
அலாவுதின் விளக்கில் அடைபட்டிருக்கும் பூதமொன்று அவனது அழுகை துளியின் சிறு துகள் பட்டு தூக்கம் கலைந்தது இது சாத்தியமே ஆகக்கூடாதென அசரீகள் முழுக்க பெண் குரல்களால் ஒலிக்கத்தொடங்கின ஆயிரத்து இரண்டாவது நாளுக்கான கதையை அரேபியர்கள் தேடிப்போகலானார்கள் அதிலவன் தனது மார்புக்கூண்டிலிருந்து இதயத்தை கழற்றி அதற்கு தங்க முலாம் பூசியதன் தகுதியை உயர்த்திக்கொண்டிருந்தான் விபரம் தெரிந்தவிட்ட…














