எனது முகநூல் நண்பர் மனோஜ் உங்களின் ‘பட்சி‘ கதையின் இணையச் சுட்டியினை அனுப்பியிருந்தார். அதை வாசித்ததன் ஊடாக உங்களது எழுத்துக்களின் மீதான அபிமானியாக மாறியிருந்ததை உணர்ந்தேன். அதன் தொடர்ச்சியாக ‘நகம்‘ சிறுகதையை வாசித்தேன் என்று சொல்வதை விட கதையில் வாழ்ந்தேன் என்று திடமாக என்னால் சொல்ல முடியும்.
24.1.2022 – சன்வே வெலோசிட்டி பேரங்காடியில் ‘பூச்சாண்டி’ திரைப்படத்தின் முன்னோட்ட காட்சி திரையிடப்பட்டது. நண்பர் செல்வம் அழைத்ததால் திரையரங்கம் சென்றேன். அவர் அப்படத்தில் பணியாற்றியிருந்தார். இப்படத்தை ஜே. கே. விக்கி (விக்னேஸ்வரன் கலியபெருமாள்) இயக்கியுள்ளார். ஜே. கே. விக்கி திரை உலகில் மட்டுமல்லாமல் பொதுத்தளத்திலும் நன்கு அறியப்பட்டவர். பூஜாங் பள்ளத்தாக்கு, மலாயாவுக்குச் சோழர்கள் வருகை என தொடர்ந்து மேடைகளில் பேசி வருபவர்.
2021இன் தொடக்கம் லங்காவி தீவில்தான் விடிந்தது. லங்காவி வரி விலக்குத் தீவு. எனவே வெளிநாட்டினர் அதிகம் இருப்பர். அதனால் கொண்டாட்டங்களும் அதிகம் இருக்கும். நாங்கள் சென்றபோதும் கேளிக்கைகளுக்குப் பஞ்சமில்லை. கொரோனா தொற்று தொடர்பான எச்சரிக்கை இருந்தாலும் யாரும் பெரிதாக அச்சப்பட்டதாகத் தெரியவில்லை.
இன்று (18.11.2021) வழக்கறிஞர் பசுபதி சிதம்பரம் அவர்களுக்குப் பிறந்தநாள். கடந்த வருடம் அக்டோபர் மாதம் அவர் எழுதத் தொடங்கிய ‘ஒளிர் நிழல்‘ எனும் தொடர் 30 ஆவது பாகத்தை அடைந்துள்ளது. இந்த முப்பது பாகங்களுக்கும் நானே முதல் வாசகன்.
‘தமிழ்ச்சீலர்’ மா.செ.மாயதேவன் அவர்களை நான் முதன்முறையாக 2004இல் சந்தித்தேன். அப்போது நான் ஈப்போ ஆசிரியர் பயிற்சி கல்லூரியில் பயின்று கொண்டிருந்தேன். மூன்று மாத பயிற்றுப்பணிக்காகப் பள்ளிகளைத் தேர்வு செய்யச் சொன்னபோது கல்லூரியைவிட்டு மிக அதிக தொலைவுள்ள மாவட்டமாக விண்ணப்பித்தேன். பொதுவாக விடுதிக்கு எளிதாகத் திரும்பக்கூடிய தொலைவுகளில் உள்ள பள்ளிகளைத் தேர்ந்தெடுப்பதையே பயிற்சி ஆசிரியர்கள் விரும்புவர். எனக்கு புதிய சூழல் தேவையாக இருந்தது. அதன்படி எனக்கு தைப்பிங் மாநிலத்தில் பயிற்றுப்பணிக்கான இடம் வழங்கப்பட்டது.
(இக்கட்டுரை மலேசிய ஆசிரியர் பயிற்சி கல்லூரி மாணவர்களின் புரிதலுக்காக எளிமையான வடிவில் எழுதப்பட்டது)
நவீனத்துவம் (Modernism)
1890 முதல் 1930 வரையிலான கால கட்டத்தை நவீனத்துவ காலகட்டமாக மால்கம் பிராட்பரி, ஜேம்ஸ் மக்ஃபர்லேன் போன்ற கலை இலக்கிய ஆய்வாளர்கள் வரையறுக்கிறார்கள். நவீனத்துவம் என்றால் புதுமை ஒன்று உருவாவது அல்ல. அதை ‘நவீனத்தன்மை’ என்று சொல்லலாம். அது எப்போதுமே நடப்பதுதான். மனிதனுக்கு சக்கரம் அறிமுகமான காலத்தில் இருந்து இன்றைக்குத் திறன்பேசி பயன்பாடு வரை இவ்வாறு புதுமைகள் (நவீனத்தன்மை) அறிமுகமாகி வருகின்றன. ‘நவீனத்துவம்’ என்பது 19ஆம் நூற்றாண்டில் நிகழ்ந்த தொழில் நுட்பம் மற்றும் அறிவியல் வளர்ச்சி காரணமாக மனிதர்களின் சிந்தனைகளிலும், சமூக அமைப்புகளிலும், பண்பாட்டிலும் ஏற்பட்ட மாற்றங்களைக் குறிக்கிறது. இது ஒரு சிந்தனை முறை அல்ல. ஒரு கால கட்ட மனநிலை. அகில உலகத்தையும் ஆக்கிரமித்த மனநிலை.
கேள்வி: பேய்ச்சிக்கான முதல் விதை விழுந்த நிகழ்வென்று ஏதாவது உள்ளதா? அதை எத்தனை காலம் மனதிற்குள் காத்து வைத்திருந்தீர்கள்?
ம.நவீன்: பேய்ச்சிக்கு முன்பே அதில் பின்னிக்கிடக்கும் இரு சரடுகளை ஒட்டி நான் சிறுகதைகள் எழுதியிருக்கிறேன். முதல் கதை ‘ஒலி’. 2014இல் எழுதப்பட்ட இக்கதை, 1981இல் லுனாஸில் நடந்த சாராயச் சாவு அடிப்படையிலானது. மற்றது 2018இல் எழுதப்பட்ட ‘பேச்சி’. குலதெய்வத்தின் கோபத்துக்கு ஆளாகிவிட்டதாக நம்பும் இளைஞனின் கதை. இந்த இரண்டுமே எனக்கு நேரடி அனுபவம் இல்லாதவை. லுனாஸில் விஷ சாராயம் குடித்து ஐம்பதுக்கும் மேற்பட்டவர்கள் இறந்த காலத்தில் நான் பிறந்திருக்கவில்லை. அதுபோல என் குடும்பத்தில் குல தெய்வ வழிபாடு விடுபட்டு போனாதால் அதை ஒட்டிய வழிபாட்டு முறைகள் எதுவும் எனக்குத் தெரியாது. ஆனால் இவை இரண்டும் என்னை வெவ்வேறு வகையில் பின்தொடர்ந்து வந்தன.
அன்புள்ள நவீன், வரலாற்றுக்குள் இருக்கும் வரலாறு இயல்பாகவே சுவாரசியத்தையும் மர்மத்தையும் கொண்டுள்ளது. அது புனைவு வடிவில் எழுதப்படுகையில்அதன் மர்மம் இன்னும் கூடுகிறது. அவ்வகையில் அப்சரா சிறுகதையை சுவாரசியமான புனைவாக வாசிக்க முடிந்தது.
மலேசிய இலக்கியச் சூழலில் சிறுகதைக்கான முக்கியத்துவம் தொடர்ச்சியாகவே இருந்து வருகிறது. மலேசியாவைத் தாண்டி தமிழர்கள் வாழும் வேறு நாடுகளில் மலேசியத் தமிழ் எழுத்தாளர்களின் சிறுகதைகள் கவனம் பெறுவதுடன் பரிசுகளையும் பெற்றுள்ளன. நாவல் மற்றும் நவீன கவிதைகளைவிட சிறுகதை இலக்கியத்தில் குறிப்பிடத்தக்க சாதனையை மலேசியப் படைப்பாளிகள் செய்துள்ளனர். விமர்சன மரபு இல்லாத இந்நாட்டில் எழுதப்படும் அனைத்துமே படைப்புதான் எனும் மனநிலையில் எழுத்தாளர்கள் திளைத்திருக்கும் சூழலில், மலேசியச் சிறுகதை இலக்கியத்தின் வரலாற்றை ஒரு கழுகுப் பார்வையில் அறிவதும் அதில் எவ்வாறான ஏற்றத்தாழ்வுகள் நடந்துள்ளன என ஆராய்வதுமே அடுத்தகட்ட நகர்வுக்கு வழி சமைக்கும்.