்பதல்ல. அவ்வாறு செய்வதும் ஒரு வன்முறைதான். பாரிசான் எப்படி மக்களைச் சிந்திக்க வேண்டாம்…சொல்லும் இடத்தில் ஓட்டைப் பதிவு செய் என அரசு ஊழியர்களை மிரட்டி வைத்துள்ளதோ…

தேர்தலில் யாருக்கு முதல் மதியாதை?

மலேசிய வரலாற்றில் இதுவரைக் காணக்கிடைக்காத அற்புத காட்சிகளோடு நாட்டின் 13-வது பொதுத்தேர்தல் களைக்கட்டியிருக்கிறது. நான் வாக்களிக்கப்போகும் இரண்டாவது தேர்தல் இது. எப்போதும் கட்டிக்கே (தேசிய முன்னணி) வாக்களிக்க வேண்டும் என்றிருந்த ஒரு தலைமுறையின் சத்தியத்தை உடைத்து நாட்டின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் முடிவை கையில் வைத்திருக்கும் இளைய சமுதாயத்தின் பிரதிநிதியாகவும் நான் இருக்கிறேன். மிக அண்மையில் நான்…

ஹிண்ட்ராப்… ஊழிக்கூத்துக்கு உடுக்கடித்தவர்கள்

பாயா பெசார் (கூலிம், கெடா) ஹிண்ட்ராப் இயக்கத்தின் முக்கிய தளமாகச் செயல்பட்டது. `வெட்டிப் போட்டாலும் ‘கட்டி’க்குத்தான் ஓட்டுப் போடுவோம் என்று வாழ்ந்த இந்தியர்கள் மொத்தமாக மாறிய தருணம் அது. எப்படி அந்த மனமாற்றம் சாத்தியமானது? அளவற்ற விரக்தியுடன் இருந்த ஒரு சமுதாயத்திற்கு விடிவெள்ளியாக, குரலற்று வாழ்ந்தவர்களுக்கு வலிமையான, ஒரு சிலுவைச் சுமப்பவர் அடையாளத்துடன் ஹிண்ட்ராப் இயக்கம்…

சரவாக் எதிர்க்கட்சி வசமாகுமா?

தேர்தல்…தேர்தல்..தேர்தல்… இப்போதைய மலேசியாவை அசைத்து பார்க்கும் இன்னொரு பேரலை. நான்கு வருடங்களுக்கு ஒரு முறை நடைப்பெறும் நாட்டின் பொதுத்தேர்தல் இம்முறை 2008-ம் ஆண்டுக்கு பின்னர் நான்காண்டுகள் கடந்து ஐந்தாம் ஆண்டில் இடம்பெற்றுள்ளது. பன்னிரண்டு பொது தேர்தல்களை கடந்து விட்ட மலேசியாவுக்கு இது பதிமூன்றாவது தேர்தல். எனவே சென்டிமென்ட் காரணமாக பதிமூன்றாவது தேர்தல் 2013-ம் ஆண்டு தான்…

அம்மா தாயே புக்கு போடனும்; பிச்சை போடுங்க!

இனி பக்கம் பக்கமாக எழுதி உங்களிடம் சொல்வதற்கு என்ன இருக்கிறது. இனி முடிவு உங்கள் கையில். இதற்கிடையில் கதையொன்றை உங்களுக்கு சொல்கிறேன். இது ஒரு எழுத்தாளனின் கதை. ஒவ்வொரு எழுத்தும் காரசாராமத்தான் இருக்கும். அடிக்கடி இல்லையென்றாலும் அவ்வபோது எழுதி அனைவருக்கும் தான் இருப்பதாக காட்டிவிடுவது அவரது வழக்கம். பத்திரிக்கைகளும் எழுத்தாளர் சங்கமும் கூட அதற்கு உற்ற…

இதற்குத்தானே ஆசைப்பட்டாய் இந்தியனே?

எப்போதும் இல்லாத அளவுக்கு நாட்டின் 13ஆவது பொதுத்தேர்தல் திகிலும் பரபரப்பும் குழப்பமும் நிறைந்த ஒன்றாக மாறியிருக்கிறது. இம்முறை யாருக்கு வெற்றி என்று அறுதியிட்டுக் கூற முடியாத சூழலே இன்றளவும் நிலவுகிறது. ‘ஆம்பளைக்கும் பொம்பளைக்கும் அவசரம்’ என்ற சினிமாப் பாடல் உருமாற்றம் பெற்று “தேர்தலிலே ஜெயிக்கப் போறதாருங்க? அது பாரிசானா? பக்காத்தா? சொல்லுங்க” என்று ஒலிக்கும்  பாடல்கள்…

மக்களாட்சி மற்றும் மக்கள் கவர்ச்சிக் கொள்கை – எதிரொளிர்வு (பிரதிபலிப்பு)

ஓர் உணவகத்துக்கு வெளியே இப்படி ஓர் அறிவிப்புப் பலகை தொங்கவிடப்பட்டிருந்தது, “நீங்கள் இங்கு கட்டணமின்றி உண்ணலாம்.  நீங்கள் சாப்பிட்டதற்கான பணம் உங்கள் பேரக் குழந்தைகளிடமிருந்து பிறகு பெற்றுக் கொள்ளப்படும்”. இதனைக் கண்ட ஒருவர் உணவகத்துக்குள் நுழைந்து வயிறு புடைக்க உண்டார். நடக்க முடியாமல் நடந்து வெளியே போக எத்தனித்தார். “ஐயா பணம் செலுத்திவிட்டுப் போங்கள்” என்றார்…

மேலும் ஒரு முறை? அல்லது புதிய தலைமுறை?

இந்தியர்களின் மலேசிய வரலாற்றில் மிக முக்கியமான தேர்தல். அதனாலே நான் சில கருத்துகளைக் பகிர்ந்துக் கொள்ள வேண்டியது மிக முக்கியம்.  இப்போதெல்லாம், ‘அவன் தான் இப்ப எல்லாம், கொடுக்கரானே ஏன் ஓட்டு போட கூடாது…’ என்று பலர் சொல்கிறார்கள். அதில் அதிகமாக நமது முந்தைய தலைமுறையினர்.  பல காலமாக ஓரே குழியில் ஓடி விழுந்த மக்கள்.…

சாமி குத்தம்

‘நம்ம கோயில இடிச்சிட்டாங்க…’ வேகமாக ஓடிவந்த முருகன் இடுப்புக்குக் கீழாக இறங்கும் டவுசரை ஒரு கையால் பிடித்துக்கொண்டு, மறுகையால் கோயில் இருக்கும் திசையைக் காட்டி சொன்னபோது கூடவே ஓடிவந்த ஜிம்மியும் வால் வெட்டப்பட்டதால் தன் ஆசன வாயை அசைத்து ‘அது உண்மைதான்’ என்றது. “டேய் … என்னடா சொல்ற … நம்ம முனியாண்டி கோயிலையா…” ஆறுமுகத்திற்கு…

தேர்தலும் பாட்டியின் கலர் துண்டும்

பேருந்து பதற்றமான ஓர் இருளுக்குள் நுழைந்து மீண்டும் சாலை விளக்கின் வரிசை வெளிச்சத்திற்குள் வந்து சேர்ந்தது. எக்கிப் பார்த்தேன். அதுவொரு சுரங்கம். ஒவ்வொரு வருடமும் விடுமுறை காலங்களில் மட்டும் வந்துவிட்டுப் போகும் ஓர் அந்நியமான நகரம். அம்மாவிற்கு ஒவ்வாத இரைச்சல்கள். நாள் முழுக்க புலம்பியபடியே வருவார். பாட்டி இல்லாத ஒரு நகரம். தேர்தல் காலம் நெருங்கிவிட்டால்…