மலேசியாவில் நவீனத் தமிழ் இலக்கியம் வேர்விடத் தொடங்கிய 70ஆம் ஆண்டுகளில் அதன் சாதனை முனையாக உருவானவை சீ. முத்துசாமியின் சிறுகதைகள். தோட்டப்புற வாழ்க்கையின் புற அழுத்தங்களோடும் அன்றாட அவலங்களோடும் எழுதப்பட்டுக் கொண்டிருந்த மலேசிய சிறுகதைகளுக்கு மத்தியில் அப்பாட்டாளிகளிடம் உள்ள அந்தரங்கமான யதார்த்தத்தை நுண்மையாக முன்வைத்த முதன்மையான படைப்பாளி அவர். அகவயமான பயணத்தின் வழி மனதின் இருண்மையை இடைவிடாது வரைந்து காட்டியவர். 90களுக்குப் பின்னர் அவரது மறுபிரவேசம் மலேசிய நவீன தமிழ் இலக்கிய உலகின் முன்னோடிகளில் ஒருவராக அவரை நிலைநிறுத்தியது.
Continue readingதாரா நாவல் வாசிப்பனுபவம் 1 – அரவின் குமார்
தாரா நாவலை வாசித்து முடித்ததும் எனக்குள் தோன்றிய முதல் கேள்வி நாவல் என்பது தருக்கத்தால் மட்டுமே ஆனதா என்பதுதான். அந்தக் கேள்வியை நாவலென்னும் கலை வடிவத்தில் தருக்கத்தின் பயன் என்னவாக இருக்கிறது என்பதாகவும் தொகுத்துக் கொள்ள முடியும்.
Continue readingதாராவைச் சந்தித்த கதை
ஒரு புனைவை எழுதிக்கொண்டிருக்கும்போது சந்திக்கும் அனுபவங்கள் எல்லாம் அந்தப் புனைவு தன்னை முழுமையாக்கிக்கொள்ள உருவாக்கித்தரும் வாய்ப்புகளோ என பல சமயம் எனக்குத் தோன்றுவதுண்டு. சரியாகச் சொல்வதென்றால் ‘பேய்ச்சி’க்குப் பிறகு எனக்குள் இவ்வெண்ணம் வலுவாகவே வேரூன்றியுள்ளது. இதை நான் மற்றவர்களிடம் சொல்லும்போது அதை மூடநம்பிக்கையாகவும் தற்செயல்களாகவும் சொல்லிக்கடப்பர். என்னால் அப்படி எடுத்துக்கொள்ள முடிவதில்லை.
கு. அழகிரிசாமியின் குழந்தைகள் (உரை)
அனைவருக்கும் வணக்கம்.
2005இல் நான் ஆசிரியராகப் பணியில் அமர்ந்தேன். தமிழ் மொழி ஆசிரியர் நான். பொதுவாகவே புதிதாகப் பணியில் அமரும் ஆசிரியர்களைப் படிநிலை ஒன்றில் பயிற்றுவிக்கப் பணிப்பது மலேசியத் தமிழ்ப்பள்ளிகளில் வழக்கம். அப்படி எனக்கு இரண்டாம் ஆண்டில் தமிழ் மொழி பயிற்றுவிக்கும் வாய்ப்புக் கிடைத்தது. நான் சற்றுக் கண்டிப்பான ஆசிரியர்தான். மாணவர்கள் மொழியைச் சரியாகக் கையாள வேண்டும் என்பதில் பிடிவாதமாகவே இருந்தேன்.
பவா செல்லதுரையும் கூல் சுரேஷும்
‘பிக் பாஸில்’ பவா செல்லதுரை அவர்கள் கலந்துகொண்டபோது நான் என் முகநூலில் ஒரு பதிவு இட்டிருந்தேன். சினிமாவுடன் சம்பந்தப்பட்ட கூல் சுரேஷ் ‘பிக் பாஸ்’ செல்லும்போது யாருக்கும் தவறாகப் படவில்லை; இலக்கிய உலகில் அந்த இடத்தை வகிக்கும் பவா செல்லதுரை செல்வதில் என்ன தவறு எனக் கேட்டிருந்தேன். இதை நக்கலாகவெல்லாம் கேட்கவில்லை. என் மனதில் பவா செல்லதுரை அதற்கான இடத்தில் மட்டுமே அமர்ந்துள்ளார்.
Continue readingசை.பீர்முகம்மதுவுக்கு அஞ்சலி
சை.பீர்முகம்மது இன்று (26.9.2023) அதிகாலையில் இறந்துவிட்டார் எனும் செய்தி அவர் மகனிடமிருந்து வந்திருந்தது. கடைசியாக மூன்று மாதங்களுக்கு முன் பார்த்திருப்பேன். நார்மன் வின்சென்ட் பீலின் ‘நேர்மறைச் சிந்தனைகள்’ எனும் நூல் வாசிக்க வேண்டும் என கேட்டிருந்தார். தனியாக ஓர் அறையில் அமர்ந்திருந்தார். சக்கரை நோயினால் கால் துண்டிக்கப்பட்டதும் அந்த அறையில்தான் பெரும்பாலும் அமர்ந்திருப்பதைப் பார்த்திருக்கிறேன். கொஞ்ச நேரம் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தேன். ‘அக்கினி வளையங்கள்’ நாவல் வெளியீடு குறித்துப் பேசினார். நான் அந்தப் பேச்சைத் தவிர்க்க நினைத்தேன். அந்த வெளியீடு குறித்து அவருக்குச் சில திட்டங்கள் இருந்தன. நான் எவ்வகையிலும் இணைந்து செயல்பட முடியாத திட்டங்கள் அவை.
Continue readingவெறுப்பின் தொடக்கங்கள்
சகோதரர் நவீன் அவர்களுக்கு,
ஜூலை மாத வல்லினம் வாசித்து முடித்தேன். மூன்று சிறுகதைகள் எனக்குப் பிடித்திருந்தன. அதில் எஸ்.ராவின் சிறுகதை அடக்கம் என்பதை நான் சொல்லாமலேயே நீங்கள் அறிந்துகொண்டிருப்பீர்கள். நான் ஏற்கெனவே அனுப்பிய சிறுகதைகளை நீங்கள் வல்லினத்தில் பிரசுரிக்காமல் நிராகரித்ததுண்டு. நீங்கள் நிராகரித்தவற்றை மற்ற இணைய இதழ்கள் பிரசுரித்ததும் உண்டு. அதனால் எனக்கு சங்கடம் இல்லை. நான் ஆச்சரியப்படுவது இவ்விதழ் 142ஆவது இதழ் என உங்கள் முக நூலில் அறிவித்திருந்தீர்கள். இத்தனை இதழ்களையும் இதே தீவிரத்துடன்தான் செய்கிறீர்களா? இத்தனை ஆண்டுகள் இந்தத் தீவிரம் குடிகொண்டிருக்க எது காரணமாக உள்ளது? அப்படி தீவிரமாகத் தோன்றிய சில இதழ்கள் ஏன் நின்றுவிடுகின்றன? வாசகர்களின் எண்ணிக்கையா? இணைய இதழ்களில் பணமும் வருவதில்லையே. எது உங்களை இயக்குகிறது?
பவன்
Continue readingஅத்தர்: அன்னையர்களின் கண்ணீர் குப்பி
2019இல் தொடங்கி தமிழ் புனைவிலக்கியத்தில் இயங்கும் ஒரு தலைமுறையின் வருகையைத் தொடர்ந்து கவனித்து வருகிறேன். ஜி.எஸ்.எஸ்.வி நவின், சுஷில்குமார், வைரவன், செந்தில் ஜெகந்நாதன் போன்றவர்கள் தமிழகத்திலிருந்தும் அரவின் குமார் மலேசியாவிலிருந்தும் சப்னாஸ் ஹாசிம் இலங்கையில் இருந்தும் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கி வருகின்றனர். அவ்வகைமையில் சிங்கப்பூரில் உருவான முக்கிய இளம் படைப்பாளியாக கே. முகம்மது ரியாஸைச் சொல்வேன்.
Continue readingWiki Impact : மை ஸ்கில்ஸ் அறநிறுவனமும் சமூகத்தின் நம்பகத்தன்மையும்
மலேசியாவுக்கு வரும் முக்கியமான ஆளுமைகள், இலக்கிய நண்பர்கள், கலைஞர்கள் என பலரையும் நான் மை ஸ்கில்ஸ் அறநிறுவனம் நடத்தும் கல்லூரிக்கு அழைத்துச் செல்வதுண்டு. 2012ஆம் ஆண்டு கிள்ளான் நகரில் அமைந்துள்ள கைவிடப்பட்ட பேருந்து முனையத்தில் அக்கல்லூரி இயங்கிய காலத்திலும் 2018ஆம் ஆண்டு தொடங்கி கலும்பாங்கில் 34 ஏக்கர் நிலப்பரப்பில் இயங்கிக் கொண்டிருக்கும் சூழலிலும் நான் தொடர்ச்சியாக ஏதோ ஒருவகையில் என்னை அவ்வமைப்புடன் பிணைத்தே வந்துள்ளேன்.
Continue readingகுமாரிகள் கோட்டம் – 20
குமாரி தேவிகளைச் சந்தித்து திரும்பும்போது சிறிய சலசலப்பு ஏற்பட்டது. எங்களுடன் வந்த கோமளவள்ளி, சிவலட்சுமி, தேவஜித்தா ஆகியோரைக் காணவில்லை. அவர்கள் மூவரும் குமாரிகளைக் காணும் திட்டத்தில் இணைந்திருக்கவில்லை. அப்பகுதியில் ஷாப்பிங் செய்ய விரும்புவதாக அவர்கள் சொல்லியிருந்ததால் மீண்டும் சந்திக்கும் நேரத்தையும் இடத்தையும் நிர்ணயம் செய்துவிட்டுதான் பிரிந்தோம். திரும்பி வந்தபோதுதான் அவர்கள் அங்கு இல்லாததும் அவர்களைத் தொடர்புகொள்ள வேறு வழிகள் இல்லாததும் எங்களுக்கே உறைத்தது.
Continue reading