
சின்வுவா புத்தகக் கடைக்கு எதிரில், சாலைக்கு மறுபுறம் நடைபெற்றுக்கொண்டிருந்த சாலைப் பராமரிப்பு வேலையிடத்தில் விசுக்கென புகுந்த காற்றொன்று குப்பைகளைச் சுழற்றி வளைத்து அள்ளி எடுத்துக்கொண்டு போய் எங்கும் இறைக்கின்றது. அதன் புழுதிப் படலம் அடங்கிக்கொண்டிருக்க, டெஸ்ஹெங் அவின்யுவிலிருந்த வானொலி பழுது பார்க்கும் கடையிலிருந்த வானொலியிலிருந்து நான்காவது ஒலிக்கூறு (beep) கேட்டதைத் தொடர்ந்து, இப்போது பிற்பகல் மணி…














