மை ஸ்கீல் அறவாரியம் குறித்தும் அவ்வரவாறியம் மூலம் நடத்தப்படும் பிரிமூஸ் கல்லூரி குறித்தும் புதிதாக அறிமுகம் செய்யத் தேவையில்லை. இன்று மலேசியாவில் தமிழ்ச்சமுதாயத்துக்காக முன்னெடுக்கப்படும் முயற்சிகளில் உருப்படியானதாகவும் உயர்வானதாகவும் பலதரப்பினராலும் போற்றப்பட்டு வருகிறது. வழக்கறிஞர் பசுபதி மற்றும் மருத்துவர் சண்முகசிவா போன்றோர் முன்னெடுப்பில் இயங்கும் இக்கல்லூரி மாணவர்கள் பலரும் பள்ளியில் பாதியிலேயே தங்கள் கல்வியை நிறுத்தியவர்கள்.…
‘குவர்னிகா’வும் ஷோபாசக்தியுடனான கலந்துரையாடலும்
முதன் முறையாக மலேசியப் படைப்பாளர்களில் எழுத்துகளும் 41-வது இலக்கியச் சந்திப்பு தொகுப்பு நூலான ‘குவர்னிகாவில்’ சேர்க்கப்பட்டது எங்களுக்கு மகிழ்ச்சியைக் கொடுத்தது. குவர்னிகா தொகுப்பில் இடம்பெற்ற மலேசிய படைப்புகள் குறித்து பேசவும் இங்கே குவர்னிகா குறித்த அறிமுகத்தை செய்யவும் ஏற்பாடு செய்திருந்தோம். ‘புத்தகச்சிறகுகள்’ ஏற்பாட்டில் ‘வல்லினம்’ இணைய இதழ் ஆதரவில் ஷோபாசக்தியுடன் கலந்துரையாடல் ஏற்பாடாகியிருந்தது. சில நாட்களுக்கு…
மலேசிய அனுபவம் : யாரும் திருத்தப்பட வேண்டியவர்களாய்ப் பிறப்பதில்லை
யாரும் திருத்தப்பட வேண்டியவர்களாய்ப் பிறப்பதில்லை. சமூகமே யாரையும் அப்படி ஆக்குகிறது. யாரொருவரும் அப்படி ஆவதற்கு இச்சமூக அமைப்பும் நாம் ஒவ்வொருவருமே காரணமாய் உள்ளோம். இன்றைய மலேசியத் தமிழ்ச் சமூகம் எதிர்க்கொண்டுள்ள மிகப் பெரிய சமூகச் சிக்கல்களில் ஒன்று இளைஞர் மத்தியில் அதிகரித்து வரும் குற்றச் செயல்கள். மலேசிய மக்கள் தொகையில் 7 சதம் தமிழர்கள் என்றால்,…
கடன்
அமைதி நிலவியது. நீள் கல்லிருக்கையில் படுத்ததும் சட்டெனத் தூங்கிப் போனேன். அவ்வப்போது முகத்தை மூடிய சிறு துண்டு நழுவிக் கீழே விழும்போது தன்னிச்சையாக என் இடதுகை அதனை எடுத்து மறுபடியும் முகத்தை மூடிற்று. அசதியில் உடல் படுத்திருந்தாலும் மூளை மட்டும் விழித்துக்கொண்டிருந்தது. அதிகாலை நெருங்கியிருக்கும். விசும்பல் சத்தம் கிணற்றடியிலிருந்து கேட்பது போலிருந்தது. விழித்துக்கொண்டேன். கண்ணிமைகளை இலேசாய்த்…
மாலதி மைத்ரி பதில்கள் – பகுதி 3
பகுதி 3 கேள்வி : கவிஞர்கள் தொடர்பாக எனக்கு ஒரு சந்தேகம் இருந்துகொண்டே இருக்கிறது. “கவிஞர்கள் பிறக்கும்போதே கவிஞர்களாக பிறந்துவிடுகின்றார்களா அல்லது படிப்படியாக கற்று, பழகி கவிஞர்கள் ஆகின்றார்களா!” ஏன் இப்படி கேட்கிறேன் என்றால், கவிதைமீதான ஈர்ப்பின் காரணமாக அதன் அடிப்படையான விசயங்களை தேடியபோது அப்படி எதுவும் கண்ணில்படவில்லை, கவிஞர்களும் அப்படி ஒரு விசயத்தை கடந்து வந்தாகவே காட்டிக்கொள்வதில்லை.…
குவர்னிகா: அ.பாண்டியனின் மலாய் இலக்கியம் கட்டுரையை முன்னிட்டு ஒரு பார்வை… (பகுதி 2)
சென்ற மாதத்தின் தொடர்ச்சி… 1930-ஆம் ஆண்டு முதல் 1940-ஆம் ஆண்டு வரை இக்காலக்கட்டத்தில் நிறைய சிறுகதைகள் மேல்நாட்டுத் தாக்கத்தைக் கண்டித்து வந்தது எனலாம், வெள்ளையர்களால் பகடைக்காயாக உருவாக்கப்பட்டவர்களின் கதைகள், அடிமைகளாக வாழும் மலாய்க்காரர்களின் நிலை. மேல்நாட்டுப் பழக வழக்கங்களைப் பின்பற்றும் மலாய்க்காரர்களின் அவலநிலைப் முதலியன கருப்பொருளாக அச்சிறுகதைகள் கொண்டுள்ளன. 1930-ஆம் ஆண்டுகளின் சிறுகதை வளர்ச்சியில் ‘ராம்நாத்’…
பேசலாம் இஷ்டம்போல்…
சில செய்கைகளில் நமக்கு அடக்க முடியாத ஆர்வம் வருவதென்பது இயற்கையான ஒன்று. அது மனித இயல்பும் கூட. உதாரணத்திற்கு ரகசியம் என்று யாராவது போகிற போக்கில் எதையாவது சொல்லிவிட்டுச் சென்றார்களேயானால் – அது என்னவாக இருக்கும்.? என்கிற ஆராய்ச்சியில் சில நொடிகள் நம் மனது ஈடுபடாமல் இருக்காது. எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும்.. `எனக்கு நிறைய…
மலாயாப் பல்கலைக்கழக நூலக ஏற்பாட்டில் மலேசியத் தமிழ் எழுத்தாளர்களின் நூல் சேகரிப்புத் திட்டம் 2013 (22 – 24 நவம்பர் 2013)
மலாயாப் பல்கலைக்கழக தமிழ்த்துறை நூலகம் தமிழ்மொழி சார்ந்த நாற்பதாயிரத்திற்கும் மேற்பட்ட நூல்களைத் தன்னகத்தே கொண்டு இயங்கி வருகின்றது. குறிப்பாக இந்நூலகத்தில் மொழி, மொழியியல், கற்றல் கற்பித்தல், இலக்கணம், இலக்கியம், வரலாறு, அறிவியல், மருத்துவம், சோதிடம், சமயம், பண்பாடு, கலைகள், பல்துறைச் சார்ந்த மாநாட்டு ஆய்வடங்கல்கள், தொகுப்பு நூல்கள் என எண்ணிலடங்கா தலைப்புகளில் நூல்கள் உள்ளன. இவற்றோடு…
ஸதி கவிதைகள்
அன்பினாலானது… நேசிப்பது எப்படியென்பதை அறிந்துகொண்ட பொழுதில் காற்றும் அறியாது முகிழ்த்தன வார்த்தைகள் இந்த வார்த்தைகளல்ல எனது நேசம் இந்தக் கணத்திலும் அதிகமான எனது நேசத்தினால் நிறைகிறது பிரபஞ்ச வெளி இப்பெரும் வெளியை கோர்த்திருக்கும் நம் கைகளுக்குள் அடக்கத் துடித்தோம் நிறமற்று விரிந்திருக்கும் கடலுள் அமிழ்ந்தோம் மணலில் கரையாத கடலென உணர்வுகளில் அழியாது ஒளிரும் அன்பை நாம்…
யோகி கவிதைகள்
1 வீதியில் புணர்ந்து கொண்டிருக்கும் நாயைப் பார்க்கிறாள் தந்தையின் கைவிரலைப்பற்றி சாலையை கடக்கும் சிறுமி அப்பா நாய் என்ன செய்கிறது? மௌனமான அப்பா… அதைப் பார்க்க கூடாது தலைவலி வரும் என்றார் சிறுமிக்கு தலை வலிக்க ஆரம்பித்தது நாயை திரும்பி பார்க்காமலே அவள் நாயைப் பார்த்துக்கொண்டிருந்தாள்… 2 ஒரு கவிதைக்காக பல மாதமாக முயற்சித்து வருகிறேன்……
வல்லினம் ஜனவரி 2014 முதல் அச்சிலும் வெளிவரும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறோம். மலேசியா முழுவதும் உள்ள குறிப்பிட்ட சில கடைகளுக்கு வல்லினம் விற்பனைக்குச் செல்கிறது. அதே சமயம் புலம்பெயர்ந்த நாடுகளில் வல்லினம் அச்சு இதழ் தேவைப்படுபவர்கள் சந்தா மூலம் பெற்றுக்கொள்ளலாம். மேலும் விரிவான தகவல்கள் அடுத்த இதழில்…