கீழே இறங்கியபோது ஜெயமோகன் தன் பயணக்குழுவின் நண்பர் ஒருவரைக் கலாய்த்துக்கொண்டிருந்தார். சிரிப்பும் கேலியுமாகக் காலையிலேயே தொடங்கிவிட்டிருந்தனர். உடல் நலம் கொஞ்சம் தேறியிருந்தது. நான் அந்த வட்டத்தில் நுழைந்தவுடன் கவனம் என்னை நோக்கி திரும்பியது. மலேசிய எழுத்தாளர்கள் மத்தியில் உள்ள பூசல்கள் பற்றிய கலாய்ப்புகளாக அந்தப் பேச்சு பரிணாமம் எடுத்தது. ஏதும் பதில் பேசினால் கிண்டல்கள் தொடரலாம் என மௌனமாகச் சிரித்தபடி இருந்தேன். இதற்கு முன் சிக்கிக்கொண்டவரும் அதே உத்தியைத்தான் கையாண்டார். ஜெயமோகன் கிண்டல்களில் சிக்கும் ஒருவர் இறந்ததுபோல நடித்தால் கரடி முகர்ந்து பார்த்து போய்விடும் எனும் நீதிக்கதையின் காட்சியை நினைவில் வைத்திருப்பது நலம். தம்பிடித்து இறந்தவன் போல இருந்ததால் ஜெயமோகன் கவனம் விஜயலட்சுமி பக்கம் தாவியது. “நீங்க பெண்ணிய எழுத்தாளரா?” என ஆரம்பித்தார். விஜயலட்சுமி என்ன சொல்வதென தெரியாமல் குத்துமதிப்பாக தலையை நேராகவும் பக்கவாட்டிலும் ஆட்ட நான் கழண்டுகொண்டேன்.
பயணம்
மூதாதையர்களின் நாக்கு – 1: விஷ்ணுபுரம் விருதுவிழாவும் சில பயணங்களும்
2011இல் பூமணி அவர்களுக்கு விஷ்ணுபுரம் விருது கிடைத்தபோது எழுதிய சிறு குறிப்பில் பாரதிராஜா உள்ளிட்ட இயக்குநர்களைவிட ஓர் எழுத்தாளரே பூமணியை கௌரவிக்க பொறுத்தமானவர் என எழுதியிருந்தேன். அது பாரதிராஜாவையோ விஷ்ணுபுரம் வாசகர் வட்டத்தையோ அவமதிக்கும் நோக்கம் கொண்டதல்ல. தமிழ்த்திரை உலகில் பாரதிராஜாவின் அழுத்தமான இடத்தை அறிவேன். ஆனால் பூமணியின் நாவலை வாசித்திருக்கும் எழுத்தாளர் ஒருவரால் அவர் ஆளுமையை இன்னும் அணுக்கமாக அறிய முடியும் என நம்பினேன். விருது வழங்கும் கரங்கள் பெறுபவரின் முக்கியத்துவத்தை ஆழமாக அறிந்திருக்க வேண்டும் என்று எண்ணினேன். அது என் விருப்பம் மட்டுமே. இவ்வாண்டு மலேசிய எழுத்தாளர் சீ. முத்துசாமிக்கு புலிநகக்கொன்றை, கலங்கிய நதி போன்ற நாவல்களுடன் பல ஆய்வுக்கட்டுரைகள் எழுத்திய பி.ஏ.கிருஷ்ணன் அவர்கள் விஷ்ணுபுரம் விருதை வழங்குவதை அறிந்ததும் பயணத்துக்கான உற்சாகம் முழுமை பெற்றது.
சாம்பல் பூத்த தெருக்கள் வழி… 3
டில்லிக்கு வந்தபின் ஏழு நாட்களுக்கு முன் தங்கிய ஹாட்டலிலேயே மீண்டும் தங்கினேன். அங்கு வேலை செய்யும் சிலர் ஓரளவு நண்பர்களானார்கள். அல்லது டிப்ஸ் கொடுத்து நான் நெருக்கமாகியிருந்தேன். தென்னிந்தியா போல இல்லை. ஹாட்டல்களில் டிப்ஸ் கொடுக்கும்வரை அறையைவிட்டு அகல மாட்டேன் என்கிறார்கள். ஹாட்டல் மூலம் டில்லியைச் சுற்றிப்பார்க்க ஏற்பாடு செய்யப்போகும் என் திட்டத்தைக் கூறினேன். அவர்கள் அது சரியான திட்டமில்லை என்றார்கள். செலவைக் குறைக்க ஒரு உபாயம் கூறினர். அதன்படி அதில் ஒருவரின் நண்பர் காரை வரவழைத்தார்கள். ஒப்பீட்டளவில் கட்டணம் குறைவு. மேலும் முக்கியமான இடங்களையும் காட்டிவிடுவார் எனக்கூறினார்.
சாம்பல் பூத்த தெருக்கள் வழி… 2
படித்துறையின் மேலே ஒரு மரநிழலில் இருந்து கீழே நடப்பதை வேடிக்கைப்பார்த்துக்கொண்டிருந்தேன். எதற்கும் பெரிய அர்த்தம் இல்லாததுபோல தோன்றியது. மனிதர்கள் குறுக்கும் நெடுக்குமாக நடந்துகொண்டிருந்தனர். ஒவ்வொரு விதமான நடை. எனக்கும் நடக்க வேண்டும் போல தோன்றியது. வழிகாட்டிச்சொன்ன தசவசுவமேத படித்துறைக்குச் செல்லலாம் என எழுந்தபோது மனம் அவ்வளவு நிதானமாக இருந்தது. உடல் காற்றுபோலாகிவிட்டதை உணர்ந்தேன். நான் அடிப்படையில் கொஞ்சம் வேகமாக நடக்கக் கூடியவன். ஆனால் அன்று என்னால் வேகமாக நடக்க முடியவில்லை. ஒரு லாலான் புல்லின் பூவைப்போல கொஞ்சம் கொஞ்சமாக மிதக்கத்தொடங்கினேன். சிந்தனையில் எவ்வித குழப்பமும் இல்லை. நான் என்ன செய்கிறேன் என்பதை நன்கு அறிந்து வைத்திருந்தேன். தசவசுவமேதம் சென்றப்பின்னர் மீதம் இருந்த அரை உருண்டையையும் வாயில் போட்டு மெல்ல ஆரம்பித்தேன். எனக்குள் என்ன நடக்கிறது என கொஞ்சம் கொஞ்சமாக கவனிக்க ஆரம்பித்தேன்.
சாம்பல் பூத்த தெருக்கள் வழி… 1
காசியை நோக்கி பயணமாகும் முன் பார்ப்பவர்களிடமெல்லாம் சொல்லிக் கொண்டிருந்தேன், தனியாகச் செல்வதாக. உள்ளூர ஒரு சிறு தயக்கம். ‘தனியாகவா?’ என நண்பர்கள் யாராவது கேட்டுவைத்தால் ‘அதெல்லாம் ஒன்னும் பிரச்சனை இல்லை’ என அவர்களிடம் சொல்லும்போதே எனக்குள் நானே சொல்லி சமாதானப்படுத்திக்கொண்டேன். என் வாழ்வில் நெருக்கடியான காலக்கட்டம் இது. நீண்ட பயணம் முக்கியமாகப் பட்டது. உண்மையில் எனக்கு எப்போது பசிக்கும்? எப்போது உறக்கம் வரும்? எனது துணிச்சலின் எல்லை எது? இப்படி என்னை நான் கொஞ்சம் சோதித்துக்கொள்ளலாம் என்றும் நினைத்திருந்தேன். முக்கியமாக நான் செல்லும் இடம் சுற்றுலாதளமாக இருக்கக் கூடாது என்பதில் தீர்மானமாக இருந்தேன். காசி அதற்கு ஏற்ற இடமாகத் தோன்றியது. அடிப்படையான சில முன்னேற்பாடுகளை மட்டும் செய்து வைத்தேன். காசி குறித்த அடிப்படை சித்திரங்கள் எழுத்தாளர் ஜெயமோகனின் சில கட்டுரைகள் மூலம் எனக்குக் கிடைத்துள்ளன. முக்கியமாக அக்னி நதி கட்டுரையின் முன்பகுதி. எனவே போவதற்கு முன் அவரை அழைத்தேன். காசி குறித்த சுவாரசியமான விடயங்களைப் பகிர்ந்துகொண்டார். ‘திரும்பியதும் அழைக்கிறேன்’ என்றேன். ‘திரும்பினால் அழையுங்கள்’ எனக்கூறி சிரித்தார்.
gong xi fa cai Agnes Wong
வருடத்துவக்கத்தில் ‘பூலாவ் பெசார்’ செல்வதென்பது உற்சாகமானது. ஏற்கனவே அத்தீவு குறித்து விரிவாக எழுதியுள்ளேன். இப்பயணத்தில் என்னுடன் தயாஜி, மற்றும் உடன் பணியாற்றும் ஆசிரியர்கள் சரவணன் மற்றும் முருகன் ஆகியோர் வந்தனர். இம்முறை ‘பூலாவ் பெசார்’ செல்ல எனக்கு அடிப்படையான வேறொரு காரணம் இருந்தது. கடந்த ஆண்டும் நாங்கள் நான்கு பேர்தான் சென்றிருந்தோம். ஒருமுதியவர் எங்களிடம் பேச்சுக்கொடுத்தார். கருமை நிறம். மலாய்க்காரர். மெலிந்த ஆனால் திடமான தேகம். திடீரென என் கையில் நான்கு எண்களைத் திணித்து அந்த எண்களை லாட்டரியில் எடுக்கச் சொன்னார். “ஏறினால் எனக்கும் கொஞ்சம் கொடு” என்றார். நான் அதுநாள்வரையில் நான்கு நம்பர்களை எடுத்ததில்லை. அதுபோன்ற கடைகள் பக்கம் கூட போவதில்லை. உறவினர்கள் நண்பர்கள் பலர் எண்களுக்கு அடிமையாக இருப்பதைப் பார்த்ததுண்டு. எனக்கு அவ்வாறு எதாவது ஒன்றிடம் அடிமையாக இருப்பதில் உடன்பாடில்லை. அதிஷ்டம் போன்ற விடயங்களையும் நம்புவதில்லை.
சென்னை புத்தகக் கண்காட்சி 40 : ஓர் அனுபவம்
இது நான்காவது தமிழகப்பயணம். ஒவ்வொருமுறையும் அதிகப் புகார்களுடன் பயணமாகும் தேசம். ஆனாலும் அங்கு மீண்டும் செல்லும் வேட்கை குறைந்தபாடில்லை. எல்லா புகார்களையும் மீறி தமிழ்ச்சூழலில் அங்கு நடக்கும் அறிவியக்கம் அவ்வளவு எளிதாக மறுக்க இயலாதது.
இம்முறை இப்பயணத்தை வல்லினம் மூலம் ஏற்பாடு செய்தோம். ஏற்பாடு செய்யும் பொறுப்பை நானே ஏற்றுக்கொண்டேன். கலை இலக்கிய விழாவின் போது கடுமையாகப் பணிபுரியும் வல்லினம் இலக்கியக் குழுவினருக்கு (என்னையும் சேர்த்துதான்) நன்றி சொல்லும் வகையில் விமான டிக்கெட் செலவில் 400 ரிங்கிட்டும் நூல் வாங்கும் செலவில் 100 ரிங்கிட்டும் என வல்லினம் சேமிப்பில் இருந்து வழங்கப்பட்டது.
சிங்கப்பூர் இலக்கியப் பயணம்: பதிவு
ஆறு வருடத்திற்குப் பின் மீண்டும் சிங்கப்பூர். முழுக்க இலக்கியத்தை மட்டுமே நோக்கமாகக் கொண்ட பயணம். என்னுடன் அ.பாண்டியன் அவர் மனைவி, தயாஜி மற்றும் விஜயலட்சுமி உடன் வந்தனர்.
சிங்கப்பூர் எழுத்தாளர் விழாவில் கலந்துகொள்ள அழைப்பு வந்திருந்தபோது கொஞ்சம் ஆச்சரியமாக இருந்தது. சிங்கை அரசாங்கத்தின் ஏற்பாட்டில் நடக்கும் இந்த நிகழ்வில் நான்கு மொழிக்குமான கருத்தரங்குகள் நடக்கும். 24 வருடங்களுக்கு முன் இதுபோன்றதொரு நிகழ்ச்சியில் ரெ.கார்த்திகேசு கலந்துகொண்டுள்ளார். அதற்கும் முன்பு இராஜகுமாரன் 80களில் கலந்துகொண்டுள்ளார். அதற்குப் பின் மலேசியத் தமிழ் இலக்கியவாதிகள் அழைக்கப்படுவது இரண்டு மாமாங்கத்திற்குப் பின் நிகழ்ந்துள்ளது. நான் மலேசியாவைப் பிரதிநிதித்து நான்கு பேர் கலந்துகொள்ள அனுமதி கேட்டிருந்தேன். இரண்டு பேருக்கு மட்டும் அனுமதி தருவதாகப் பதில் வந்ததும் பாண்டியனை அணுகினேன். பாண்டியன் மலாய் இலக்கியம் குறித்து ஆழ்ந்த வாசிப்பு கொண்டிருப்பது அதற்கு முக்கிய காரணம்.
சிங்கப்பூர் பயணமும் இரு இலக்கிய நிகழ்ச்சிகளும்
6.11.2015 மாலையில் வல்லினம் நண்பர்களுடன் சிங்கையில் இருப்பேன். Swissotel the Stamford தங்கும் விடுதியில் ஏற்பாட்டாளர்களால் அறை பதிவு செய்யப்பட்டுள்ளது. எந்த நிமிடத்தையும் விரையம் செய்யாமல் மலேசிய – சிங்கை நண்பர்களுடன் இந்தச் சிங்கை பயணத்தில் இருக்க விரும்புகிறேன்.
ஜோக்ஜா : எரிமலையின் ஊடல் தேசம் – 10
மீண்டும் ஒரு எரிமலை சார்ந்த நிலபரப்புக்கு அழைத்துச் சென்றார் வழிக்காட்டி. இம்முறை மலைமீது எரிமலையிலிருந்து வெளிவரும் வாயுவைப் பார்க்கப் பயணம். அந்த வாயுவைப் பயன்படுத்தி மின்சாரம் தயாரிக்கின்றனர். 85 டிகிரி அதன் வெப்பம். அந்த வாயு வெளிவரும் இடத்தில் தேங்கும் நீர் பொல பொல என கொதித்துக்கொண்டிருந்தது. பெரிய பாதுகாப்பெல்லாம் இல்லை. சுற்றி இருந்தவை மூங்கிலிலான தடுப்புகள்தான்.