‘தமிழ் எங்கள் உயிர்’ நிதிக்குச் சிறுகச் சிறுக பணம் சேரத் தொடங்கியது. இந்நிதிக்கு மேலும் அதிக அளவில் மக்களின் ஆதரவு கிடைக்க வேண்டும் என்றெண்ணி தமிழ் முரசு பத்திரிகையில் இது தொடர்பாகப் பல வகையில் விளம்பரங்கள் வெளிவந்த வண்ணம் இருந்தன. “உலகோர் போற்றும் உயர் தமிழ் சீரிளமை மாறாத செந்தமிழ் தமிழர்க்கு உயிர் தாய்மொழி தமிழ்…
வெண்முரசு முன் ஒலிக்கும் மூன்று கேள்விகள்
வெண்முரசு படைப்பு குறித்த உரையாடலின்போது நண்பர் ஒருவர் இக்கேள்வியை முன்வைத்தார் – இன்றைய காலத்தில் இப்படைப்பின் அவசியம் என்ன? நான் இந்தக் கேள்வியை அப்படைப்பு உருவான நாள்முதல் வெவ்வேறு விதங்களில் சந்தித்து வருகிறேன். ஆகவே இம்முறை நண்பரிடம் நிதானத்துடன் அணுக முயன்றேன். “சரி, இந்தப் படைப்பு இன்றைய காலத்திற்குப் பொருந்தாது எனில் எந்தக்காலத்திற்குப் பொருந்தும் என…
வரலாற்றுடன் உரையாடுதல்
(1) இதிகாசங்கள் என்பவை பொதுவாக உரையாடல்தான். முன்னர் நிகழ்ந்ததைச் சொல்பவை. இவ்வாறு வியாசர் வினாயகரிடம் சொல்லி அவர் எழுதிய ஜயகதையைச் சொல்கிறேன் என்று வைசம்பாயனர் ஜனமேஜயனிடம் அவையில் சொல்லும்போது அதைக் கேட்ட செளதி (சூததேவர்) பிற்காலத்தில் செளனகரிடம் உரைப்பதுதான் மஹாபாரதமாக நமக்குக் கிடைப்பது. அந்த இதிகாசம் இலக்கியத்துக்குள் வரும்போது அதுவும் ஒரு உரையாடலாகத்தான் நிகழ்கிறது. அது…
வெண்முரசு: ஒரு தன்னுரை
2013 இறுதி. ஒருநாள் ஆசிரியர் ஜெயமோகன் அழைத்திருந்தார். வியாச பாரதத்தை, அந்தக் களத்தைத் தனது தேடல் வெளியாகக் கொண்டு, வெண்முரசு எனும் தலைப்பில் பெரும்புனைவாக எழுதப் போவதாகக் கூறினார். எனக்கு அது ஆச்சரியம் அளிக்கும் விஷயம் இல்லை. காரணம் வெளியே அறிவிக்கும் முன்பே வேறொரு நிகழ்வின் பொருட்டு அவர் மகாபாரதத்தை எழுதத் துவங்கிவிட்டார். துரியோதனன் பிறப்பு…
குருபூர்ணிமா: கலையும் வாழ்வும்
கலைக்குள்ளிருக்கும் நுட்பத்தை உரையாடுவது இலக்கியச் சந்திப்புகளில் பிரதானமான அம்சம். அதைக்காட்டிலும் அதன் அடிக்கல்லாய், வேராய்ப் படிந்து கிடக்கும் கலைஞனின் கைரேகைகளை அறிவதும் சுவாரசியமானது. அது இளம் படைப்பாளிகளின் அடிப்படைத் தேவைகளில் ஒன்று எனலாம். குரு பூர்ணிமா ஒரு கலைநிறைவின் கொண்டாட்டமாகி 5 ஜூலை 2020 அன்று நடந்தபோது எழுத்தாளர் ஜெயமோகனுடனான உரையாடலை யூடியூப் வழி கண்டேன்.…
ஜெயமோகனின் நூறு சிறுகதைகள்
1 ஒரு புதிய இலக்கியப் படைப்பென்பது சீட்டாட்டத்தில் வரும் புதிய சீட்டைப் போல, கையிலிருக்கும் சீட்டுகளைப் புதியதோடு சேர்த்து மறுவரிசைப்படுத்துவது. (உண்மையிலேயே) புதிதாக வரும் படைப்புகள், ஒழுங்காகச் சீரமைந்திருக்கும் கடந்தகால படைப்புகளோடு தன்னை இணைத்துக் கொண்டு மேற்சொன்ன மறுவரிசையைக் கோருவதே. இதனையே டி.எஸ்.எலியட், கடந்த படைப்பிற்கும், புதிய வரவிற்குமான ஒத்திசைவு (confirmity between the old…
The Platform: மானுடத்தின் இறுதி நம்பிக்கை
சமூக வாழ்வியல் சிக்கல்களைப் பேசுமிடமெல்லாம் பொதுவாகவே உயரடுக்கு சமூகம், அதனுடன் நெருங்கியத் தொடர்புடைய முதலாளியத்துவம் சார்ந்தும் அச்சமூகத்தால் வஞ்சிக்கப்பட்டப் பிரிதொரு சமூகத்தைச் சார்ந்தும் கவனம் குவிமயமாவது இயல்பு. முதலாளியத்துவத்தை எதிர்த்துச் செயல்பாட்டு ரீதியிலும் கருத்தியல் பதிவாகவும் அழுத்தமான எதிர்ப்பை முன்வைத்த கார்ல் மார்ஸ் தொடங்கி இன்று அதன் நீட்சியில் முழுக்கவே சமூகவியல் சிக்கலாக உருமாற்றம் பெற்று…
விஷக் கிணறு
1 “சரியான…காட்டெருமை” வண்டியின் கதவடைத்து இறங்கும்போது முணுமுணுத்தது மீனாவின் காதில் விழாது என எண்ணிக்கொண்டேன். ஆனால் ஏதோ லேசாக விழுந்திருக்க வேண்டும். நான் இப்போதெல்லாம் பெரும்பாலும் முணுமுணுப்பதால் இயல்பாகவே அதற்கு செவிகூரத்தொடங்கி இருந்தாள். பின்னிருக்கையிலிருந்து இறங்கியபடி “என்னப்பா”என்று முகத்தில் குழப்பத்தை தேக்கியபடி என்னை நோக்கினாள். “ஒண்ணுமில்லம்மா… வண்டி நல்லா தாட்டியமா இருக்குன்னு சொன்னேன்”என்றேன். “ஃபோர் வில்லர்…
சிலந்தி
தாவங்கட்டையில் ஊறிய மொசுடை அழுத்தித் தேய்த்துவிட்டு நிமிர்ந்து அமர்ந்தேன். நசுங்கிய மொசுடு பரப்பிய நெடி மூக்கில் ராவியது. இரவு முழுவதும் விழித்திருந்ததால் எரிந்த கண்களை இடுக்கிக் கொண்டு தோளுக்கு மிக அருகில் மினுங்கும் வெள்ளிக் கோடுகளைப் பார்த்தேன். இழுத்துக் கட்டிய வாழைநார் போன்ற அந்தக் கோடுகள் சூரிய ஒளிபட்டு வானவில்லின் நிறங்களைப் பிரதிபலித்துக் கொண்டிருந்தன. கூர்ந்து…
பட்டுத்துணி
மணி அடித்தும் வீட்டுக்குப் போகும் அவசரமோ வழக்கம்போல் பேருந்து வரும்வரை பையன்களுடன் ‘தூஜோ காசுட்’ விளையாடும் எண்ணமோ வரவில்லை. ஒரு பட்டுத்துணி வேண்டும் என்ற எண்ணம் மட்டுமே அம்முவின் நினைவு முழுவதையும் ஆக்கிரமித்திருந்தது. கடைசி ஆளாக வகுப்பிலிருந்து வெளியில் வந்தாள். தோளில் புத்தகப் பை. காலையில் அம்மா கொதிக்கவைத்து ஊற்றிய தண்ணீர் கொக்கோகோலா நெகிலி புட்டியில்…
தீக்குருதி
1 1565 “மண்ணையும், பெண்ணையும் காக்காமல் போன நாட்டிற்கு, அவை இரண்டும் உதவாமல் போக. இனி எந்த மண்ணிலும் இப்பேரரசு நிலையாய் நிற்கப் போவதில்லை. இம்மண்ணில் இனி ஒரு சொல்லும், பொருளும் விழையாது, இவ்வரசின் எந்தப் பெண்ணும் மகவை ஈனப்போவதில்லை. அவ்வாறு நடந்தாலும் அதனைப் பேணும் பேறு அவளுக்கு வாய்க்காது. இக்கையறுநிலைக்குக் காரணமான ஒவ்வொரு உதிரத்தின்…