1988-ஆம் ஆண்டு. ஏதோ வரலாற்று கட்டுரை என கடந்து போய் விடாதீர்கள். கொஞ்ச வருடங்களாக நாம் தொலைத்துக் கொண்டிருக்கும் ஒரு பழக்கத்தைப் பற்றிப் பேசப் போகிறேன். அப்போது எனக்கு 4 வயது. அதற்கு முன்பான வாழ்க்கை ஒரு மங்கலான நிழற்படம் மாதிரிதான் நினைவில் இருக்கிறது. 4 வயதிற்குப் பிறகான நினைவுகள் மிகப் பசுமையாக இருக்கின்றன. அந்த…
கடைசி முத்தமும் கடைசி கண்ணீரும்
நான் வேலைக்குச் சென்று வாங்கிய முதல் மாத சம்பளத்தில் அப்பாவிற்கு 50 ரிங்கிட் கொடுத்திருந்தேன். அதை அவர் 8 வருடங்கள் செலவு செய்யாமல் பத்திரமாகவே வைத்திருந்தார் என்பதே அவர் மரணத்திற்குப் பிறகே தெரிந்தது. என்னுடைய அப்பா திரு.கேசவன் அவர்கள் கடந்த 20ஆம் திகதி முதல் இரண்டு நாள் அவசர சிகிச்சை பிரிவில் உயிருக்காகப் போராடிக் கொண்டிருந்தார்.…
ஆண்குறி சுடும் போட்டி
எவ்வளவு நீளமாக இருக்கிறதோ அவ்வளவு வசதி உண்டு. அத்தனை நீளமும் கைப்பிடியளவு அமைந்திருக்கவேண்டும். இல்லையேல் விளையாட்டில் சுவாரஸ்யம் இருக்காது. விளையாட்டு என்பதே சுவாரஸ்யம் மிகுந்ததுதானே. இப்போது உடம்பை குறைக்கவும் வயதை மறைக்கவும் ஓடிக்கொண்டும் விளையாடிக்கொண்டும் இருக்கிறார்கள். ஆனால் நினைவுகளில் சூழ்ந்திருப்பது அந்த போட்டி விளையாட்டுதான். இது குழு முறை விளையாட்டு. குழுவாக செயல்படவேண்டும். ஆண்களும் பெண்களும்…
உஸ்தாத் சொன்னது தப்புதான்… ஆனா…
வர வர ஒன்னுமே புரிய மாட்டேங்குது நைனா. எல்லாமே முன்னுக்குப் பின்ன முரணா கெடக்குது. அண்மையில உஸ்தாத் ஷாகுல் ஹமிட் (Uztaz Shahul Hamid) இஸ்லாமியர்களோட கட்டுப்பாடுகள் பற்றி பேசியிருக்காப்படி. அதுல ஹலால் உணவுகள் என இஸ்லாமியர்கள் சொல்லிக்கொண்டு அழகப்பாஸ் மற்றும் பாபாஸ் மசாலாத்தூள்களை வாங்குவதை விமர்சித்து ஏன் அவர்கள் இஸ்லாமியர்கள் தயாரிக்கும் மசாலா தூள்களை வாங்குவதில்லை…
லீனா மணிமேகலை மலேசிய வருகை
2.11.2014ல் நடைபெற உள்ள கலை இலக்கிய விழாவில் கவிஞர் / இயக்குனர் லீனா மணிமேகலை கலந்துகொள்கிறார். தமிழ்நாட்டில் மட்டுமல்லாது பல்வேறு உலக நாடுகளில் கலை ஊடகச் செயற்பாட்டாளராகவும் இயக்குனராகவும் அறியப்பட்டவர் லீனா மணிமேகலை. மஹாராஜபுரம் எனும் கிராமத்தில் ஒரு விவசாயக் குடும்பத்தில் தமிழாசிரியர் இரகுபதி அவர்களுக்குப் பிறந்தவர்தான் லீனா. அவர் மிகச் சிறந்த ஆவணப்படங்களையும் குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய தமிழின் மிக முக்கியமான…
கலை இலக்கிய விழா 6 (2.11.2014)
வருடம்தோறும் வல்லினம் இலக்கியக்குழு முன்னெடுத்து நடத்தும் ‘கலை, இலக்கிய விழா’ ஆறாம் ஆண்டாக இவ்வருடம் 2.11.2014ல் நடைபெறுகிறது. பல புதிய அங்கங்களுடன் இவ்வருடம் கலை இலக்கிய விழாவின் வேலைகள் துவங்கியுள்ளது. வல்லினம் விருது வல்லினம் முதல் ஆண்டாக இவ்வருடம் ‘வல்லினம் விருதை’ ஏற்பாடு செய்துள்ளது. இம்முறை வல்லினம் விருது எழுத்தாளர் அ.ரெங்கசாமிக்கு வழங்கப்படுகிறது. இந்த விருதளிப்பு…
வல்லினத்தின் குறும்படப் பட்டறை
26.7.2014ல் வல்லினம் ஏற்பாட்டில் குறும்படப்பட்டறை ஒன்று கிராண்ட் பசிப்பிக் தங்கும் விடுதியில் நடைப்பெற்றது. இந்தப் பட்டறையை இயக்குனர் சஞ்சை குமார் பெருமாள் மற்றும் செந்தில் குமார் முனியாண்டி ஆகியோர் வழிநடத்தினர். நாட்டில் குறும்படப்போட்டிகள் அதிகமாக நடந்துகொண்டிருக்கும் சூழலில் , குறும்படத்துக்கான அடிப்படை தேவை குறித்து இப்பட்டறை விவாதித்தது. கருவிகளும், அதன் பயன்பாடு மட்டுமே கலையாவதில்லை என்பதை…
“தமிழ்ப் பாரம்பரியம் பேசுபவர்கள் கடைசியில் சாதியெனும் கழனிப்பானையில் கையை விடுவதைத்தான் நாம் பார்க்கமுடிகிறது”

சந்திரசேகர் என்ற இயற்பெயரைக் கொண்டவர், பிரளயனாக அறியப்பட்டது வானம்பாடி இயக்கத்தின் தொடர்பறாத நீட்சியினால்தான். மை ஸ்கீல் அறவாரியமும் வல்லினமும் இணைந்து மலேசியாவில் முதன் முதலாக ஏற்பாடு செய்திருந்த வீதி நாடக முயற்சிக்குப் பயிற்சி வழங்கவே தமிழகத்திலிருந்து குறுகியகால வருகையளித்திருந்தார் பிரளயன். அந்தக் குறுகியகால நட்பில் அவரது தத்துவக்கூர்மையையும் வரலாற்று அறிவையும் ஆய்வுத்தெளிவையும் அறிய முடிந்தது. பத்தாண்டு…
பெண் எழுத்து

இலக்கியச் சர்சைகள் பொதுவாகவே இரண்டு தளங்களில் நிகழ்கின்றன. ஒன்றாவது சர்ச்சையின் சாரம் உள்ளடக்கியுள்ள மையத்தை நோக்கியதாக விவாதங்களைத் தொடர்வது. மற்றது, சர்ச்சையில் ஆங்காங்கு நீண்டிருக்கும் வெகுசன கயிறுகளைப் பிடித்துக்கொண்டு, மையத்தை விட்டு மற்றவற்றையெல்லாம் சர்ச்சைப் பொருளாக்கி கோஷம் எழுப்புவது. பொதுவாகவே தமிழ்ச்சூழலில் இரண்டாவது நிலைக்குதான் கிராக்கி அதிகம். காரணம் அப்போது போடும் கோஷம் ஒரு கூட்டத்தின்…
விவாகரத்து (திரைப்படம்): குடும்ப அமைப்பின் ஒற்றை குரல்

‘வெண்ணிற இரவுகள்’ படத்திற்கு முன்பு மலேசியத் தமிழ் சினிமாவின் மீது எனக்கு பெரிய நம்பிக்கை வந்ததில்லை. அதற்கு மூன்று முக்கியமான காரணங்களை என்னால் கூற முடியும். ஒன்று, மலேசியத்தன்மை குறைந்து தமிழ்நாட்டு சாயல் அதிகமாகப் படிந்திருக்கும் நிலையில் அது மலேசிய சினிமா என்கிற அடையாளத்தை இழக்க நேர்ந்துவிடும். இரண்டாவது, போதுமான இயக்கப் பயிற்சியும் சினிமாவிற்கான நுட்பமான தேடலுமின்றி…
எஸ்.எம்.ஆறுமுகத்தின் ‘உயிர்த்துடிப்பின் இதய ஒலி’ – முதிரா கதைகளின் தொகுப்பு

மலேசிய நாளிதழ்களிலும் வார மாத சஞ்சிகைகளிலும் அச்சிடப்படும் சிறுகதைகள் பெரும்பாளும் எந்த சுவாரசியமும் இன்றி தட்டையாக இருப்பது இலக்கிய ஆர்வளர்கள் பலரும் அறிந்ததே. விதிவிலக்காக சில சமயங்களில் நல்ல சில படைப்புகளையும் நாம் பார்க்க நேர்கிறது. அச்சு இதழ் கதைகளின் வெத்துப் போக்கை நாம் எந்த விமர்சனமும் இன்றி கடந்து போய்விடுவது வாடிக்கை. காரணம் மீண்டும்…
