ஜெயமோகன் 60: சியமந்தகம்

சியமந்தகம்

நாளை எழுத்தாளர் ஜெயமோகன் அறுபது வயதை நிறைவடைகிறார். வயது என்பது கூடுதலாக ஒரு வருடம். எல்லோருக்குமே அப்படி ஒரு வயது வரக்கூடியதுதான். ஆனால் ஆளுமைகளை நாம் தொகுத்துப் பார்க்கவும் அவர்களை இன்னொரு தலைமுறைக்கு மேலும் தீவிரமாகக் கடத்திச்செல்லவும் அது ஒரு சந்தர்ப்பம். ஜெயமோகன் போன்ற மாபெரும் ஆளுமையைக் கொண்டாட அப்படியான சந்தர்ப்பங்களைத் தவறவிடுதல் கூடாது. அவருக்கான ஒரு களஞ்சியத்தைக் கொண்டுவர வேண்டுமென்ற என் ஆவலை முதலில் சொன்னது சு. வேணுகோபாலிடம். அவருக்கே அப்படி ஒரு திட்டம் இருந்தது அப்போதுதான் எனக்குத் தெரிந்தது.

Continue reading

இருள்சூழ் உலகில் தேவஒளியின் நடனம் – அழகுநிலா

நம் இந்திய மனங்களுக்கு மகாபாரதம் வழியாக அறிமுகமாகும் சிகண்டி என்ற கதாபாத்திரத்தின் முக்கியத்துவம் பீஷ்மர் என்ற ஆளுமையால் மட்டுமே நிலைகொள்கிறது. இந்த முக்கியத்துவமும் இல்லாவிட்டால் நாம் அருவருப்புடன் முகம் சுளிக்கும் அல்லது அவமானப்படுத்தும் ஒருவனாகத்தான் சிகண்டிஇருந்திருப்பான். எழுத்தாளர் ஜெயமோகனின் ‘வெண்முரசு’ வாசிக்கும் வரை நானும் தினசரி வாழ்வில் சிகண்டிகளைச் சந்திக்க நேர்ந்தால் ஒருவித அசூயையுடன் ஒதுங்கிச் சென்றவள்தான். ஆனால் வாசித்த பிறகு, தனது அன்னைக்காக ஒற்றை இலக்குடன் வாழ்ந்து வென்றவள் அவளென அறிந்தபோது மகாபாரத சிகண்டி மீதும் தனது பால் அடையாளத்தை சமூகத்தில் நிலை நிறுத்துவதைஒற்றை இலக்காகக் கொண்டு போராடும் மற்ற சிகண்டிகள் மீதும் பெரும் மரியாதையும் மதிப்பும் ஏற்பட்டது.

Continue reading

ரயில்: கானகத்தில் கரையாத காலடிகள்

இரண்டாம் உலகப் போரின்போது 415 கிலோ மீட்டருக்குக் கட்டப்பட்ட தாய்லாந்து – பர்மா இரயில் பாதை  குறித்து தமிழில் சில புனைவு முயற்சிகள் நடந்துள்ளன. ஆர்.சண்முகத்தின் ‘சயாம் மரண ரயில்‘, அ. ரெங்கசாமியின் ‘நினைவுச்சின்னம்’, ‘புதியதோர் உலகம்’, சா. அ. அன்பானந்தனின் ‘மரவள்ளிக்கிழங்கு’, கோ.புண்ணியவானின் ‘கையறு’ ஆகிய நாவல்களும் சை.பீர்முகம்மதுவின் ‘வாள்’ என்ற சிறுகதையும் உடனடியாக நினைவுக்கு வரக்கூடியவை. இது தவிர 2009இல் சீ. அருண் எழுதிய சயாம் – பர்மா மரண இரயில்பாதை என்ற கட்டுரை நூல், 2014இல் சிங்கையின் நாடோடிகள் கலைக்குழு தயாரித்த ஆவணப்படம் (Siam Burma Death Railway) ஆகியவையும் இந்தக் கொடும் வரலாறு குறித்து மலேசிய – சிங்கை பிரதேசத்தில் தொடர் உரையாடல்களாக இருப்பதற்கு சான்றுகளாகின்றன.

Continue reading

“தேசிய இலக்கியங்களாக தமிழ் மற்றும் சீன படைப்புகளும் அங்கீகரிக்கப்பட வேண்டும்”

Menghidupi Sastera Tamil Malaysia

2021இல் நடந்த ஜார்ஜ் டவுன் இலக்கிய விழாவில் என் நேர்காணலும் இடம்பெற்றது. என் இலக்கியப் பின்னணி, பேய்ச்சி தடை, மலேசிய இலக்கியம் என விரிவாக நடந்த கலந்துரையாடல் அது. அந்த நேர்காணலின் தமிழாக்கம்.

இலக்கியத்தில் நீங்கள் இயங்கத்தொடங்கிய வரலாற்றைக் கூற முடியுமா? இள வயதில் உங்களை எழுதத் தூண்டியது எது? நீங்கள் இப்போது முழு நேர எழுத்தாளரா அல்லது வேறு பணிகள் செய்கிறீர்களா?

Continue reading

மலேசியத் தமிழ் வாழ்க்கையின் அடர்வண்ணங்கள் – சரவணன் மாணிக்கவாசகம்

ம.நவீன் மலேசியாவில், கெடா, லூனாஸ் எனும் சிற்றூரில் பிறந்தவர். இவருடைய முதல் நாவலான பேய்ச்சியைப் போலவே இந்த நாவலும் முழுக்கவே மலேசியப் பின்னணியில் நடைபெறும் கதை. அதைப் போலவே இந்த நாவலும் கோவிலிலேயே ஆரம்பிக்கிறது.

தீபன் என்னும் சிறுவனின், பதின்ம வயதில் இருந்து இருபது வயது வரையிலான கதையே இந்த நாவல். எதிர்பாராமல் ஒரு நிகழ்வினால் திடீரென ஆண்மைக்குறைவு நோய்க்கு ஆளாகும் தீபன், ஆண்மையை மீட்டெடுக்க சகலவிதமான முயற்சிகளையும் எடுக்கின்றான். பதின்ம வயதின் பாலியல் பற்றாக்குறையில் இருந்து பாலியல் உறவுகள் அபரிதமாகக் கிடைக்கும் இடத்திற்குப் போய் சேர்ந்தது, அவனது ஆண்மைக்குறைவை நினைவுபடுத்திக் கொண்டே இருக்கிறது. பாட்டனைப் போலவே வயதுக்கு மிஞ்சி ஆஜானுபாகுவான தோற்றத்தில், எல்லோரையும் பயமுறுத்தும் வேலையில் இருப்பவனுக்கு வெளியில் சொல்லிக் கொள்ள முடியாத குறைபாடு.

Continue reading

சிகண்டி- ஒரு தேவதையின் கதை

ம. நவீனின் சிகண்டி நாவல் திருநங்கையரைப் பற்றிய முதன்மையான நாவல் என்றும் மலேசியாவின் இருண்ட நிழல் உலகத்தைப் பற்றி நுட்பமாக விவரிக்கும் நாவலென்றும்  அறிமுகக் கூட்டங்களில் கூறப்படுகிறது. ஆனால் இந்நாவல் ஒரு தேவதையின் கதை என எனக்குத் தோன்றுகிறது.

Continue reading

சிகண்டி: ஈரத்தீயில் நனையும் மனிதர்கள் – மணிமாறன்

ம.நவீனின் ‘பேய்ச்சி’ மற்றும் ‘சிகண்டி’ நாவல்களை வாங்கி படித்துள்ளேன். வல்லினம் இணையப்பக்கத்தையும் அதன் இலக்கியச் சேவைகளையும் ஓரளவு அறிவேன். ‘திறந்தே கிடக்கும் டைரி’ படித்த காலத்திலேயே ஆசிரியர் எழுத்தின் மீது ஓர் ஈர்ப்பு ஏற்பட்டது. அன்றைய எனது வாழ்வியல் சூழல்களால் வல்லினத்தோடும் ம.நவீனோடும் தொடர்ந்து இணைந்திருக்க முடியவில்லை. அது வல்லினத்தின் ஆரம்பகாலம் என்றே நினைக்கின்றேன். எப்போதாவது எது மூலமாகவோ, யார் மூலமாகவோ வல்லினச் செய்திகள் கண்ணில் காதில் படும். அவ்வகையில் எனக்கு வல்லினத்தை அறிமுகம் செய்த தோழி கலைமணிக்கு நன்றிகள்.

Continue reading

சிகண்டி: இரு வேறு துருவங்களையும் இணைத்துச் செல்லும் வாழ்க்கை – அருணா காத்தவராயன்

வாசிப்பின்போது எனக்குள் எந்த தேடலும் இல்லை, கேள்விகளும் இல்லை. விடைத் தெரியாத பல புதிர்களுக்குள் நடுவே நம் மனித வாழ்க்கை அதன் போக்கில் நகர்வது போல, நான் அறிந்திராத ஒரு புதுமையான வாழ்க்கைக்குள் அடி எடுத்துவைத்த உணர்வோடு சிகண்டி முழுதும் பயணித்தேன். இது சரி அது தவறு என அசலிப்பார்க்கும் அவசியம் எனக்குள் ஏற்படவில்லை. ஒவ்வொரு பக்கமும் வெவ்வெறு விடியலோடு பிரகாசிக்க,மனமோ கயிறறுந்த காற்றாடியாக பறந்தது.

Continue reading

எழுத்தாளர் சங்க முன்னெடுப்புகள் மலேசியப் புதுக்கவிதைக்கு மறுமலர்ச்சியை உண்டாக்கியதா?

‘மலேசியப் புதுக்கவிதைகள்: தோற்றமும் வளர்ச்சியும்’ என்ற ஆய்வு நூல் மலேசியப் புதுக்கவிதை குறித்த ஆய்வுகளில் அடிக்கடி கோடிட்டுக் காட்டப்படுவதுண்டு. இராஜம் இராஜேந்திரன் அவர்கள், தன் முதுகலைப்பட்டப் படிப்புக்காகத்  தயாரித்த ஆய்வேட்டின் விரிவாக்கப்பட்ட தொகுப்பு இந்நூல். நவம்பர் 2007இல் பதிப்பிக்கப்பட்ட இந்நூலுக்கு சிறந்த கட்டுரை நூலுக்கான எழுத்தாளர் சங்கத்தின் மாணிக்கவாசகம் விருது அந்த ஆண்டே கிடைத்தது. அவர் விருது பெற்ற ஆண்டு இராஜம் அவர்களின் கணவரான இராஜேந்திரன் எழுத்தாளர் சங்கத்தின் தலைவராகப் பொறுப்பு வகித்தார். உலக பொதுவிதி படி இந்த விருது ஒரு முறைக்கேடானது என எதிர்வினைகள் வந்தன. இந்தக் கட்டுரை அந்த நூலின் உள்ளடக்கத் தரம் குறித்தும் முன்னெடுக்கும் அரசியல் குறித்தும் ஆராய முற்படுகிறது.

Continue reading

என் வாசிப்பில் சிகண்டி – புஷ்பவள்ளி

சிகண்டி நாவலை வாசிக்கத் தொடங்கியபோது ம. நவீன் எழுதிய பல சிறுகதைகள் என் கண்முன் வந்தன. தொடர்ந்து அந்நாவலை வாசித்தபோது அறிந்த அக்கதைகள் வழி அறியாத வேறொரு அத்தியாயத்திற்குச் செல்வது போல் ஓர் உள்உணர்வு.

Continue reading