
நான்கு கால்களையும் பக்கவாட்டில் வாகாகப் பரப்பிக் கொண்டு முன்கால்கள் இரண்டின் இடையில் முகம் சாய்த்துத் தன்னையே திரும்ப பார்த்துக்கொண்டிருக்கும் பூனைகள் சாலைகளில் அகப்படும். அவற்றுள் சில அரிதாக வாலையும் அருகில் வைத்துக்கொண்டு அரை விழிப்பில் இருக்கும். தான் படைத்துக்கொண்ட அல்லது தனக்கு விதிக்கப்பட்டிருக்கிற உலகில் உளம் தோய்ந்து வாழ முடியாத தனிமையும் வெறுமையும் அதிலிருப்பதாய்த் தோன்றும்.…