இராமகிருஷ்ணர், விவேகாநந்தர், காந்தி: சில குறிப்புகள்

ஒன்று இந்தியாவின் முக்கிய வலதுசாரி மதவாத அமைப்பான ‘ஆர்.எஸ்.எஸ்’ எனப்படும் “ராஷ்ட்ரீய சுயம் சேவக் சங்” விவேகாநந்தரின் 150ம் ஆண்டை (2013) இந்தியா முழுவதும் பெரிய அளவில் கொண்டாடியது. ஆர்.எஸ்.எஸ் அமைப்பால் உருவாக்கி இயக்கப்படும் பல நிறுவனங்களில் ஒன்றான ‘விவேகாநந்த கேந்திரா’ இதில் முன்னணியில் இருந்தது. ஆர்.எஸ்.எஸ் அமைப்பை இன்றைய வடிவத்திலும் நோக்கிலும் கட்டமைத்த குருஜி…

“தமிழில் சமகாலத்தில் எந்தப் பாடலாசிரியனும் நல்ல கவிஞன் என்ற பட்டியலில் இல்லை” – பகுதி 2

பகுதி 2 இதே காலத்தில் தமிழ்நாட்டிலும் இதே மாற்றம் ஏற்படுகிறது. இன்று தமிழ்நாடு. இலங்கை மலேசியா, தமிழர்கள்வாழ் புலம்பெயர் நாடு என்ற வேடுபாறின்றி ‘தமிழ்கவிதை’ பொதுத் தளத்தை வந்தடைந்திருக்கிறது. இதில் எங்கு தேக்கம் வந்ததெனக் கருதுகிறீர்கள்? நான் அப்படி எண்ணவில்லை. நான் எப்போதும் அதைத் துரத்துபவனாகவே இருக்கிறேன். அப்படி தேக்கமிருந்தாலும் ஏதோ ஒரு திசையில் உடைத்துப்…

சிற்றிதழ்களின் அரசியலும் ஆய்விதழின் தேவையும்

தமிழில் உருவான சிற்றிதழ் சூழல் முயற்சியோடுதான் மலேசிய சிற்றிதழ் சூழலை பொருத்திப்பார்க்க வேண்டியுள்ளது. இலக்கியம், கலை, இதழியல் என தமிழகத்தை எப்போதும் முன்னோடியாகக் கொண்டிருக்கின்ற மலேசியத் தமிழ் கலை இலக்கிய உலகத்தை அறிய இந்த ஒப்பீடு அவசியமாகிறது. முனைவர் முரசு நெடுமாறன் அவர்களின் ஆய்வு நூலான மலேசியத் தமிழரும் தமிழும் எனும் நூலின் வழி, மலேசியாவில்…

அவநம்பிக்கையும் அறிவியல் கூறும் – 1

‘உடைந்த கண்ணாடியை ஏன் பார்க்க கூடாது’ ‘இரவானதும் நகம் ஏன் வெட்ட கூடாது’ ‘ஒற்றைக் காலில் ஏன் நிற்க கூடாது’ ‘இரவில் விசில் ஏன் அடிக்க கூடாது’ ‘கொடிக்கம்பிகளுக்கு அடியில் ஏன் நடக்கக்கூடாது’ ‘இரவில் உப்பை ஏன் வாங்க கூடாது’ ‘கர்ப்ப காலத்தில் கூந்தல் ஏன் வெட்டக்கூடாது’ என் முதல் கட்ட ஆராய்ச்சியை எனது அம்மாவிடமே ஆரம்பித்தேன். அடுத்து நண்பர்கள்…

ஹருகி முராகமி சிறுகதை: கினோ

அந்த மனிதன் எப்போதும் அதே இருக்கையிலேயே உட்கார்ந்தான். அந்த இருக்கை உயரமான பரிமாறும் மேடைக்குப் பக்கத்தில் இருந்தது. அது காலியாக இருந்தது. ஆனால் அது எப்போதும் காலியாகத்தான் இருக்கும். மதுபான விடுதியில் எப்போதாவதுதான் கூட்டம் நிரம்பி வழியும், அந்த இருக்கை கவனத்திற்கு வராமலும் வசதியற்றும் இருக்கும். அதற்குப் பின்னாலுள்ள படிக்கட்டு வளைந்து இறங்கியிருக்கும். அந்த இடத்தில்…

இல்லாத திசைகள் 4 – பழிவாங்கும் படலம்

என் 21-ஆவது வயதில் அந்த வாரப்பத்திரிகையில் இருந்து வெளியேறிவிட வேண்டும் என்று உறுதியாக முடிவெடுத்தேன். ஆனால் அதற்காக எந்த முயற்சியையும் எடுக்கவில்லை. அது தானாக நடந்தது. அரசாங்கம் நடத்திய ஒரு மாத தமிழ்ப்பத்திரிகையில் ஆசிரியராகப் பணியாற்றி ஓய்வுபெற்ற மூத்த பத்திரிகையாளர் ஒருவர் நான் வேலை செய்த வாரப்பத்திரிகை அலுவலகத்திற்கு வந்தார். அவர் இப்போதிருக்கும் பத்திரிக்கை ஆசிரியர்களுக்கெல்லாம்…

போதாமை

ஒரு சில வருடங்களுக்குப் பிறகு என்னுடைய எழுத்துக்களை மறுவாசிப்பு செய்தபோது இனம் புரியாத மன ஓட்டங்கள், அது இயலாமையா, போதாமையா என்று வழி தெரியாமல் தடம் புரண்டு ஓடியது. எழுத்து என்பது சமுதாயத்தை நோக்கிய வீர ஆவேச உபதேசங்கள் என்று நம்பியிருந்த எனக்கு வாழ்க்கையில் ஏதோ ஒரு புள்ளியில் நவீன இலக்கியத்தில் காலடி எடுத்து வைத்ததும்…

பகிர் உரிமம் – ஓர் அறிமுகம்

இணையத்தின்வழி கல்வி, கலாச்சாரம், பண்பாடு போன்று இன்னும் இதர பல துறைசார்ந்த ஆய்வுகள், கண்டுபிடிப்புகள் என அனைத்தும் உலகளாவிய அளவில் பொதுமைபடுத்தப்பட்டு பயன்படுத்தப்பட வேண்டும் என்கிற சாத்தியத்தை அனைவரும் எதிர்பார்க்கவே செய்கின்றனர். ஆனால், தற்போதுள்ள நமது சட்டங்களும் சமூக அமைப்பும் இதனை சற்றும் அனுமதிக்காதபடி இருப்பதுதான் தற்போதைய நிதர்சனமாகும். தொடக்கத்தில் பதிப்புரிமை சட்டத்தில் (Copyright) அதிக…

ஊர்க்காரர்களும் உள்ளூர்க்காரர்களும்

‘பிறக்க ஓர் ஊர் பிழைக்க ஓர் ஊர்’ என்ற வசனம் இன்னமும் அதே பிரபலத்துடன் பழக்கத்தில் இருக்கிறது. அதற்கான காரணம் ஒன்றுதான். அச்செயல் இன்னமும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. பணத்திற்காகத்தான் இப்படி ஊரை விட்டு ஊர் வருகிறார்கள் என சட்டென கடந்து சென்றுவிடுகிறோம். ஆனால் மனதினுள்ளே ஒரு சந்தேகம். இங்கு வேலைக்கு வந்திருப்பவர்கள், சாக்கடை அள்ளுகிறவர்கள்,…

ச. விஷ்ணுதாசன் கவிதைகள்

புழுக்கம்   வெளிகள் பலதாய் சமுக வெளிகள் பண்மியமாய் வேண்டும்.   வெளிகளை உருவாக்கிட இருப்பை உணர்த்தும் போதெல்லாம் முற்ற முழுதாக முள்வேலிச் சிறை அடைப்புக் கூடாய் அதிகாரத்தோடு …   சிறை முகாம் முழுவதுமாய் பாசி படர்ந்த இருட்டு இருட்டு கக்கிய விஷக் காய்ச்சல்.   வெளிச்சக் கீற்றை நாடும் அகவெளியும் புறவெளியும் அழுத்தப்பட்ட…

“தமிழில் சமகாலத்தில் எந்தப் பாடலாசிரியனும் நல்ல கவிஞன் என்ற பட்டியலில் இல்லை”

இலங்கையில் யாழ்ப்பாணத்தின் வடக்கில் உள்ள வருத்தலைவிளான் என்ற கிராமத்தில் பிறந்து வளர்ந்த திருமாவளவன் இப்போதிருப்பதும் இலக்கியத்தில் இயங்குவதும் கனடாவில். அரசியலும் அரங்கும் கவிதையும் திருமாவளவனின் ஈடுபாடுகள். என்றாலும் அரசியல்வாதியல்ல. கவிஞர். அரங்காடி. ஒத்தோடியல்ல. மறுத்தோடி. இதனால் வாழ்வின் பெரும்பகுதியும் சவால்களோடுதான் திருமாவளவனுக்குக் கழிந்திருக்கிறது. இந்த நேர்காணலும் அந்தக் குணத்தையே கொண்டிருக்கிறது. பெரும்போக்கு, பொது இயல்பு போன்றவற்றை…