
படுக்கைவிளிம்பில் இருந்து அக்காவின் கை நடுக்கத்தோடு விலகி கீழே தொங்கியதில் ரப்பர் குழாயில் மருந்து தடைப்பட்டு இரத்தம் மேலேறியது. சுற்றுக்கு வந்த மருத்துவர் அதை சரி செய்து “அவள் உன்னை காப்பாற்றியதாக எண்ணி தேற்றிக் கொள்,” என்று ஆறுதல் கூறிச் சென்றார். அதுவரை விட்டுவிட்டுத் தோன்றிக் கொண்டிருந்த அபாயகரமான மூச்சுத் திணறலின், உருவெளி மயக்கங்களின் பிடி…