ஒருதுளி ஈரம் எங்கெல்லாம் இருக்கிறதோ அங்கெல்லாம் காற்றில் பறந்து வருகின்ற புல்லின் விதைகள் ஈரத்தைக் கவ்விப் பிடித்துத் துளிர்த்து விடுகிறது. அப்படிக் காற்றில் அலைந்து வரும் விதைகள் சிமிண்டு பாவிய தரையின் உடைவிடுக்கில் கூட பற்றிக்கொள்வதைக் கண்டிருக்கின்றேன். வரலாற்றுத் தருணங்களும் அவ்வாறானதுதான். அதன் கதையாடல்களுக்கு நடுவில் உயிர்ப்புள்ள நுண்மையான பகுதிகள் புனைவுக்கான சாரமாக எழுத்தாளர்களால் விதைக்கப்படுகிறது.…
‘ரிங்கிட்’ – மதிப்பு வீழாத நாணயம்
மரணத் தருவாயில் இருக்கும் ஒருவருடைய மரணம் நிகழ போவது அவருக்கு மட்டுமே தெரியும். அது எப்படி இருக்கும் என்பது யாராலும் சொல்ல முடியாது. வேண்டுமென்றால் செத்து மீண்டும் பிழைத்து வந்தவர்களிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளலாம். ஆனால் அப்படியொரு நிகழ்வு நடக்கப்போவது இல்லை. பிறகு எப்படித் தெரிந்து கொள்ள முடியும்? ஒரு நல்ல எழுத்தாளனால் மட்டுமே சொல்ல…
ரிங்கிட் நாவல் விமர்சனம்: நிகழ்த்திக் காட்டும் வரலாறு
வரலாற்றுநாவல் குறித்து எழுத்தாளர் ஜெயமோகன் இப்படிக் கூறுகிறார். ”வரலாற்றுநாவல் என்பது திருப்பிச்சொல்லப்பட்ட வரலாறேதான். அந்தத் திருப்பிச்சொல்லும் முறையில் நிகழ்ச்சிகளைத் தொடுக்கும் ஒழுங்கு, நிகழ்ச்சிகளைக் குறியீடுகளாக ஆக்கும் நுட்பம் போன்றவற்றினூடாக ஆசிரியன் உருவாக்கும் மையநோக்குதான் அதைக் கலைப்படைப்பாக ஆக்குகிறது”. இப்படியான ஒரு முயற்சியிலிருந்து சற்று விலகிப் போயிருக்கிறது ஆசிரியர் அ.பாண்டியனின் ‘ரிங்கிட்’ நாவல். வல்லினம் நடத்திய குறுநாவல்…
மிச்சமிருப்பவர்கள் : ஒடுக்கப்பட்டக் கூடுகளின் ஓங்கல்
ஒரு சமுதாயம் குறிப்பிட்ட ஒரு காலக்கட்டத்தில் எதிர்க்கொண்ட நிகழ்வுகளின் விவரிப்பாகத்தான் பெரும்பான்மையான மலேசியத் தமிழ் நாவல்கள் எழுதப்படுகின்றன. சுதந்திரத்திற்குப்பின், வெவ்வேறு சூழ்நிலைகளில் வெவ்வேறு வெளிகளில் வெவ்வேறு சமூக அடுக்குகளில் உள்ள இந்தியர்களால் எதிர்கொள்ளப்பட்ட உயிர் உருக்கும் சம்பவங்களை ஒரு புறநகரின் பின்னணியில் தொகுத்து கிட்டத்தட்ட 50 கால அவல நிலையை மிகத்துல்லியமாய் காட்சிப்படுத்திச் செல்வதே மிச்சமிருப்பவர்கள்…
மிஞ்சியிருப்பவர்களின் கதை
எழுத்தாளர் செல்வன் காசிலிங்கம் பற்றி நான் கேள்விப்பட்டதில்லை. அவர் எழுதிய படைப்புகள் எதையும் வாசித்ததில்லை. அவரின் புனைவில் முதன் முதலாய் படித்த எழுத்துப்படிமம் இந்த ‘மிச்சமிருப்பவர்கள்’ நாவல் மட்டுமே. என்னுடைய முதல் அனுமானம், இவ்வளவு சிறிய நாவல், கண்டிப்பாக அவ்வளவு சுவாரசியமாக இருக்காது என்பதுதான். ஆனால் இந்நாவல் இண்ட்ராப் (HINDRAF) பற்றியது என முகவுரையில் வாசித்ததும்…
மலைக்காடு: இழப்பும் நிராகரிப்பும் இணைந்த வாழ்க்கை
பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில், சஞ்சிக்கூலிகளாக மலேசியாவிற்கு வந்திறங்கிய இந்தியர்களின் வாழ்வியலையும் உளவியலையும் அலசும் இந்நாவல் அதனூடே பல்வேறு அரசியலையும் பேசுகிறது. தர்மபுரி பக்கத்தில் இருக்கும் பள்ளப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் மாரிமுத்து. பஞ்சத்தில் வாடிய கிராமத்திலிருந்து தன் 15 வயது மகன் உண்ணாமலையுடன் மலாயா புறப்படுகிறார். வளமான வாழ்வாதாரத்திற்காக அயலகம் புறப்படும் மாரிமுத்துவின் வாழ்க்கை என்னவானது? மூன்று…
மலைக்காடு: மலைமேட்டு முனியின் கனவுகாடு
இரு நூற்றாண்டுகளுக்கு முன், ஒரு குமுகாயத்தின் அடிப்படைத் தேவைகளை எல்லாம் பறித்துக் கொண்டு கொத்தடிமைகளாய், வாய்ப்பொத்திக் கைக்கட்டி ஏவிய வேலைகளைச் செய்ய உலகம் முழுதும் தேடித் திரிந்து வெள்ளையர்கள் அள்ளிக் கொண்டு வந்த பேரினம்தான் தென்னிந்தியத் தமிழர்கள். கப்பல்களில் அடித்தட்டு மக்கள் பயணிக்கக் கூடிய அந்தப் பகுதியில், மனித மலமும் மூத்திரமும் ஒருங்கே காய்ந்து நாறும்…
மண் அகல்
“முதல் கொட்டுக்கு ஆள் வந்துடுவாங்க. இப்பயே எழுந்தா தானே கல்லுக்கு பொங்கல் படைக்க ரெடி பண்ண முடியும், இன்னும் தூங்கிட்டு இருந்தா எப்படி வசந்தி? எந்திரி.” அப்போதுதான் அசந்தது போலிருந்தது வசந்திக்கு. அம்மாவின் குரல் கேட்டுத் திடுக்கிட்டு விழித்தாள். அம்மாவின் குரலா கேட்டது? உடல் சிலிர்த்தது வசந்திக்கு. ஜோதிமயி பாயிலிருந்து உருண்டு தரையில் கோணல் மாணலாக…
சியர்ஸ்
“புதுசா ஜாய்ன் பண்ணுன மூர்த்தி புரோவுக்காக” என முதல் சியர்ஸில் ஷாம் சொன்னபோதுதான் அவர் முகத்தைத் தெளிவாக கவனித்தேன். மந்தமான மஞ்சள் ஒளியில் கொஞ்சம் வயதானவராகத் தெரிந்தார். மனதுக்கு நெருக்கமாகாத அந்நியத்தன்மையில் முகவெட்டு. சடங்காகப் புன்னகைத்தேன். வாயில் வைக்கச் சென்ற கிளாஸை நிறுத்தி, அவர் பதிலுக்குச் சிரிப்பதற்குள் பார்வையை விலக்கிக்கொண்டேன். ‘மங்கி ஷோல்டரில்’ ஆரஞ்சு பழச்சாற்றைக்…
‘பேய்ச்சி’ சர்ச்சை
பேய்ச்சி நாவல் குறித்து தமிழ் மலர் நாளிதழில் சிலர் தங்கள் கருத்துகளைப் பதிவிட்டிருந்தனர். வல்லினம் தரப்பில் இருந்து தமிழ் மலர் நாளிதழுக்கு அந்நாவல் குறித்த நேர்மறையான பார்வைகள் வழங்கப்பட்டும் அந்த நாளிதழின் தர்மத்தின்படி அவை பிரசுரிக்க மறுக்கப்பட்டன. எனவே பேய்ச்சி நாவல் குறித்த பல்வேறு தரப்புகளின் இருந்து கருத்துகள் தொகுக்கப்பட்டு வல்லினத்தில் பதிவிடப்படுகிறது. காழ்ப்பின் குரல்கள்…
சர்வ ஃபூதேஷு
எல்லா ஆன்ஸெலை அவள் அறைக்குள் கொண்டுசென்று படுக்கவைத்துவிட்டு நான் திண்ணைக்கு வந்தபோது கொச்சு மாத்தன் அங்கே நின்றிருந்தான். எண்ணெய்பூச்சில் அவனுடைய பெரிய சிவந்த உடல் பளபளத்துக்கொண்டிருந்தது. நான் அவனை நோக்கி புன்னகைத்து “நடக்கக் கூடாது. பெஞ்சில் உட்கார்ந்திருக்கவேண்டும்” என்றேன். அவன் ‘ஆம், ஆனால் அந்த அறையில் எண்ணெய் மணம், என்னால் மூச்சுவிட முடியவில்லை” என்றான். “ஆவிக்குடுவையில்…