தங்களின் ‘போயாக்’ சிறுகதைத் தொகுப்பை வாசித்தேன். அதில் இடம்பெற்றுள்ள கதாமாந்தர்களின் வாழ்க்கை அனுபவம் இதுவரை என்னிடம் ஏற்படுத்தாத சலனத்தை ஏற்படுத்தியிருந்ததன் விளைவு, இரண்டு வாரங்களாக என்னால் வேறு எந்த படைப்பையும் வாசிக்க இயலவில்லை. கதைகளின் பேசுபடுபொருளை உள்வாங்கி செரித்துக்கொள்ள சிறிது காலஅவகாசம் தேவைப்பட்டது. தங்கள் எழுத்தைப் பற்றி முன்னுரை வழங்கியுள்ள திரு. சு.வேணுகோபால் அவர்கள் மற்றும் யாக்கை, போயாக் பற்றி கூறியுள்ள திரு. ஜெயமோகன் அவர்கள் இருவரின் எழுத்துகளையும் படித்தபிறகே என்னால் குறுஞ்சித்தரிப்புப்பாணி கொண்ட தங்கள் கதைகளை உள்வாங்கிக்கொள்ளவும் விரித்தெடுக்கவும் முடிந்தது.
Author: ம. நவீன்
எதிர்வினை 6: மதி பையா பாவம் – கலை சேகர்
என்ன மதியழகன்? தங்களிடமிருந்து எக்காரணம் கொண்டும் நேரடி பதில்கள் வரவே வாராதோ? என்னமோ கேட்டால் வேரென்னவோ சொல்றீங்க? அதுவும் நமக்குள் நடந்த வேறொரு உரையாடலின் படங்களை காட்சியகமாக்கி இருக்கிறீர்கள்! அவ்வளவு கோழையா நீங்கள் மதியழகன்?எதிர்வினை 5: கோழையின் குரல் – விஜயலட்சுமி
ம
தியழகன் என்ற கோழை தன்னிடம் விவாதம் செய்ய வல்லினம் குழுவுக்கு தைரியம் இல்லை என்று கொக்கரித்துக் கொண்டிருந்தான். வல்லினத்தில் ஆகக் கடைசியாக இணைந்த நான் “சரி வா. நேரடியா விவாதிக்கலாம்” என்று மூன்று முறை அவனை அழைத்துவிட்டேன். வரமாட்டேன் என ஓடி ஒழிகிறான். அவனிடம் விவாதிக்க நான் பண்பாடு கற்க வேண்டுமாம். ஒரு கோழை, முட்டாள் சத்தமிட்டுதான் பேசுவான் என இன்று அறிந்துகொள்ள முடிந்தது. நான் ஓர்மையில் யாரையும் அழைப்பதில்லை. ஆனால், கருத்து விவாதத்தைமீறி தனிமனித அவதூறு செய்பவர்களுக்கு மரியாதை கொடுக்க அவசியமில்லை. தனிமனிதனான என்னிடமே விவாதத்துக்கு வர தயங்கும் அவன், வல்லினம் குழுவை விவாதத்துக்கு அழைப்பதெல்லாம் இவ்வருடத்தின் சிறந்த நகைச்சுவை. எனவே, இத்துடன் முடித்துக் கொள்கிறேன். கோழைகளை நோக்கி வாளை சுழற்ற முடியாது அல்லவா.
எதிர்வினை 4: அறிவிலார் தீங்கு – விஜயலட்சுமி
மதியழகன் – நவீன் விவாதத்தை வாசித்தேன். கடைசியாக நேற்று அவர் என்னைப் பற்றி செய்த அவதூறையும் நண்பர்கள் அனுப்பினர். அனுப்பியிருக்க வேண்டாம். முட்டாள்களின் புலம்பலை, நேரடி வாதத்திற்கு வரத்தயங்கும் கோழைகளின் முகநூல் பதிவை வாசிப்பது வீண்.
நான் கராத்தே சண்டைப் போட்டிகளைப் பார்ப்பதுண்டு. அதில் படுபயங்கரமாக அடிப்பட்டு கோதாவில் இருந்து வெளியே விழும் ஒருவர் வெளியே நின்றபடி ஒற்றை விரலைக் காட்டி, கொச்சை மொழி பேசி, கத்தி, திட்டி என்ன செய்தாலும் அது பத்திரிகை செய்திதான். அது சுற்றி உள்ளவர்களுக்கு நல்ல பொழுதுபோக்கு. ஆனால் அவன் எப்போதுமே வீரனாகிவிட முடியாது. அது தோற்று அவமானம் அடைந்தவர்களின் கூச்சல். அந்தக்கூச்சலுக்குக் கைத்தட்ட ஆள் இருக்கும். குரங்கு குட்டிக்கரணம் அடிக்கும் போது கைத்தட்டுவதில்லையா.
எதிர்வினை 3: நட்பு நீக்கம் – அ.பாண்டியன்
எதிர்வினை 2: மதியழகன் எனும் மனநோயாளி – சரவண தீர்த்தா
முகநூலில் வல்லினத்துக்கு எதிராகப் பிதற்றிக் கொண்டிருக்கும் மதியழகன் எனும் நபர், வல்லினத்தின் தோற்றுனரான நவீனையும் வல்லினக் குழுவினரையும் குறிவைத்து பித்துப் பிடித்தவர் போல் எழுதிக் கொண்டு வருவதை இன்று பொறுமையாக வாசித்தேன். பைத்தியங்கள் இப்படித்தான் எழுதுமா? என்று கேட்கும் அளவுக்கு அவருடை முகநூல் எழுத்து எல்லையை மீறி, அவரையே அவர் முட்டாள் எனக்காட்டிக்கொண்டு ஆடும் அளவுக்குச் சென்றுள்ளது. இதில் வேடிக்கை என்னவென்றால் அவருக்கு லைக்கிடும் நண்பர்கள் அவரது குரங்கு சேஷ்டைகள் தொடர வேண்டும் என விரும்பியே உசுப்பேத்துகின்றனர். அவர்களும் பொழுது போக வேண்டும் இல்லையா? ஆனால் குரங்குகளுக்கு தான் ஒரு கேலிப்பொருள் என எப்போதும் தெரிவதில்லை. சிலசமையம் அது குறியைக் காட்டி பொதுவில் மூத்திரம் அடிக்கும். அனைவரும் ரசித்துச் சிரிப்பர். மதியழகன் அதைதான் செய்கிறார். விவாதம் என்ன சுச்சா பெய்கிறார். அதை லைக்கிட்டு ரசிக்கின்றனர்.எதிர்வினை 1 : கள்ள மௌனமும் இலக்கிய உலகமும் – கலை சேகர்
வணக்கம் மதியழகன்! நல்ல பெயர். ஆனால் அதிலுள்ள முதல் பகுதி உங்களிடம் இல்லையென நினைக்கிறேன். பிறகென்ன சார்? எந்த பிரச்னையோடு என்னத்தை முடிச்சு போடுகிறீர்கள். ஆபத்தானவர் ஐயா நீங்கள்.மதியழகன் என்பது புனைப்பெயர்தான் – ம.நவீன்
மதியழகன் தன் முகநூலில் எனது நேர்காணலை முட்டாள்தனமானது என்பதாகக் குறிப்பு ஒன்றை இன்றைக்கு எழுதியுள்ளார். அதற்காக இன்னும் கொஞ்சம் உழைத்திருக்கலாம். உழைப்பை அவரிடம் எதிர்ப்பார்க்க முடியாதுதான். அவரது அதிகபட்ச உழைப்பே ஒரு கட்டுரை எழுதும் முன் பலரையும் அழைத்துக் கருத்துக்கேட்டு தொகுப்பதுதான். மலேசியத் தமிழர்களின் வாசிப்பு குறித்த கட்டுரை எழுதும்போது என்னை அழைத்தவர் “மா.இராமையா என்பவர் யார்? நான் கேள்விப்பட்டதே இல்லையே?” எனக்கேட்டபோது அவர்தான் மலேசியாவின் முதல் சிறுகதை தொகுப்பை வெளியிட்டார் எனக்கூறி விளக்கம் கொடுத்தபோது “அப்படியா? அப்படியா? எனக்குத் தெரியாதே” எனக்கேட்டுக்கொண்டவரின் அறியாமை இன்னமும் மனதில் அகலாமல் உள்ளது. ஆனால் மலேசியாவில் மிக நீண்டகாலம் எழுதிக் கொண்டிருக்கும் ஒரு மூத்த எழுத்தாளரின் பெயரையும் தான் அறிந்திராததைப் பற்றிய குற்ற உணர்வோ வெட்கமோ கொஞ்சமும் இல்லாமல் அதை தனது அசட்டுச் சிரிப்பின் வழி கடந்துகொண்டிருந்தார்.
ஆதி.இராஜகுமாரன்: நிழலைப் பதுக்கிய கலைஞன்
வல்லினம் நூறு வீடியோ பதிவில் இவ்வாறு சொல்லியிருப்பேன். ‘ஒருவேளை ஆதி.இராஜகுமாரன் இல்லாமல் இருந்திருந்தால் வல்லினம் அச்சு இதழ் தொடர்ந்து வெளிவருவதில் சிரமம் ஏற்பட்டிருக்கும்.’ அவ்வுதவியை அவர் நட்பு கருதி செய்யவில்லை. அடிப்படையில் அவர் தன்னை ஓர் தேர்ந்த இலக்கிய வாசகனாகவே வைத்திருந்தார். எனவே அவ்வாறான முயற்சிகளில் தன்னை இணைத்துக்கொள்வது அவருக்கு உவப்பாக இருந்தது.
மண்டை ஓடி: கிறிஸ்டி கடிதம்
அன்பு நண்பர் நவீன் அவர்களுக்கு,
கிறிஸ்டி எழுதிக் கொள்வது. கடந்த விஷ்ணுபுரம் இலக்கிய விருது விழாவில் தங்களை நான் சந்தித்தது நினைவிருக்கலாம். எனக்கு உங்கள் ‘மண்டை ஓடி’ சிறுகதைத் தொகுப்பு புத்தகத்தை “வாசித்துவிட்டு எழுதுங்கள்” என்று சொல்லிக் கொடுத்ததும் நினைவிருக்கலாம். அடுத்த சிறுகதைத் தொகுப்பையே வெளியிட்டு விட்டீர்கள் என்று நண்பன் சுரேக்ஷ் கூறினான். மிகவும் தாமதமாக கடிதம் எழுதுவதற்கு மன்னிக்கவும். இடையில் சில காரணங்களால் இலக்கிய செயல்பாடுகளில் ஈடுபட முடியாமல் போய்விட்டது. மீண்டு வந்ததும் உங்கள் சிறுகதைத் தொகுப்பைத்தான் முதலில் வாசித்தேன். உடனே எழுத மனம் துடித்தாலும் அலுவலகப் பணிச்சுமையும் அலைச்சலும் தடைகளாகவே இருந்தன. இன்றைய தினத்தில்தான் இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்ததுபோல எனக்கும் இன்று இரண்டு மணி நேரம் ஓய்வு கிடைத்தது.
