Category: கவிதை

வே.நி.சூர்யா கவிதைகள்

surya-1

நடந்தேறுகிறது எதிர்பாராத இவையெல்லாம் ஒரு கோடு கடல் ஆகுமென நினைத்திருக்கவில்லை ஓர் இசை வாழ்க்கை ஆகுமென நினைத்திருக்கவில்லை ஒரு குண்டூசி இரவு ஆகுமென என்று கூட நினைத்திருக்கவில்லை இன்னும் எத்தனையோ நினைத்திருக்கவில்லைகள் இவையெல்லாம் எதிர்பார்த்திருக்கவில்லை குண்டூசி துளையிடும் இசை நீள்கிறது காகிதத்தில் நீளும் பெருங்கோடென பழமொழிகளுக்கு எதிராக மொழியை கோர்க்காதவர்கள் தோன்றிக்கொண்டே செல்கின்றனர் வீட்டின் கூரைகளை தாண்டிப்…

நெருங்கப்பூத்த மோமதி மலர்களை முத்தமிட்டதுண்டு

srishankar

மனப் பிணியாளர்களுக்கு காதில் மருந்திடும் சிகிச்சையை மேற்கொள்ளும் குடும்பத்தில் தனியாகப் பிறந்தேன் மேற்குத்தொடர்ச்சிமலை அடிவாரத்தில் இப்போது அந்த ஊர் இல்லையென எனக்குத் தெரியும் ஆரம்பக் கல்விச்சாலையில் உடனிருந்தவளோடு சேர்ந்து திருட்டைப் பழகினேன் பதிமூன்று வயதில் புகைப்படங்களுக்கு சட்டகமிடும் வேலையிலிருந்து வெளியேற்றப்பட்டேன் விளையாட்டு மைதானத்தின் கண்களுக்கு நானொரு முடவன் வேலைகேட்டு அதற்கான கட்டடங்களின்முன் நின்றதில்லை இளம் அவயங்களின்…

பாவைக் கூத்து

26-jayabalan-actor-600

அம்ம வாழிய தோழி, யார் அவன் என்று வினாக்குறியானாய் அறிந்திலையோடி?   வீட்டுக் காவல் மறந்து சந்து பொந்து மரங்களில் எல்லாம் காலைத் தூக்கி நின்றாடி பெட்டை நாய்களுக்கு மூத்திரக் குறுஞ்சேதி எழுதி அலையுமே அந்தச் சீமை நாயின் பேர் இல்லத்து வம்பனடி அவன். போயும் போயும் அவனையா கேட்டாய்?   பொம்மலாட்டப் பாவையைப்போல் ஒருவர்…

அன்புவேந்தன் கவிதைகள்

anbu-2

அன்பின் வழி அது   நமது அன்பின் பெரும்பொழுது எல்லையற்று விரியும் இப்பெருநிலத்தின் உயிர்க்கூட்டங்களின் மேல் பிரபைகளைப் பொழிந்தபடி நட்சத்திரங்களில் சிமிட்டிக்கொண்டிருக்க நாம் அப்போதுதான் ஒரு முத்தம் பகிரத் தொடங்கியிருந்தோம்.   தடங்களைத் தளர்த்தியபடி நெகிழ்ந்த புலன்கள் பாவி சிகரங்களையும் சமவெளிகளையும் பள்ளத்தாக்குகளையும் சுழித்துத் திளைக்கும் நமது அன்பின் நீர்மத்தில் மிதந்தபடி ஒரு புணர்தலைத் தொடங்கியிருந்தோம்…

பாம்பாட்டி சித்தன் கவிதைகள்

42d2a42b132fa46ab4a50f2d2b26959d

                காதுகளின் கடல்   ”பொன்னுக்குவீங்கி” என்று தடித்த தங்கச்சங்கிலியை அம்மாஅணிவித்தபோது காதுகளினுள் சில்லென்றது   பஞ்சாலை சங்கின் பேரொலி பறவைகளின் பேச்சரவம் அம்மாவின் ஆற்றாமை எனப் படிப்படியாகக் குறைந்து எதுவும் கேட்காமல் போனது   அப்புறம் காதுகளில் தூண்டில் மாட்டி வயர்கள் பேட்டரி சகிதம்…

எனது ஞாபகக் கிண்ணங்களில்…

Manushi

எனது ஞாபகக் கிண்ணங்களில் நிரம்பித் ததும்பும் உனது காதலை அள்ளிப் பருகியபடியே உயிர்த்திருக்கிறேன். நேசத்தின் கரங்களில் நாம் சிறு பிள்ளையாய் தவழ்ந்த காலம் ஒன்று இருந்தது.   அதீத அன்பினால் மெருகூட்டப்பட்ட நாட்களின் மீது வீசிய ஒளிக்கற்றைகள் ஒன்றுதிரண்டு முழுநிலவாய் வான் மீதேறிவிட்டதென சொல்லி இறுகத் தழுவிக் கொண்டாய்.   இதழ்களைச் சுவைத்துவிட்டு ‘நான் போதையேறிக்…

நேசமித்ரன் கவிதைகள்

11707509_364969297031120_7359688371029239378_n

ஒளியை முத்தமிடுதல் மந்திரவாதியின் தொப்பிக்குள் இருந்து மேலெழுகிற துயரநாளின் நிலவு வன்புணர்ந்து மனம்பிறழ்ந்தவள் மீண்டும் மீண்டும் சொல்லும் சொல்லாய் அலைமிதந்தேறுகிறது யாருமற்ற தீவில் பச்சோந்தி மரணநிலையில் கொள்ளும் நிறத்தில் உள்ள நிர்வாணத்துடன் உடன் பயணிக்கிறது தப்பிய விண்மீனின் கிரணம் அவ்வொளிக் கற்றை அத்துணை ஒளிஆண்டுகள் கடந்து பூமியைச் சேர்ந்த போது அந்த நட்சத்திரம் எரிந்து போயிருந்தது…

அன்பழகன் செந்தில்வேல் கவிதைகள்

image

            வெண் தந்தங்களால்  பகைவர் மதில் தகர்த்து புலிகள் அஞ்சும்படி  வனங்களில் திரிந்து  மூங்கில் தின்று  பசி  தீர்த்து  தடாகம் குடித்து தாகம் அடங்கி   மரங்கள் பெயரும்படி உதைத்து காடதிர பிளிருபவை  யானைகள்  இலஞ்சி குமாரசாமி கோவிலில்  கைப்பிள்ளைக் காரி வைத்திருக்கும்  தலை சுமக்கா குழந்தையின் சிரம்…

நவீன் மனோகரன் கவிதைகள்

poet-reading

                கவிதை என்பது… கவிதை என்பது தற்கொலைக்கு முன்பான ஓர் அந்தரங்கக் கடிதம் கவிதை என்பது யாருக்கும் புரியாத கண்ணியமான கண்ணீர் கவிதை என்பது தோல்விகளை மூடிமறைக்கும் தற்காலிக மேகமூட்டம் கவிதை என்பது ரத்தம் வடியாதிருக்க தோலில் இட்டுக்கொள்ளும் ரணமான தையல் கவிதை என்பது மௌனம்…

நரன் கவிதைகள்

Naran

                தேர்ந்த துப்புரவுத் தொழிலாளி தன் வீட்டைச் சுத்தப்படுத்தி குப்பைகளைத் தெருவில் வீசுகிறான் . பின் தலையைச் சொரிந்தபடி தன்னிடமே காசு வாங்கிக் கொள்கிறான் .   தேர்ந்த துப்புரவுத் தொழிலாளி தன் தெருவைச் சுத்தப்படுத்தி குப்பைகளை . நகரத்தின் வெளியே கொண்டுபோய் வீசுகிறான் நகரத்தில்…

பாட்டாளிகளின் சூதாட்டம்

10945677_1405702809728958_5564443911096030837_n

            பாட்டாளிகளின் சூதாட்டம்   ஏக வல்லமை பொருந்திய கன்வேயர் பெல்ட்டுகளின் பிதாக்களே பௌர்ணமியைக் கண்டு வருடங்களாகின்றன அமைதியாகக் கொஞ்சம் தூங்கவும் வேண்டும் கூர் பற்சக்கரங்களை இணைத்தபடி நீண்டுகொண்டே போகும் இக் கன்வேயர் பெல்ட்டை எப்போதுதான் நிறுத்துவீர்கள் காணாமல் போவது போலும் கனவு காண்பதுபோலவும் நான் தொழிற்சாலையின் வாயிற்…

லீனா மணிமேகலை கவிதைகள்

4d063938-b84e-4dc4-a7c1-55b81c947ff2

உலர்ந்தவை, உலராதவை  1. எனக்குப் பிறகு உன்னைக் காதலிக்கப் போகிறவளைக் குறித்து எண்ணிப் பார்க்கிறேன் பாவமாய் இருக்கிறது நான் நொறுக்கிப்போட்டிருக்கும் உன்னை எதைக்கொண்டு அள்ளி முடிவாள் நீ மறக்க முடியாமல்  அவ்வப்போது உச்சரிக்கப் போகும் என் பெயர் இரும்புத்துகள்காய் அவள் கண்களை அரிக்கும் உன்னோடு இருக்கும் ஒவ்வொரு நிமிடமும் கழுத்தை, தோள்களை, உதடுகளை, காதுகளை, தேமல்களை,…

ஓர் மௌன அழைப்பு

மூன்றாவது மாடியிலிருக்கும் என் பணிமனையின் அகண்ட சாளரக்கண்ணாடி  வழியாகத் தென்படும் ஒரு மரத்தின் முகடு உச்சி முகரும் உயரத்தில் தலைகாட்டி நின்றிருக்கும் வாஞ்சையோடு அரூபக் கரங்கள் அந்தரங்கமாயத்  தீண்ட நிரவமாய் அது குலுங்கிச் சிரிக்கும் விஸ்தாரமாய்க் கவைத்த கொம்புகள் அந்தரத்தில் எம்பிக் குதிக்கையில் பதின்மக் கிளைகளில் ஊஞ்சலாடும் பால்ய நினைவுகள் சின்னஞ்சிறு இலைகள்மீது ஒருதுளி வெயில் ஒளிரும் மாய விரல்கள்…

பிறப்பற்ற பிறப்பு

சுகத்திற்கு மட்டுமே கட்டில்கள் ஒதுக்கப்பட்ட பிறகு தூங்கம் தூக்கு கயிறுகளில் தொங்கிக்கொண்டிருக்கின்றன வயிற்றை நிறைத்துக் கொண்டது போல் மனத்தை  நிறைத்துக் கொள்ள வழியில்லை அன்பு ததும்பிய நான்கறையும் துருபிடிக்கத் தொடங்கிவிட்டன இப்போதுதான் துடிக்கிறது என்னுள் இன்னொரு இருதயம் . கண்ணீரை நிரப்பிக் கொண்டு சிரித்து மழுப்புகிறேன் சிரிப்பொலியின் சீற்றத்தில் நானே சாகிறேன் அசைவுகளில் நான் அசைவற்று…

பூசாரி அம்மத்தா

காணாக்கிளைப் பறவை அனுப்பும் குரல் உரசி இலை உதிர்க்கும் ஒலியோடு ஜோடியாக வெயில்மணம் பூசிப் பைய வரும் மதியக் காற்றின் முதுகில் தொற்றிக்கொண்டு வந்திறங்கும் அம்மத்தாவின் வீட்டு வாசலில் மகனைப் பிரிந்து தொலைவூர் சொந்தவீட்டில் தனியாகவே வாழும் அம்மத்தா முதுமை தேய்த்த கால்மூட்டுக்கு உள்ளங்கையை ஊன்றக் குடுத்து சாய்த்தவாறே அம்பலம் சுற்றி அஞ்சு முழுத்திங்கள் கண்டுவிட்ட…