வெள்ளைப் பாப்பாத்தி ஓர் அழகான சித்திரமாக மனதுக்கு இதம் தருகிறது. அதுவும் குறிப்பாக, குழந்தைகள் குறித்த மனதை வேதனைப்படுத்தும் செய்திகளை ஊடகங்களில் படித்துப் படித்து வெறுத்துப் போயிருந்த நேரத்தில், கள்ளங்கபடற்ற குழந்தையின் உள்ளத்தை எந்தச் சடங்கமும் இல்லாமல் ரசிக்க வைத்த ஆசிரியருக்கு நன்றி. எல்லாக் குழந்தைளையும் போல கொடிமலர் தன்னுடைய உலகத்தில் மிகச் சந்தோஷமாக வாழும் சிறுமி. உலகின் அற்புதங்களை உணரவும் ரசிக்கவும் நிகழ்த்தவும் அவளுக்கு ஒரு வெள்ளை வண்ணத்தி போதும். அவள் தேவதையாகிறாள். வரம் தருகிறார். வலிகளைப் போக்குகிறார்கள். வறுமையிலும் சிரமத்திலும் வாழும் அச்சிறுமி மிகுந்த உற்சாகத்தோடு மகிழ்ச்சியாகக் கதை முழுக்கக் குதித்தோடுகிறாள். போக்குவரத்து விளக்குகள் வண்ண மிட்டாய்களாய் அவளுக்கு மகிழ்ச்சியூட்டுகின்றன. காரில் போகும் வகுப்புத்தோழன் கணபதியை முந்தி சைக்கிளில் போவதில் அவளுக்கு உற்சாகம் கொப்பளிக்கிறது. அந்தக் குழந்தை ஆனந்தமடைய ஸ்ட்ராவும் கால்பிடி அரிசிமணிகளுமே போதும். தன்னைக் கேலி செய்து வருத்தப்பட வைக்கும் கணபதியையும் சிறுகுழந்தையாக்கி, தான் ஒரு பெரிய தேவதையாகி வரம் தருகிறாள். உலகியலில் அவளிடம் எதுவும் இல்லாமல் இருக்கலாம். ஆனால் அவள் நிறைவானவள்.
கடிதம்/எதிர்வினை
பேச்சி: கடிதம்
திரு நவீன்
பேச்சி சிறுகதை வாசித்தேன், நான் பெரும்பாலும் இணையத்தில் கிடைக்கும் கதைகளை
வாசிக்கிறேன். பேச்சி என்னுள் ஒரு சலசலப்பை உருவாக்கிவிட்டது. கதை வாசித்து பத்து நாட்கள் ஆகியும் பேச்சி பற்றியே சிந்தித்துகொண்டிருக்கிறேன் என கூறிவிடலாம். பெரிய இலக்கிய வாசிப்பு பழக்கம் இல்லையெனினும், இப்போது படித்துகொண்டிருக்கிறேன். கதையை வாசித்து முடித்தவுடன் என்னை வசிகரித்த வரிகளை தொகுக்க வேண்டும் என்று நினைத்தேன். மனதளவில் சேகரிப்பதைவிட, எழுதி பார்த்துகொள்ள வேண்டும் என்று தோன்றியது. பேச்சி கதையின் என்னை கவர்ந்த வரிகளை இங்கு குறிப்பிடுகிறேன்.
இலங்கை வாசகர்களும் இலக்கிய வாசகர்களும்
எழுத்தாளர் ஜெயமோகனின் தளத்தில் ‘இலங்கை,நவீன்‘ எனும் குறிப்பை வாசித்தபோதே அதை ஒட்டிய சர்ச்சை எழும் என அறிந்ததுதான்.
ஒரு பயணக்குறிப்பு அதை வாசிக்கும் நபர்களின் தேடலில் / தேவையில் இருந்து உள்வாங்கப்படுகிறது. உண்மையில் என் பயணக்குறிப்புகள் எதை ஒட்டியும் ஆழமான பதிவொன்றைச் செய்யவில்லை. அவை அப்போதைய எனது மனப்பதிவின் புகைப்படங்கள். ஜெயமோகன் பிரதானமாக ஒரு நிலத்தின் இலக்கியச் சூழலை அறிய விரும்புபவர். அவ்வகையில் என் கட்டுரை வழி அவர் முன் வைத்தது ஒரு கருதுகோள் மட்டுமே. அந்தக் கருதுகோளை தவறு என மறுக்கவும் உண்மை என நிறுவவும் ஆரோக்கியமான உரையாடல்கள் தேவையாக உள்ளன.
பேச்சி : ஈரோடு கிருஷ்ணன் கடிதம்
பேச்சி: சிவமணியன் கடிதம்
பேச்சி கதை வாசிப்பின் முடிவில், புதிதாக தீட்டப்பட்டு அதன் தணல் கூட குறையாத கத்தி, முதல் பலியினை அறுத்து அதன் குருதியில் தோய்ந்த உடனேயே, தன் கூர்நுனி கொண்டு பிரசவித்த பெண்ணின் மார்புக் காம்பில் நுண்துளையிட்டு, உறைந்து அடைத்த முலைப்பாலை, இளக்கி வெளிக்கொணர்ந்து, பிறந்த குழந்தைக்கு பருகக் கொடுத்த காட்சியை கண்டது போல இருந்தது.
பேச்சி : கடிதங்கள்
கதைக்குள் நுழைவதற்குள், கதைசொல்லியை நான்கு வார்த்தைகள் திட்டிவிட வேண்டும்.
வார்த்தைக்கு வார்த்தை வியக்கும்படிச் சொல்லிச் செல்லும் யுக்தியை எங்கிருந்து ஐயா கௌவிக்கொண்டீர்கள்?
ஒரு சிறுகதையில் இவ்வளவு சொல்ல முடியுமா என்ற வியப்பை அள்ளிக் கொட்டுவதில் அப்படியென்ன வெறி உங்களுக்கு?
சிறிய புள்ளியான கருவை நீங்கள் பாட்டுக்கும் கிறுக்கித் தள்ளி திகைக்க வைப்பதில் யார் மேல் இந்த ஆதங்கம்?
அடிக்கடி புதியவைகளை எழுதித் தள்ள எங்கிருந்து கிடக்கிறது நேரம்?
பேச்சி : கடிதங்கள்
பேச்சி: சுனில் கிருஷ்ணன்
அன்புள்ள நவீன்
இதுவரை வந்துள்ள இந்த வரிசை கதைகளில் எனக்கு மிகவும் பிடித்த கதை என ‘பேச்சி‘யை
சொல்வேன். ‘யாக்கை’ யின் கதை சொல்லல் பாணி இதிலும் தொடர்கிறது. அப்பா கதை சொல்லியாகவும், அப்பா சொல்லி மகன் செல்வம் எழுதிய கதை என இரு சரடாக பிணைந்து செல்கிறது. அப்பா சொன்ன கதையே கூட செல்வம் சொன்னதுதானா என்றொரு மயக்கத்தை கதை அளிக்கிறது. இரண்டு கதைகளில் ஒரு கதை முற்று பெறுகிறது, மற்றொன்று பெறவில்லை என்பதாக கூட தோற்றமயக்கம் உருவாக்கியதில் கதை வெற்றி பெற்றுள்ளது. ‘கிராப்ட்’ ரீதியாக இந்த சோதனை கதை சொல்லல் முறையில் தேர்ந்து விட்டீர்கள் என்றே சொல்ல வேண்டும். எனினும் இதில் ஒரு சிறிய ஆபத்து உள்ளது, இது ஒரு கண்ணாமூச்சி விளையாட்டாக ஆகிவிடக்கூடும். கருப்பு மண்ணுக்கு அடியில் சிவந்த மண் கொம்பனை நினைவுபடுத்தியது போன்ற தகவல் வாசகரை கவனம் சிதற செய்யும் யுத்தியாக ஆகிவிடக்கூடும். தொன்மமும் உறவு சிக்கலும் முயங்கும் கதை. பேச்சி எனும் தொன்மம் வழியாக உறவு சிடுக்கை, பெண் உளத்தை தொட முயல்கிறது.
யாக்கை : கடிதங்கள் 5
நலம். மிக்க நலத்துடன் இருப்பீர்கள் என நம்புகிறேன்.
கனவு கலைந்து, கலங்கிய நினைவுடன் விழித்தெழுந்த, ஒரு அதிகாலையில் முதல் வேலையாக ‘யாக்கை’ கதையை வாசித்தேன். அந்த தருணம் முதல் எழுதும் இந்தக் கணம் வரை மனதில் ‘யாக்கை’ யே நிரம்பி வியாபித்திருக்கிறது. ‘காலைக் காட்சியில் பாசியால் நிரம்பி பச்சை நிறத்தில் காட்சியளித்த கடல்’ , ‘ஆழ்கடலுக்குள் உண்டாக்கிய அலைகளால் நீர் செம்மண் நிறத்திலிருந்தது’ போன்ற வர்ணனைகளும், ‘மழை பெய்த கடலடியில் மண் கிளம்பி கண்ணாடி போன்ற வலையில் படிந்து விட்டால் மீன்கள் உஷாராகி விடும்’ போன்ற நுண்தகவல்களும், ‘நீரில் உலர்ந்து பிளவுபடத்துவங்கிய முதுகுத்தோலை கொத்தி மீன்கள் சதையை பிய்த்த’, ஈத்தனின் வாழ்வின் உச்ச தருணங்களும், என இந்த கதை அபாரமான வாசிப்பனுபவம் தந்தது. கப்பலின் முன்பகுதிக்கு அணியம் எனவும், இங்கு சங்கரா மீன் என கூறப்படுவதன் ஒரு வகை, செப்பிலி மீன் எனவும் அறிந்து கொண்டேன்.
யாக்கை: விஜயலட்சுமி
உடலும் அதனுடன் சேர்ந்து உயிரும் இன்னொன்றுக்கு உணவாவதை ஈத்தனின் மரணமும்
மகளின் தொழிலும் சொல்கிறது. கடலில் ஈத்தனின் உடல் மீன்களால் அனுமதியின்றி தின்னப்பட்டது. தன் மகள் ஆண்களால் தின்னபட்டுவிட்டாள் என்பதை புரிந்தவுடன் ஈத்தன் தன்னை கடலுக்கு இரையாக்குகிறான். இப்போது அவளுடன் புணர வந்தவன் தன்னையும் ஒரு உடல் தின்னி என்பதை உணரும்போது நிற்க முடியாமல் ஓடுகிறான்.
இது கதையோட gist.



