
மூன்று பேர் மட்டுமே வந்திருப்பது எரிச்சலாக்கியது. இது எப்போதும் நடப்பதுதான் என்றாலும் என்னால் கோபப்படாமல் இருக்க முடியவில்லை. என் வழக்கமான மாலை நேர குட்டித் தூக்கம் கெட்டிருப்பதால் லேசாகத் தலைவலியும் இருந்தது. கூடவே ராபியாவின் தொல்லை வேறு. அவள் வீட்டுக்கே செல்லவில்லை என காலையில் அணிந்த விளையாட்டு உடையும் அவள் சுமந்து வந்த புத்தக மூட்டையும்…