
(2018இல், சென்னையில் மீண்டும் நிலைத்த நிழல்கள் நூலை வெளியிட்டு ஜெயமோகன் ஆற்றிய உரையின் எழுத்து வடிவம்.) சுந்தரராமசாமியை நினைவுக்கூர்ந்து இந்த உரையை தொடங்கலாம் என்று நினைக்கிறேன். அந்தக் காலத்தில் ஒரு பேராசிரியர் நவீன தமிழ் இலக்கியம் பற்றி ஒரு கட்டுரை எழுதியிருந்தார். அப்பொழுது சுந்தரராமசாமி சொன்னார்: “பந்திப்பாய் விரித்திருக்கிறார்” என்று. அது குமரி மாவட்டத்தில் உபயோகப்படுத்தக்கூடிய…