கவிஞர் கலாப்ரியா பதில்கள்…

தமிழ் ஹைக்கூ கவிதைகள் பற்றி நீங்க என்ன நினைக்கிறீங்க? – தூய்ஷன், மலேசியா. முதலில் தமிழ்க் கவிதைப்பரப்பில் ஹைகுவின் தாக்கம் பற்றிய தகவல்களைச் சொல்லலாம் என்று நினைக்கிறேன். தமிழில் பாரதியார்தான் முதன் முதலில் ஹைகு பற்றிப் பேசுகிறார். கல்கத்தா ’ஸ்டேட்ஸ்மென்’ பத்திரிக்கையில் வெளிவந்த ஒரு கட்டுரையை  மேற்கோள் காட்டி அவர் வியக்கிறார். அவர் ஹைக்குவின் அசல்ப்…

மகள் மறுத்தல்

‘தமிழன் என்றொரு இனமுண்டு தனியே அவர்க்கொரு குணமுண்டு’ என்ற வரிகளுக்கேற்ப பூர்வீகத் தமிழ்க்குடிகள் தன்மான உணர்வுடன் கோலோச்சி வாழ்ந்த வரலாறு நாம் அறிந்த ஒன்றுதான். பொதுவாகச் சங்க இலக்கியங்களை நோக்குங்கால், சீறூர் மன்னர் பெருவேந்தர் என இரண்டு ஆளுமைகள் மக்களை வழிநடத்தியதைக் காண்கின்றோம். இவ்விரு ஆளுமைகளுக்கும் எண்ணற்ற வேறுபாடுகள் இருப்பதும் அவரவர் செயல்களைக் கொண்டு அறியமுடிகின்றது.…

நேசமித்ரன் கவிதைகள்

ஒளியை முத்தமிடுதல் மந்திரவாதியின் தொப்பிக்குள் இருந்து மேலெழுகிற துயரநாளின் நிலவு வன்புணர்ந்து மனம்பிறழ்ந்தவள் மீண்டும் மீண்டும் சொல்லும் சொல்லாய் அலைமிதந்தேறுகிறது யாருமற்ற தீவில் பச்சோந்தி மரணநிலையில் கொள்ளும் நிறத்தில் உள்ள நிர்வாணத்துடன் உடன் பயணிக்கிறது தப்பிய விண்மீனின் கிரணம் அவ்வொளிக் கற்றை அத்துணை ஒளிஆண்டுகள் கடந்து பூமியைச் சேர்ந்த போது அந்த நட்சத்திரம் எரிந்து போயிருந்தது…

புகை சூழ் உலகு

நான் கல்லூரியில் சேர்ந்த அதே ஆண்டில் ‘விளையாட்டாக’ சிகரெட் பிடிக்க ஆரம்பித்தேன். அப்போதைய சூழலில் புகைத்தலுக்கு எதிரான இயக்கம் இத்தனை தீவிரமாக இல்லை. பொது இடத்தில் புகைக்கத் தடை, சிகரெட் விற்பனை கட்டுப்பாடு, வயதுகட்டுப்பாடு போன்றவை இல்லை. என்னைப்போன்றே ‘விளையாட்டாக’ சிகரெட் பிடிக்கத்தொடங்கிய பலர்தான் பிறகு பெட்டி பெட்டியாக ஊதித்தள்ளிக் கொண்டிருந்தார்கள் என்பதை அப்போது நான்…

இணைய வளங்களை மதிப்பீடு செய்தல்

ஏன் இணையவளங்களை மதிப்பீடு செய்யவேண்டும் என்கிற கேள்வியை முன்வைப்பதன் வழி அதன் இன்றியமையாத் தேவையை புரிந்து கொள்ளலாம். நம்பகத்தன்மையற்ற தரவுகளும் தரவுத்தளங்களும் செய்தித்தாள்கள் அல்லது தொலைக்காட்சி ஒளிபரப்புகளில் காட்டப்படும் தரவுகளைப்போல் இணையத்தில் கிடைக்கும் தகவல்கள் தரமானதாக (Quality) அல்லது துல்லியத்தன்மை (Accuracy) கொண்டதாக இருக்கும் என்று உறுதியாகக் கூற முடியாது. அவை எந்தவொரு கட்டுப்பாடும் கண்காணிப்பும்…

திறவுகோல்1 : நாடு விட்டு நாடு

கடந்த மாதம் முப்பத்தொன்பதாவது சென்னைப் புத்தக கண்காட்சிக்குச் சென்றபோது பேராசிரியர் வீ.அரசு அவர்களின் வீட்டிற்குச் செல்லும் அரியவாய்ப்பு கிட்டியது. அவரது வீட்டில் உள்ள நூலகத்தைப் பார்வையிட்டபோது “கண்காட்சியில் இந்தப் புத்தகத்தை மறக்காமல் வாங்குங்கள். உங்கள் ஊர்க்காரர் எழுதியது” என்று கூறி ஒரு புத்தகத்தைக் காண்பித்தார். அந்த நூலின் பெயர் ‘நாடு விட்டு நாடு’. தமிழினி பதிப்பகத்தின்…

நீயின்றி அமையாது உலகு – 6

மீண்டும் பார்க்க விரும்பும் முகங்களில் ஒன்றுதான் அவளுடையது. முதன் முதலில் அவளைப் பார்த்த பிறகுதான் என் பெரியமூக்கின் கீழ் சில உரோமப்புள்ளிகள் உருவாகியிருந்ததை முழுமையாக உணர்ந்திருந்தேன். லேசாக அதனைக் கிள்ளியும் பார்த்தேன். அவை மூக்கின் கீழ், உதட்டின் மேல் முட்டிக்கொண்டு இருந்தன. இன்னும் சில நாட்கள் போதுமானதாக இருந்தது. ஆனால் இப்போதுதான் கவனித்தேன். இனி நானும்கூட…

கொங்கு தமிழர் மாநாடும் கொசுத்தொல்லையும்!

அண்மையில் ஒரு வீடியோ, முகநூலில் மிக வேகமாகப் பரவிக் கொண்டிருந்தது. ஜூலை 22 முதல் 24 வரை மலேசியாவில் நடைபெற்ற ‘கொங்கு தமிழர் மாநாட்டில்’ கலந்துகொண்ட ஒரு தமிழ்ப்பள்ளி ஆசிரியை தனது சாதியப் பெருமையை அதில் பகிர்ந்துகொள்கிறார். தாங்கள் பிடிவாதமாக கொங்கு கவுண்டர் சாதியைக் கடைபிடிப்பதாகவும் தங்கள் குழந்தைகளை சாதிய உணர்வுடன் வளர்ப்பதாகவும் அவர் பகிரங்கமாகக்…

விலகுவது கடினம் ஆனால் …

திருமணமான தம்பதிகள் தங்கள் திருமண வாழ்வு உடைந்து போகும் விளிம்பில் நிற்கும்போது அல்லது ஏற்கனவே உடைந்துகொண்டிருப்பதைக் கவனிக்கும்போது, அதனை ஒரு முடிவுக்குக் கொண்டு வராமல் நீட்டிப்பதையே தங்கள் தேர்வாக வைத்திருக்கிறார்கள். சிலர் நிலையான பொருளாதார பலம் போன்ற சொகுசு வாழ்வு சார்ந்த காரணங்களாலும் மற்றும் சிலர் மணவிலக்கை சமூக மதிப்பீட்டில் வரும் களங்கமாகக் கருதுவதாலும் தொடர்ந்து…

இன்னும் பேசுவதற்கு…

“இந்த பூமி பாரதீஸாக மாறும் காலம் வரும்போது காது கேளாதோரின் செவிகள் கேட்கும். (ஏசய்யா 35.5, பொது மொழிபெயர்ப்பு) நாங்கள் உரையாட ஆரம்பித்தோம், இருவரும் மாறிமாறி சைகையால் பேசிக் கொண்டிருப்பதைப் பார்த்து பக்கத்து இருக்கையில் இருந்த நபருக்கு இதில் யார் வாய்பேச முடியாதவர் என்பதில் குழப்பம் ஏற்பட்டுவிட்டது. உரையாடல் சுவாரஸ்யமாகப் போய்க்கொண்டிருக்கும்போது இன்னொருவரும் எங்களைக் கவனிக்க…

காதல்மொழி நானூறு – அகநானூற்றுப் பாடல்கள் – 4

ஒருவகையில் பார்க்கப்போனால் ஆண் எப்போதும் தனது ஆதிகுணமான வேட்டையாடும் மனப்பான்மையுடனேயே பெண்ணை அணுகுகிறான். எப்படியாவது பெண்ணின் காதலைப் பெற வேண்டும். வென்றபிறகு வெற்றி ஒரு சரித்திர நிகழ்வாக மட்டும் இருக்கிறது. மீண்டும் தரையில் நடக்க ஆரம்பிக்கிறான். பெண் திரும்பத் திரும்பத் தேடுகிறாள், எங்கே அந்தக் காதலன் என்று. ஆணும்கூட ஒருவகையில் ஏக்கத்துடன் அவனையே தேடக்கூடும். பெண்…