ஒவ்வொரு காலகட்டத்திலும் ஏதோவொரு சவாலை மனிதன் எதிர்கொண்டு, கடந்து வருவது எதார்த்தம். ஆரம்பத்தில் மிருகங்களிடமிருந்தும் இயற்கையிடமிருந்தும் தன்னை தற்காத்து கொள்வது மனிதனுக்கு பெரும் சவாலாக இருந்தது, பின் ஒரு சமூகமாகவும் நாடாகவும் மாறியபோது போர், சுதந்திரம், ஏற்ற தாழ்வு, இன வேறுபாடு, வறுமை, அடக்குமுறை, தொழில்நுட்ப தேவை, மருத்துவத்தில் மேம்பாடு, வளங்களின் பற்றாக்குறை போன்ற பல…
எனவே அந்தப் புத்தகத்தைத் தடை செய்வீர்
நீங்கள் என் வாயை மூடலாம் என் மனதையல்ல நீங்கள் என் கண்களை வெட்டி எறியலாம் ஆனால் நான் குருடனாக மறுக்கிறேன் நீங்கள் என் உடலைக் கொல்லலாம் என் ஆற்றல் உங்கள் முடிவற்ற பொய்களுள் ஊடுருவி உங்களைப் பேயாய் துரத்தும் (மொழிபெயர்ப்பு கவிதை) ஒவ்வொரு கருத்தாக்கத்தையும் கலைவடிவத்தையும் மனிதன் தனது அனுபவம், கல்வி, சிந்தனை, சமூக மதிப்பீடுகளின்…
கங்காணிமார் பாடல்கள்
(Awak Cantik Macam Bunga Raya) தமிழ்த் திரைப்படங்களில் 1970ஆம் ஆண்டுகளில் நடந்த முக்கியமான மாற்றங்களில் ஒன்று, வெளி நாடுகளுக்குச் சென்று படபிடிப்பை நடத்துவதாகும். பொதுவாகவே தமிழ்த் திரைப்படங்களில் வெளிநாட்டுக் காட்சி என்று சொல்லப்படுவது அந்நாட்டின் புறக்காட்சிகளை மட்டும்தான். அந்த நாடு ஓர் அரங்கு போன்றே பயன்படுத்தப்படுவது வழக்கம். ஆகவே அந்த நாட்டின் இடங்களும் மனிதர்களும்…
அக்கினி வளையங்கள்: புதைந்துபோன ஒரு கனவின் பாதை
1. மலேசிய மூத்த தமிழ்ப் படைப்பாளிகளில் சை.பீர்முகமதுவிற்குத் தனித்த இடம் உண்டு. ‘வேரும் விழுதுகளும்’ பெருந்தொகுப்பிற்காக அவர் ஆற்றியிருக்கும் பணி மதிக்கத்தக்கது. அவரது சிறுகதைகளில் சில உயர்தரத்தை எட்டியிருக்கின்றன. இப்போது ‘அக்கினி வளையங்கள்’ நாவலின் மூலம் தனது இலக்கியக் கடமையையும் வரலாற்றுக் கடமையையும் ஒருசேர நிகழ்த்தியிருக்கிறார். இந்நாவலை எழுதியதின் வழியாகத் தரமான படைப்பிலக்கியவாதியாகத் தன்னை அடையாளப்படுத்திக்…
‘அழகான மெளனம்’ : பதுக்கப்பட்ட உண்மைகள்
மலேசிய இலக்கியத்தில் நீங்கா இடம்பிடித்தக் களம் என்றால் அது தோட்ட புறம்தான். தோட்ட புற வாழ்க்கையை எத்தனை பக்கங்களுக்கு எழுதினாலும், எத்தனை பேர் வந்து எழுதினாலும் அது நிறைவடையாமல் நீண்டு கொண்டே செல்லக் கூடியதாக மலேசிய எழுத்தாளர்கள் மனதில் பதிந்து போய் கிடக்கின்றது. தோட்ட புறவாழ்வென்பது இரு வேறு காலகட்டங்களைக் கொண்டதாக வகுத்துக் கொள்ளலாம். முதலாவது…
மூன்று நாவல்களும் முழுமையின் கலைவடிவும்
காலங்களில் படர்ந்து கிடக்கும் வாழ்வின் அவதானிப்பையும், நிலங்களின் குறிப்பையும், வாழ்வின் ஓசையையும் அதன் நிசப்தத்தையும் விரிந்த தளத்தில் பேசக்கூடிய இலக்கிய வடிவம் நாவலாகும். மொழியால், மீட்டெடுக்கப்படும் உணர்வுபூர்வமான வரலாறுகள் அவை. மலேசியாவைப் பொறுத்தவரை சிறுபான்மை இனமாக இருப்பதாலேயே தமிழ் நாவல்களில் வரலாற்றுக் குறிப்புகளுக்கு முக்கியத்துவம் அதிகம். யாருடைய வரலாறு அழியும் பலவீனத்தைக் கொண்டுள்ளதோ அவை மறுபடி…
வளையங்களைத் தாண்டும் சுயநலம்
தான் கடந்து வந்தவர்கள் யாவரும் சுயநலமிக்கவர்களே, தானும் அப்படி இருப்பதில் தவறில்லை என்று சொந்த தராசில் சண்முகம்பிள்ளை எனும் கதாபாத்திரம் தன்னை நிறுத்தி நியாயப்படுத்தும் வகையில் இந்நாவல் முடிகிறது, அவர் பார்வையில் எல்லாருமே அக்கினி வளையத்தில் சாகசம் செய்யும் சுயநலமிக்க புலிகளாக நினைத்துக்கொள்கிறார். தானும் புலிதான் என அவர் எண்ணிக்கொள்ளும் நிலையில் ஒரு வாசகனாக அவ்வரியைக்…
வரலாறும் தனிமனிதனும்
‘எதிலும் சந்தேகப்படு‘ – கார்ல் மார்க்ஸின் இந்த வாசகம்தான் ‘அக்கினி வளையங்கள்’ நாவலின் பரப்பை ஒரு நிலைப்படுத்தும் சூத்திரமாக அமைக்கிறது. இந்நாவலை ஆசிரியர் சை.பீர்முகம்மது அவர்கள் வரலாற்று நிகழ்வுகளை மையமாக்கி அதனூடே மானுட கீழ்மைகளையும் ஊடாட விட்டுள்ளார். 23.02.1950 புக்கிட் கெப்போங்கில் (ஜொகூர்) போலிஸ்நிலையத்தில் கம்யூனிஸ்டுகள் நிகழ்த்திய தாக்குதல் வழி அக்கினி வளையங்கள் உக்கிரமாக எரியத் …
பேய்ச்சி: தமிழர் மானுடவியல் ஓர் அலசல்
யானைகளைக் குண்டலமாய், மலைப்பாம்பை முலைவடமாய் அணிந்த உக்கிரமான பேச்சியம்மனை எழுத்தாளர் ஜெயமோகனின் ‘படுகை’ சிறுகதையில் வாசித்திருக்கலாம். அது ஆச்சரியமான தோற்றம்தான். வழக்கத்தில் இல்லாத தோற்றம். ஆனால் பேச்சியம்மன் அவ்வாறான தோற்றத்தில்தான் குமரி நிலத்தில் காட்சியளிப்பதாக ஜெயமோகன் ஓர் உரையில் கூறுகிறார். நாட்டார் தெய்வங்கள் அவ்வாறான தோற்றம் எடுக்கக்கூடியவைதான். இதே பேச்சியம்மன்தான் மதுரை சிம்மக்கல்லில் வேறொரு தோற்றத்தில்…
பேய்ச்சி: பேருரு அன்னையுள் பேயுரு
என் பால்ய வயதிலிருந்தே என் வீட்டில் முருகன்தான் பிரதான சாமியாக இருந்தார். அவர் பக்கத்தில் விநாயகர், ராமர், கருமாரிஅம்மன். பட்டணத்திற்கு குடிபெயர்ந்த பிறகுதான் பேச்சியம்மன் அறிமுகமானாள். கையில் குழந்தையுடன் இருந்தவளைப் பேச்சிய்யம்மன் என்றார்கள். இன்னொரு கோயிலில் மடியில் ஒரு பெண்ணைக் கிடத்தி வயிற்றைக் கிழித்த கோலத்தில் இருந்தது. அதுவும் பேச்சியம்மன் என்றார்கள். கர்ப்பிணி பெண்களின் வயிற்றைக்…
நுண்வெளி கிரகணங்கள்: சாதாரணங்களின் தரிசனம்
எழுத்தாளர் சு.வேணுகோபாலைப் பற்றி நினைக்கும்போதெல்லாம் துள்ளல்களே நினைவுக்கு வரும். மேடையில் உரையாற்றும்போதோ தனிப்பட்ட முறையில் உரையாடும்போது சன்னமாக எழுந்து நிலைகொள்ளும் அந்தத் துள்ளல் வசீகரமானது. அது காளையின் ஜல்லிக்கட்டு துள்ளலை ஒத்தது. தனது திமிலைப் பிடிக்கவிடாமல் நாலாபுறமும் சுற்றும் காளையின் அசைவுகள் இயல்பாய் ஒரு நடனத்தை உருவாக்கும். கொஞ்ச நேரத்தில் அவ்வளவு பெரிய உருவம் தனது…