2.11.2014ல் வல்லினம் குழு கலை இலக்கிய விழாவினை ஆறாவது ஆண்டாக நடத்த உள்ளது. இந்நிகழ்வில் முதன் முறையாக ‘வல்லினம் விருது’ வழங்கும் நிகழ்வும் இடம்பெறும். விருது தொகையாக 5000 ரிங்கிட்டுடன் அ.ரெங்கசாமி அவர்களின் ஆவணப்படம் மற்றும் அவரது வாழ்வைச்சொல்லும் நூலான ‘சிவகங்கை தொடங்கி சிசங்காங் வரை’ எனும் நூலும் இந்நிகழ்வில் வல்லினம் குழுவினர் மூலம் வெளியீடு…
“ஓர் இனம் மட்டும்தான் இந்நாட்டை ஆட்சிச்செய்ய வேண்டும் என்ற கோட்பாடு இங்குத் தேவை இல்லை!”

நூருல் இசா அன்வார் தனது அரசியல் வாழ்க்கையை 1998-ல் தொடங்கினார். மலேசிய அரசியல் அமைப்பைச் சீரமைக்க ‘Reformasi’ எனும் இயக்கத்தின் வழி இவரது போராட்டத்தைத் தொடர்ந்து கொண்டிருக்கின்றார். ஆதலால், மக்கள் இவரை ‘Princess Of Reformation’ என அழைக்கத் தொடங்கினர். அரசியல் மற்றும் பொருளாதாரம் போன்ற துறைகளில் உள்ள அதிகார துஷ்பிரயோகத்தையும் அதிலுள்ள ஊழல் செயல்பாடுகளையும்…
வணிக முத்திரை : தேவையும் நன்மையும்

அன்றாட வாழ்வில் நாம் பலவிதமான பொருட்களைப் பயன்படுத்துகின்றோம். நாம் பயன்படுத்தும் அனைத்துப் பொருள்களும் ஒரே வணிக குறி / வணிக முத்திரையைக் கொண்டிருப்பதில்லை. அவ்வகையில் பல பொருள்களின் பொதுபெயர்களும் மற்றும் பல பொருள்களின் வணிகக் குறியும் கலந்தே நமது மனதில் பதிவாகி விடுகின்றன. பல நேரங்களில் நமக்கு இதற்கான வேறுபாடுகளே தெரியாமல் போய்விடுகின்றது என்பதே ஆச்சரியம்.…
பழங்குடிகள்: மூடப்படவிருக்கும் முகங்கள்

பெரும்பாலோரின் பார்வையில் நாகரிகமற்றவர்களாகவும் அசுத்தப் போக்கைக் கொண்டவர்களாகவும் பழங்குடியினர் வரையறுக்கப்படுகின்றனர். இதனை சுட்டிக் காட்டியே நகர வாழ் மக்கள் இவர்களை வன்மையாக ஒதுக்குவதுண்டு. இடைப்பட்ட காலத்தில் மலேசிய பழங்குடியினரைப் பற்றிய குறிப்புகளைச் சேகரிக்க முற்பட்டேன். அவர்களுடனான தொடர்பை மீட்டெடுக்கும் போக்கில் கேமரன் மலைப் பகுதியில் (பகாங்) வாழும் பழங்குடியினர் கிராமமான ‘கம்போங் பன்கான்’ வாழிடத்திற்கு செல்லும்…
எங்கள் நாட்டில் சாதி இல்லை!

மலேசியாவில் சாதி இல்லை என்று பலர் சொல்ல நீங்கள் கேட்டிருக்கலாம். “செ…செ.. அதெல்லாம் கல்யாணத்தின்போது மட்டும்தாங்க…” என பல்லிளிக்கும் கூட்டம் இங்கு அதிகம். இன்னும் கொஞ்சம் முற்போக்காகப் பேசுகிறேன் பேர்வழிகள் “சாதியப் பற்றி பேசலைன்னா அது தன்னால ஒழிஞ்சுருங்க… நாம தமிழரா இணைஞ்சிருப்போம்” என ‘நாம் தமிழர்’ சீமான் போல சீன் போடுவதுண்டு. மற்ற அனைத்தையும்விட…
ஒளிப்புகா இடங்களின் ஒலி

2008-ல் வானொலி அறிவிப்பாளராகத் தொடங்கிய பணியில் 2013 வரை பலதரப்பட்ட அனுபவங்களைச் சந்திக்க நேர்ந்தது. அனுபவம் சார்ந்த அவை அனைத்தையும் எழுத்துகளாக்க வேண்டும் என்ற எண்ணம் எனக்கு எப்போதும் உண்டு. அப்போது நான் எழுதி வானொலியில் ஒலிபரப்பிய கண்ணாடித்துண்டுகள் என்ற நிகழ்ச்சி எனக்குச் சமூகத்தின் பல முகங்களை அறிமுகம் செய்தது. ‘மலேசியத் தமிழ்ச் சமுதாயம்’ என…
கோ. புண்ணியவானின் ‘செலாஞ்சார் அம்பாட்’ – கோழைகளின் விதி அடிமை வாழ்வே!

சில ஆண்டுகளாக மலேசிய தமிழ் இலக்கியத்தில் நீடித்து வரும் நாவல் வரட்சிக்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறது எழுத்தாளர் கோ.புண்ணியவான் அவர்களின் ‘செலாஞ்சார் அம்பாட்’. அரசாங்கத்தாலும் பொதுமக்களாலும் தொன்னூறு விழுக்காடு மறக்கப்பட்டு விட்ட ஒரு உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு இந்நாவல் எழுதப்பட்டுள்ளது. செலாஞ்சார் அம்பாட் என்னும் ஃபெல்டா நிலப்பகுதியில், போக்கிடம் அற்று ஒதுங்கிய தொழிலாளர் கும்பல் ஒன்று…
ஒழுங்கில்லா இளம் எழுத்தாளர் கூட்டமும் ஒருமையின்மையும்

‘பின் நவீனத்துவம்’ என்ற வார்த்தை தமிழில் நாசப்பட்ட நிகழ்வு போல வேறெந்த மொழிகளிலாவது நேர்ந்திருக்குமா என்பது சந்தேகம்தான். அச்சொல்லை உச்சரிப்பதால் இலக்கியத்தின் மிக சமீபத்திய நகர்வுடன் சரி சமமாய் பயணிப்பது போல எப்படி பாவனை காட்டப்படுகிறதோ அதே அளவுக்கு அதை மறுப்பதாய் சொல்பவர்கள் மத்தியிலும் நிகழ்த்தப்படுகிறது. கொஞ்சம் கூட இலக்கிய அறிவு இல்லாத எழுத்தாளர் சங்க…
ஏதிலியைத் தொடர்ந்து வரும் நிலா – ம.மதிவண்ணன் கவிதைகள்

இருவருணாசிரமக் கோட்டையை நாய் போலக் காத்துக் கிடப்பதோடு பொச்சிக்காப்பு கொண்ட சாதிமானுக்கு அல்லக்கையாகவும் அன்னார் தம் இல்லத்தில் தாது புஷ்டி லேகியமாகவும் குல மகளிர் பொற்புக்குப் பூட்டருளியும் அருள் பாலிப்பான் எச்சிக்கலையும் எரப்பாளியுமான உன் கடவுள்… – ம.மதிவண்ணன் நான் அண்மையில் வாசித்த கவிதைத் தொகுப்பில் குறிப்பிடத்தக்க தொகுப்பு ம. மதிவண்ணனின் ஏதிலியைத் தொடர்ந்து…
செலாஞ்சார் அம்பாட் நாவல் அறிமுக நிகழ்வும் வெளியீடும்

வரலாறு தொடர்பான செய்திகளைப் பதிவு செய்தல் அதிலும் குறிப்பாக பெரும்பான்மை நடுத்தர மற்றும் அடித்தட்டு மக்களைக் கொண்டிருக்கும் மலேசியத் தமிழர்களின் வரலாறு தொடர்பான செய்திகளை ஆவணப்படுத்தி வைத்தல் என்பது பல வழிகளில் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமையும். ஒரு நாட்டினுடைய வரலாறுகள் பொதுவாகவே அதிகார வர்கத்தை பூதக்கண்ணாடி கொண்டு பார்ப்பவையாகவும் அவர்களைச் சார்ந்து ஆவனப்படுத்தப்படுபவையாகவுமே இருக்கும். அது…
கலை இலக்கிய விழா 9
வல்லினத்தின் கலை இலக்கிய விழா இவ்வருடம் செப்டம்பர் மாதம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த விழாவில் ‘வல்லினம் 100’ எனும் 400 பக்க இதழ் வெளியீடு காண்கிறது. வல்லினம் மாத இதழாகத் தொடங்கப்பட்டு 100-வது இதழை எட்டுகிறது. எனவே கடந்த மாதங்களில் இணைய இதழில் பிரசுரமான கட்டுரைகள், சிறுகதைகள், கவிதைகள், விமர்சனங்கள் ஆகியவற்றோடு புதிதாக இவ்விதழுக்கென்று எழுதப்பட்ட…
