
எல்லா ஆன்ஸெலை அவள் அறைக்குள் கொண்டுசென்று படுக்கவைத்துவிட்டு நான் திண்ணைக்கு வந்தபோது கொச்சு மாத்தன் அங்கே நின்றிருந்தான். எண்ணெய்பூச்சில் அவனுடைய பெரிய சிவந்த உடல் பளபளத்துக்கொண்டிருந்தது. நான் அவனை நோக்கி புன்னகைத்து “நடக்கக் கூடாது. பெஞ்சில் உட்கார்ந்திருக்கவேண்டும்” என்றேன். அவன் ‘ஆம், ஆனால் அந்த அறையில் எண்ணெய் மணம், என்னால் மூச்சுவிட முடியவில்லை” என்றான். “ஆவிக்குடுவையில்…