அருண்மொழி நங்கை : பயணிக்கும் பாதையை பதியமிட்டவர்

அருண்மொழி நங்கை என்ற பெயரை ஜெயமோகனுடன் இணைத்தே பலரும் அறிந்து வைத்திருப்பார்கள். அவரும்கூட அவ்வாறுதான் தன்னை அறிந்துவைத்திருக்கக் கூடும். அருண்மொழி நங்கை எழுத்தாளர் ஜெயமோகனை 1991 ஆம் ஆண்டு காதலித்துத் திருமணம் செய்து கொண்டார். இருவரின் பிரதான ரசனையும் இலக்கியமாக இருந்தது. அருண்மொழிநங்கை தன் கல்லூரி நாட்களில் இருந்தே தமிழ் இலக்கியத்தைத் தொடர்ந்து வாசிப்பவர். கல்லூரி…

டத்தோ ரஹ்மான் பின் ஷாரி: மலேசியாவின் 15-ஆவது தேசிய இலக்கியவாதி

‘தேசிய இலக்கியவாதி’ எனும் விருதானது, மலேசியாவில் மலாய் மொழி இலக்கியத் துறையில் பங்களிப்புச் செய்தவர்களுக்கு வழங்கப்படும் விருதாகும். இவ்விருது 1981-ஆம் ஆண்டில், மலேசியாவின் மூன்றாவது பிரதமரான துன் உசேன் ஓன் அவர்களின் அறிவுரையின் விளைவாகத் தோற்றுவிக்கப்பட்டதாகும். 1981 தொடங்கி மொத்தம் 15 மலாய் மொழி இலக்கியவாதிகளுக்கு இதுவரையிலும் மலேசியாவின் ‘தேசிய இலக்கியவாதி’ எனும் இவ்விருது வழங்கப்பட்டுள்ளது.…

பெண் என்றும் இயற்கை என்றும் உள்ள பேராணவம்

1 “கொஞ்சம் சத்தமாகத் தான் பேச வேண்டியிருந்தது. அவள் மதிலுக்கு அந்தப் பக்கம். நான் இந்தப் பக்கம்.” சிறைசாலையில் ஒரு மதிலின் ஓரத்தில் உள்ள அறையில் கதாநாயகனை அடைக்கின்றனர். நாயகன் அறையும் மதிலும் தான் இருக்கின்றன. மதிலுக்கு அந்தப் பக்கம் பெண்களின் சிறை. நாயகன் ராஜ துரோகம் செய்ததால் சிறையில் வைக்கப்பட்டுள்ளான். ராஜியத்திற்கு எதிராக எழுதியது…

ஜி.எஸ்.எஸ்.வி நவின் அறிமுகம்

ஒரு பண்பாட்டுச் சூழலில் ஒரு ஆசிரியரின் பங்களிப்பு என்பது அவருடைய தனிப்பட்ட செயல்களால் மட்டும் அளவிடப்படுவதில்லை. அவரது பங்களிப்பு அவரது மாணவர்களின் செயல்களாலும் சேர்ந்தே மதிப்பிடப்படுகிறது. அவ்வகையில் தமிழில் ஒரு பெரு நிகழ்வென நம்முன் வாழ்ந்து வரும் எழுத்தாளர் ஜெயமோகன் அவர்களின் பண்பாட்டுப் பங்களிப்பு என்பது அவர் தனிப்பட்ட முறையில் ஆற்றிய பெருஞ்செயல்கள் மட்டுமின்றி அவர்…

அரவின் குமார் படைப்புலகம்

மலேசிய தமிழ் இலக்கியச் சூழல் என்பது 50-களில் தொடங்கப்பட்டு இன்றைய நிலையிலும் பல மாற்றங்களையும் வளர்ச்சிகளையும் கண்டடைந்து கொண்டு வருகின்றது. பாலபாஸ்கரன், சை. பீர்முகம்மது, ம. நவீன் போன்றவர்களின் ஆய்வுக்கட்டுரைகளை வாசிக்கும்போது மலேசியாவில் தனித்துவமான இலக்கியம் உருவாக வேண்டும் எனும் எண்ணம் விதைபட்டு, இருபது ஆண்டுகளுக்குப் பிறகு எழுந்து வந்த தலைமுறையால்தான் 70களில் நவீன இலக்கியத்தின்…

கோ. புண்ணியவான் : காலங்களுள் தக்கவைத்த கலைஞன்

மலேசியாவில் தமிழ் இலக்கியத்திற்குத் தேசிய அங்கீகாரம் கிடைக்காதது பற்றிய பேச்சுகள் அவ்வப்போது எழுவதுண்டு. அப்பேச்சுகள் அனைத்தும் எழுந்த வேகத்திலே உடனடியாக அடங்கிவிடும். மலேசியத் தமிழ் இலக்கியம் எனும் தனித்த அடையாளத்தைக் கண்டடையும் முயற்சி தொடங்கிய காலத்திலிருந்தே, மலேசிய தமிழ் இயக்கவாதிகளும் இலக்கியவாதிகளும் தங்களின் அடையாளத்தை இம்மண்ணில் விதைப்பதில் அதிகம் கவனம் செலுத்தி வந்தனர். சஞ்சிக்கூலிகளாகப் வந்த…

எழுத்தாளர் கணேஷ் பாபு அறிமுகம்

தேனி மாவட்டம் சின்னமனூரில் பிறந்து வளர்ந்தவர் எழுத்தாளர் கணேஷ் பாபு. செப்பேட்டுக்குப் புகழ்பெற்ற சின்னமனூர்,  சி.சு. செல்லப்பாவின் ஊரும் கூட. திருச்சி பாரதிதாசன் பல்கலையில் பொறியியல் பட்டம் பெற்றவர். சென்னையிலும், கோயம்புத்தூரிலும் சிறிது காலம் பணியாற்றிவிட்டு, சிங்கப்பூருக்கு 2008ஆம் ஆண்டு குடிபெயர்ந்து, கடந்த பதினான்கு ஆண்டுகளாகச் சிங்கப்பூரில் நிரந்தரவாசியாக வசித்து வருகிறார். எண்ணெய் மற்றும் எரிவாயுத்…

இக்கிமஸ்

[1] பனிக்குள்ளிருந்து தோண்டி எடுக்கப்பட்டதைப்போல தோற்றமளிக்கும் அந்த நான்குசக்கர வாகனம் சாலையை விட்டு விலகி, இடப்பக்கமாக திரும்பி குறுகலான காட்டுப்பாதையில் நுழைந்தது. வேகம் குறைந்து ஊர்ந்தபடிதான் சென்றது. என்றாலும் இரண்டு அடி உயரத்திற்கு கொட்டிக்கிடந்து குளிரில் கண்ணாடியைப்போல இறுகிவிட்ட பனி, சக்கரங்களுக்கு கீழே ஓசையுடன் உடைந்து நொறுங்கியது. முழங்கால் உயரத்திற்கு பாறைகளை சுவராக அடுக்கி உருவாக்கப்பட்ட…

யுவன் சந்திரசேகர் வருகை – ஒரு பதிவு

ஜூன் 10 – 11 ஆகிய இரு நாட்கள் வல்லினம் ஏற்பாட்டில் நவீன கவிதை முகாம் நடைபெற்றது. இந்தப் பட்டறையை வழிநடத்த எழுத்தாளர் யுவன் சந்திரசேகர் சிறப்பு வருகை புரிந்தார்.  ஜூன் 10 காலை 9 மணிக்குப் பட்டறை தொடங்கியது. காலை உணவுக்குப்பின் பங்கேற்பாளர்கள் தங்களை அறிமுகம் செய்துக்கொண்டனர். மொத்தம் 25 பங்கேற்பாளர்கள் கலந்துகொண்டனர்.  இந்தப்…

உடன் இருத்தல்

1 வடக்கு வேல்ஸிலிருந்து லண்டன் வரையிலான ரயில் பயணத்தில் அவரைச் சந்தித்தேன். பர்மிங்ஹாமில் ஏறினார். என் வலதுபக்க இருக்கையில் வந்து அமர்ந்தார்.  இடப்புற  ஜன்னல்வழி, எதிர்ப்புறம் விரையும் வெட்டவெளியில் லயிக்க முயன்றேன். ரயிலேறிய நிமிடத்திலிருந்து இதே முயற்சிதான். முடியவில்லை. காட்சிகளும் ஒலிகளும் வாசகங்களும் எனக்குள்  அலைபாய்ந்துகொண்டிருந்த விதம் அப்படி. அடம் பிடிக்கும் குழந்தைபோல, புறக் காட்சியுடன்…

‘மிளகு’ நாவல் : கனவுவெளியும் காலடி நிழலும்

[1] தல்ஸ்தோய் பற்றிய கூற்று ஒன்றுண்டு. ‘அவரின் படைப்புலகம் ஏன் அத்தனை யதார்த்தமாக இருக்கிறதென்றால் அது முழுவதும் அவரது கற்பனையால் கட்டமைக்கப்பட்டது.’ சிந்திக்க வைக்கும் வரி இது. ஒரு படைப்பை எப்போது நாம் நிஜ உலகிற்கு இணையாக நம்புகிறோம்? அதில் வரும் மனிதர்களை எந்தக் கணம் நாம் நெருங்கிக் கண்டவர்களாக உணர்கிறோம். உதாரணமாகப் போரும் அமைதியும்…