
சித்தாண்டி I “நாங்க திலீபவுக்கு சித்தாண்டியில கல்யாணம் முடிச்சுக் கொடுப்பமே.” “ஏனது?” “இஞ்ச பார். உன்னப் போலில்ல… சித்தாண்டிலதான் நல்ல வடிவான பொம்பளப்புள்ளகளக் கண்டிருக்குறன் நான்.” “அம்மா… இங்க பாருங்க… அப்பா சொல்றது கேட்குதா? சித்தாண்டித் திருவிழாக்களுக்கு மட்டும் அப்பாவை அனுப்பிட வேணாம்.” அப்பா திண்ணையில் அமர்ந்திருந்து வெற்றிலை பாக்கு இடிக்கும்போதுதான் இவ்வாறு என்னைக் கிண்டல்…