கடிதம்/எதிர்வினை

பேய்ச்சி: பேரன்பின் பெருமூச்சு

பொதுவாக ம.நவீன் படைப்பு, நேர்காணல், கட்டுரைகள், பயணக்கட்டுரைகள், எதிர்வினைக்கட்டுரைகள் மிக அருமையாக இருக்கும். உண்மைக்குத் துணையாக பல சாட்சிகள் மேற்கோள் குறிப்புகள் படர்ந்து விரிந்து நிறைந்து, சீராக வியாபித்து வியப்பைக் கூட்டும்.

Continue reading

இலக்கியமும் இலேகிய விற்பனர்களும் (இளம்பூரணன்)

இலக்கியம் என்ற சொல்லின் பாரம்பரிய புரிதல்களில் உயர்ந்து நிற்பது இலக்குகளை உணர்த்த வேண்டும்; அவை இன்பம் செய்யவேண்டும். இந்தக் கட்டுக்குள்தான் இன்றுவரை இலக்கியம் படைப்போர் பலர் சுகமனநிலை போக்கில் அவற்றை அணுகிவருகின்றனர். இலக்கியத்தைப் போதை ஏற்றும் கருவியாகக் கொண்டு அதில் சுய இன்பம் தேடித்தேடி திளைக்கின்றனர்.

Continue reading

ச்சும்மா கிழி (கலை சேகர்)

இப்பதிவு மதியழகன் நவீனுடைய நாவல் குறித்து எழுதிய விமர்சனக் கட்டுரைக்கானது.

முன்குறிப்பு: அது இலக்கிய விமர்சனமாக இருந்தால் கருத்து சொல்ல ஒன்றும் இல்லை. ஆனால் அது இலக்கிய விமர்சனத்திலிருந்து வெளியேறி… ஒரு இலக்கியப்படைப்பு எப்படி இருக்க வேண்டும்?, என்ன தொழில் செய்பவர் எப்படி எழுத வேண்டும்? என்ற போதனைகளாக இருந்தன. அது குறித்த பதிவு மட்டுமே இது.

Continue reading

தமிழக எழுத்தாளர்கள் மலேசியப் படைப்புகளை விமர்சிக்கலாமா?

maxresdefaultநவீன இலக்கிய முகாமில் கவிஞர் சாம்ராஜ் விமர்சனத்திற்குப்பின் உண்மையாக எழுந்திருக்க வேண்டியது மலேசிய கவிதை குறித்த ஓர் உரையாடல். அதை மலேசியக் கவிஞர்கள் ஒன்றிணைந்து நிகழ்த்தியிருக்க வேண்டும். சாம்ராஜின் கருத்துகளை மறுக்கும் முகம் கொண்ட வலுவான கவிதைகளை முன்வைத்து கட்டுரைகள் எழுதப்பட்டிருக்க வேண்டும். ஆனால், தமிழக இலக்கியவாதி எப்படி மலேசியப் படைப்புகளைப் புறக்கணிக்கலாம் என்ற தொணியே இங்கு எழுந்தது.

Continue reading

நூறு தீபங்களின் நடனம்

குப்பைநவீன இலக்கிய முகாமில் கவிஞர் சாம்ராஜ் மலேசிய கவிதை குறித்து தனது பார்வையை முன்வைத்தார். அதில் ஜமுனா வேலாயுதம், அகிலன், ஏ.தேவராஜன், பச்சைபாலன், கருணாகரன் ஆகியோரது தொகுப்புகளை முழு முற்றாக நிராகரித்தார். இதை தொடர்ந்து, கடந்த சில நாட்களாக கருணாகரன் தான் எழுதியவை தரமான கவிதைகள்தான் என முகநூலில் பதிவிட்டுவருவது தெரிகிறது. அதற்குச் சான்றாக ஏற்கனவே அத்தொகுப்புக்கு எழுதப்பட்ட சில மதிப்புரைகளை தன் முகநூலிலேயே பிரசுரித்தார். நட்பு பாராட்டும் பொருட்டு எழுதப்படும் மதிப்புரைகளுக்கு இலக்கிய விமர்சன தகுதி உருவாவதில்லை. மேலும் எம்.சேகரின் இலக்கியம் குறித்த பார்வையையும் விரிவாகவே விமர்சனத்திற்கு உட்படுத்த வேண்டியுள்ளது.
Continue reading

பேய்ச்சி: பெண்மையெல்லாம் பேய்ச்சி

81706602_3185996891429631_2453305157929140224_oமுதலில் ‘பேய்ச்சி’யை பேச்சி என்று தான் நினைத்தேன். ஆனால் பேய்ச்சி என திட்டமிட்டு பெயரிடப்படிருக்கிறது என படிக்கப் படிக்கதான் தெரிந்தது. பேய்ச்சி நாவலின் நிலப்பரப்பு எனக்கு கொஞ்சம் பரிச்சியமானதுதான். நானும் கெடாகாரி. லூனாஸும் டப்ளினும் ரொம்பவும் தூரமில்லையே. அதனாலேயே நாவலில் இன்னுமும் ஆழ்ந்து விட்டேன்.

Continue reading

பேய்ச்சி: நூதன செயல்பாட்டின் அச்சுறுத்தும் அசலம்.

79692721_2667540759959162_1004000063443173376_nபேய்ச்சியின் அவதரிப்பு ஓர் உச்சக்கட்ட ஆச்சரியம்.

மனிதனுக்குள் புதைந்து கிடக்கின்ற மர்மங்களைப் பற்றி விஞ்ஞானம் புரிந்து கொண்டிருப்பது மேலெலுந்தவாரியாக இழையோடும் ஒரு விளிம்பு நிலைத்தான். அந்த விளிம்பைத் தாண்டி விஞ்ஞானத்துக்குப் புரிபடாத வியப்பூட்டுகிற மர்மங்கள் ஆயிரக்கணக்கில் இருக்கின்றன. அதை அள்ளித் தெளித்து கொண்டே எழுத்தாளர் ம. நவீன் மனித சிந்தையின் நிசப்தத்தை நடப்புக்குக் கொண்டு வந்திருப்பது ஒரு விந்தை.

Continue reading

பேய்ச்சி – சுனில் கிருஷ்ணன்

sunil-2நாவலைப் பற்றிய சில பொதுவான எதிர்பார்ப்புகள் உண்டு. நாவலென்பது தத்துவத்தின் கலை வடிவம் என சொல்லப்படுவதுண்டு. ஒரு நல்ல நாவல் வெவ்வேறு வாழ்க்கைப் பார்வைகளின் மோதலாக, பின்னலாக உருக்கொள்ள வேண்டும். ஒரு வரலாற்று பிரக்ஞை நாவலுக்குள் செயல்பட வேண்டும். கதை மாந்தர்கள் உணர்வு ரீதியாக வாசகருடன் பிணைப்புக்கொண்டு முழுவதுமாக பரிணாமம் கொள்ள வேண்டும். ஆன்மீகமான ஒரு தளத்தை அடைய முற்படும் போது நாவல் தனிப்பட்ட முறையில் அகத்திற்கு நெருக்கமான ஒன்றாக ஆகிவிடுகிறது. ம.நவீனின் முதல் நாவல் ‘பேய்ச்சி’ அவ்வகையில், மேற்கூறிய அனைத்து எதிர்பார்ப்புகளையும் ஈடு செய்யும் தமிழ் புனைவு வெளியில்,  மிக முக்கியமான புதுவரவு என சொல்லலாம்.

Continue reading

மகரந்த வெளி – பஞ்சு மிட்டாயும் பட்டு நூலும்

pic-7சுனில் கிருஷ்ணன் பருந்துப் பார்வை என்ற தற்காப்புக் கவசத்துடன் இந்த ஆய்வை மேற்கொண்டுள்ளார். (மகரந்த வெளி) மலேசிய / சிங்கப்பூர் பகுதிகளில் விடுபட்டுப்போனது போலவே இலங்கையின் பகுதியும் பாதியில் தொங்குகிறது.

இலங்கை மலையகப் படைப்புகளில் மாத்தளை சோமுவின் படைப்புகள் ஆய்வில் தவிர்க்க முடியாதவை. ஒரு தோட்டத்து நாதஸ்வரம், சொந்த நாட்டு அகதிகள், கருவறை மற்றும் அவரது சிறுகதைகளை விட்டுவிட்டு இந்தக் கட்டுரை நகர்ந்துள்ளது. அதேபோல எஸ்.பொவை தவிர்த்து நீங்கள் இலங்கை இலக்கியத்தைச் சொல்ல முடியாது. எஸ்.பொவின் கடைசியாக வெளிவந்த யாழினி நாவல் தற்கால அரசியலை முன்வைத்துப் பேசுகிறது. எவ்வகை இலக்கிய விவாதத்திலும் எஸ்.பொன்னுத்துரையின் சிறுகதை, நாவல்களின் வீச்சைத் தவிர்க்கவே முடியாது.

Continue reading

சுனில் கிருஷ்ணனின் மகரந்த வெளி – கடிதம்

மகரந்த வெளி

sunil-2‘மகரந்த வெளி’ கட்டுரையை காலையில் வாசித்தவுடன் இதை எழுதுகிறேன். சுனில் கிருஷ்ணனின் உழைப்பின் மீது கொண்டுள்ள மரியாதை அவரது ஒவ்வொரு வெளிப்பாட்டிலும் அதிகரிக்கிறது. சிங்கை – மலேசியப் பயணத்தில் இன்னும் பல அனுபவங்களை இக்கட்டுரையில் அவர் தொகுத்து அளித்துள்ளார்.  அது மலேசிய – சிங்கை படைப்புகளை இன்னும் நெருக்கமாக அறிய வழியமைத்துள்ளது. ஒருவேளை குறிப்பிட்ட கால வரையறைக்குள் உருவான இலக்கிய வடிவங்களை ஒட்டிய பார்வையாக இக்கட்டுரை இடம்பெற்றிருந்தால் இன்னும் கூர்மையான அவதானிப்புகள் கிடைத்திருக்கலாம் என்று தோன்றியது. பெயர்களைப் பட்டியலிடுகையில் விடுபடல்கள் சாத்தியம் என்றாலும் ஈழ இலக்கியத்தில் எஸ்.பொவின் பெயர் விடுபடல் கூடாது என்றே எண்ணிக்கொண்டேன்.

Continue reading