துணைக்கால் : ஒரு பார்வை

தமிழ் எழுத்துக்களின் வரிவடிவத்தில் துணைக்கால் என்று சொல்லப்படும் துணையெழுத்து பிற எழுத்துக்களைச் சார்ந்து இயங்கும் இயல்பு கொண்டதாயினும் சொற்களின் பொருள் வேறுபாட்டுக்கும், பொருள் புலப்பாட்டுக்கும் மிகவும் இன்றியமையாதது. தன்னடக்கத்தின் காரணமாகத் தன் கட்டுரைகள் துணைக்கால் தன்மை கொண்டவை என நூலாசிரியர் விஜயலட்சுமி கூறினாலும் இந்நூல் மலேசியச் சூழலில் மட்டுமின்றித் தமிழ் புழங்கும் எழுத்துச் சூழலில் விழிப்புணர்வை…

துணைக்கால்: படைப்பாளிகளுக்குத் துணைநூல்

இந்நூலைப் பல கோணங்களில் படைப்பாளிகளுக்குத் தேவையான தகவல்களைச் சொல்லும் கையடக்க விதிமுறை நூலாக நான் பார்க்கிறேன். ஒரு நூல் எழுதத் தொடங்கும் முதல் எழுத்திலிருந்து அந்நூலால் கிடைக்கப்பெறும் வருமானம் வரை ஒவ்வொரு படைப்பாளரும் கட்டாயம் கருத்தில் வைத்திருக்கவேண்டிய செய்திகளை எளிமையாகவும் தேவைக்கு ஏற்ப ஆங்கிலக் குறியீடுகள் மூலமாகவும் வழங்கியுள்ளார் நூலாசிரியர். இந்நூலிலிருக்கும் நூறு பக்கங்கள் இனி…

அவர்கள் பேனாவில் இருந்து கொஞ்சம் மை : வாசிப்பனுபவம்

“ஒரு மொழியின் இலக்கிய உச்சங்களை அறிவதன்வழி, அம்மொழியில் புழங்கும் மக்கள் கூட்டத்தின் பண்பாட்டு அறிவுத்தளத்தையும் அறியமுடியும் என்பதால் மலாய் சிறுகதைகளின் நோக்கும் போக்கும் குறித்து அறிந்திருக்க வேண்டிய கடமை நமக்கு உள்ளது. இதுவே ‘அவர்கள் பேனாவில் இருந்து கொஞ்சம் மை’ எழுதப்பட்டதற்கு அடிப்படைக் காரணம் ஆகும்.” முன்னுரையில் அ.பாண்டியன்

மலேசியாவில் தமிழ்ப்பள்ளிகள் தேவையா?

மலேசியாவில் தமிழ்ப்பள்ளியின் இருப்பு குறித்து பேசுவதன் நீட்சி எப்போதுமே சர்ச்சையான ஒரு மையத்தில்தான் சென்று முடியும். சிறுபான்மை இனமான மலேசிய தமிழர்களுக்கென்று இருக்கும் அடையாளங்களில் ஒன்று கோவில் என்றால் மற்றது தமிழ்ப்பள்ளியாகவே எப்போதுமே பொதுபுத்தியால் நம்பப்பட்டு வருகிறது. இவை இரண்டுமே தொடக்கம் முதலே மொழியை வளர்க்கவும் சமுதாய போராட்டங்களை முன்னெடுக்கவும் ஒரு தளமாகவே இருந்துவந்துள்ளன. அதேபோல…

தமிழ் மொழியில் எழுதப்பட்ட பன்னாட்டு சிறுகதைகள்

“வாழ்வின் துயரங்கள் வாழச் சொல்கின்றன” போர், அரசியல் காரணங்கள், கல்வி, வணிகம், வேலை, உயிர் பிழைக்க என்று பல்வேறு காரணங்களுக்காக, பல்வேறு காலங்களில் புலம்பெயர்தல் நடந்திருக்கிறது. இன்றும் உலகெங்கும் நடந்துகொண்டிருக்கிறது. இந்தக்கட்டுரை புலம்பெயர்தலுக்கான காரணங்களையோ, புலம்பெயர்ந்தவர்கள், புகலிடத்தில் சந்தித்த கொடூரங்களையோ ஆராயாது. புலம்பெயர்ந்தவர்கள் – புகலிடத்திலிருந்து எழுதிய சிறுகதைகளில் – பன்னாட்டு வாழ்வை, பண்பாட்டை, கலாச்சாரத்தை,…

எல்லைகளைக் கடந்த மொழியும் கவிதையும்: மொழிபெயர்ப்புக் கவிதைகள்

தமிழ்க்கவிதை இயக்கத்தில் மொழிபெயர்ப்புக் கவிதைகளின் வரவு புதிய பாணியிலான கவிதை உருவாக்கத்திற்கு வழி வகுத்தது. மலையாளம், தெலுங்கு, கன்னடம் போன்ற மொழிகளின் மொழிபெயர்ப்புகளோடு தமிழோடு தொடர்பற்ற சீன, ஆப்பிரிக்க, ஜப்பானிய, லத்தீன் அமெரிக்கக் கவிதைகள் தமிழில் பரவலாக மொழிபெயர்க்கப்படுவதன் வழி புதிய வாழ்பவனுங்களைத் தமிழ்க் கவிதை உள்வாங்கிக் கொள்வதோடு, பாசாங்கற்ற அக்கவிதை மொழியினைத் தமிழ்க்கவிதைகளும் தன்னுள்…

சலமண்டர்

[ஜப்பானிய நவீன எழுத்தாளர்களின் முன்னோடி, மசுஜி ஈபுசே 1919ல் – எழுதி மிகவும் புகழ்பெற்ற கதை ‘சலமண்டர்’. உலகின் பல மொழிகளில் இக்கதை மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. மனிதர்களற்ற கதாபாத்திரங்களின் வழியும் சூழல்களின் வழியும் மனித வாழ்வின் அழுத்தங்களையும் உணர்வு போராட்டங்களையும் ‘சலமண்டர்’ எள்ளலோடு வெளிப்படுத்துகிறது.]   சலமண்டர் கடுஞ் சோகத்தில் ஆழ்ந்திருந்தது. அது தன் வசிப்பிடத்தில் இருந்து வெளியேர…

மக்கள் அவரைச் சூழ்ந்திருக்கிறார்கள்

அவர் இறுதியாக சிறையில் கழித்த காலம் மிகவும் கொடுமையானது. சிறையிலிருந்து விடுதலை பெற்ற பிறகு மிகவும் தொலைதூரத்திலிருந்த ஒரு பிரதேசத்திற்கு அவர் நாடுகடத்தப்பட்டார். அந்தப் பிரதேசத்துக்கும் அம் மக்களுக்கும் அவரொரு புதியவராக இருந்தார். சிறையிலிருந்தபோது அவரது மனைவியால் அவர் விவாகரத்து செய்யப்பட்டிருந்தார். அவரது எல்லா எதிர்பார்ப்புக்களும் சிதறுண்டு போயிருந்தன. வாழ்க்கையைக் கொண்டுசெல்லப் போதுமான பணம் கூட…

இடாலோ கால்வினோ கதைகள்

செய்யச்செய்தல் எல்லாவற்றுக்கும் தடைவிதிக்கப்பட்ட நகரம் ஒன்று இருந்தது. இப்போது, அங்கே தடை செய்யப்படாதது கிட்டிப்புள் விளையாட்டு மட்டுமே என்பதால், மக்கள் அந்நகரத்தின் பின்னாலிருந்த புல்வெளியில் ஒன்றுகூடி, கிட்டிப்புள் விளையாடி நாளைக் கழித்தனர்.

நீயின்றி அமையாது உலகு

அந்தப் பெண்ணை நினைவில் வைத்துக்கொள்ள அவளின் முகமோ அவளின் பெயரோ என்னிடம் இல்லை. காலியாய் கிடக்கும் வீடொன்றே போதுமானதாக இருந்தது. உண்மையில் எனக்கும் பெண்களுக்குமான மனத்தொடர்பும் அவர்கள் மீதான ஈர்ப்பும் ஏற்பட அந்த பெண் காரணமாக இருக்கலாம். இத்தனைக்கும் அவள் குறித்து நான் அறிந்தது உண்மைதானா என்கிற சந்தேகம் கொள்ளக்கூடிய வயதெல்லாம் அப்போது இல்லை. இன்றும்…

தி சர்க்கிள்: மனக் காடுகளும் மதக் கோடுகளும்

கிடக்கும் காடுகளைப் போல் மனிதனின் மனங்களுக்குள் அடர்ந்து கிடக்கும்  ஆசைகளும் கனவுகளும் மதக் கோடுகளால்  எல்லைப்படுத்தப்படும்  போது அதனால் விளையும் எதிர்வினைகள்  மதக் குற்றங்களாக விசாரணைக்குள் கைதாகிறது. இந்த மனக்காடுகளைச் சுமந்து கொண்டு சமூகத்தில் நடமாடும் மனிதனின் உணர்வுகள் மதக் கோடுகளால் பரிசீலனை செய்யப்படுகிறது. பெரும்பாலும் மதத்தின் பேரில் பெண்களின் மேல் பாய்ச்சப்படும் பரிசீலனைகள் ஆண்…