
கடந்த 17.9.2017 (ஞாயிறு) கிராண்ட் பசிப்பிக் தங்கும் விடுதியில் வல்லினம் குழுவினரின் வருடாந்திர நிகழ்ச்சியான கலை இலக்கிய விழா ஒன்பதாவது ஆண்டாக நடைபெற்றது. சரியாகப் பிற்பகல் 2.00க்குத் தொடங்கிய இந்த நிகழ்ச்சியில் 280க்கும் மேற்பட்ட இலக்கிய ஆர்வலர்கள் பங்கேற்றனர். இந்நிகழ்ச்சிக்கென தமிழகத்திலிருந்து சிறப்பு வருகை புரிந்த எழுத்தாளர் கோணங்கியுடன் சிங்கையிலிருந்தும் பல இலக்கிய ஆர்வலர்கள் பங்கேற்றனர்.…